ரூ 2 லட்சத்திற்கு கொரோனா தடுப்பூசி வாங்கி கொடுக்க மன்சூர் அலிகானுக்கு கோர்ட் உத்தரவு

mansoor ali khan (2)தமிழக அரசு மருத்துவமனையில் ஏப்ரல் 15 கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் நடிகர் விவேக்.

ஏப்ரல் 16ம் தேதி அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதற்கு அடுத்த நாள் ஏப்ரல் 17ல் மரணமடைந்தார்.

விவேக் மருத்துவமனையில் இருந்தபோதே நடிகர் மன்சூர் அலிகான், தடுப்பூசி குறித்து பேசினார். விவேக் மாரடைப்புக்கு அதுவே காரணம் என கூறினார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, கோடம்பாக்கம் மண்டல மருத்துவ அதிகாரி பூபேஷ், நடிகர் மன்சூர் அலிகான் மீது போலீசில் புகார் அளித்தார்.

எனவே, மன்சூர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவானது.

பின்னர், முன்ஜாமீன் கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்தார்.

இதனையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி தண்டபாணி, மன்சூர் அலிகானுக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் கொடுத்தார்.

இத்துடன் மேலும், அபராதமாக சுகாதாரத் துறைச் செயலாளர் பெயரில் ரூ.2 லட்சத்திற்கு டிமாண்ட் டிராப் எடுத்து, கொரோனா தடுப்பூசி வாங்க நிதியாக வழங்க வேண்டும்.

கொரோனா தடுப்பூசி குறித்து எவ்வித வதந்தியும் பரப்பக்கூடாது, பதற்றத்தை உருவாக்க கூடாது என்றும் நிபந்தனை உத்தரவையும் பிறப்பித்தார் நீதிபதி.

High court orders actor Mansoor Ali Khan to pay Rs 2 lakh for Covishield procurement

Overall Rating : Not available

Latest Post