தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒரு தனியார் டிவி பேட்டியில் ஒரு உதாரணம் பற்றி கூறும்போது, மகாபாரதம் பற்றி பேசியிருந்தார் கமல்ஹாசன்.
பெண்களை ஆதிக்கம் செலுத்தும் மனப்பான்மையில் நாம் வாழ்ந்து வருகிறோம் என்றும், மகாபாரதத்தின் சூதாட்ட படலத்தை விட்டே நாம் வரவில்லை என்றும் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.
இது மகாபாரதத்தை இழிவு படுத்துவதாகக் கூறி மனுத்தாக்கல்
இது தொடர்பான வழக்கு வள்ளியூர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது.
எனவே, கமல் நேரில் ஆஜராக வேண்டும் என நெல்லை மாவட்டம் வள்ளியூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் வழக்கை தள்ளுபடி செய்யக்கோரியும் வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்கக் கோரியும் நடிகர் கமல்ஹாசன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், கமல்ஹாசனுக்கு எதிரான வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடைவிதித்ததுடன் அவர் நேரில் ஆஜராகத் தேவையில்லை என்றும் உத்தரவிட்டுள்ளது.