200 வெப்சைட் முடக்கம்… கபாலி வழக்கில் தீர்ப்பு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விண்னைத் தாண்டும் எதிர்பார்ப்பில் உள்ளது ரஜினியின் கபாலி படம்.

அடுத்த வாரம் ஜூலை 22ஆம் தேதி பிரமாண்டமாக வரவுள்ளது.

முதல் நாள் முதல் காட்சி பார்த்து விட கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இதுபோல் திருட்டு விசிடி எடுப்பவர்களும் படத்தை திருடி முதல் நாளே வெளியிட காத்திருக்கின்றனர்.

எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் தாணு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதை தொடர்ந்து இது தொடர்பான 200க்கும் மேற்பட்ட இணைய தளங்களை உடனடியாக முடக்க வேண்டும் என கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

மீண்டும் வாலி ஸ்டைலில் கலக்கும் அஜித்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களை அஜித் கடந்திருந்தாலும் அவராலும் அவரது ரசிகர்களாலும் மறக்க முடியாத படம் வாலி.

அப்படத்தில் ஹீரோ வில்லன் என இரு மாறுப்பட்ட நடிப்பை கொடுத்திருப்பார்.

இந்நிலையில் தற்போது நடிக்கவுள்ள தல 57 படத்திலும் அதே போன்று ஹீரோ மற்றும் வில்லன் என இருமுகம் காட்டப் போகிறாராம்.

இதனையறிந்த ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

தனுஷுக்கு வில்லனாக மாறிய விஜய்சேதுபதி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆடுகளம், பொல்லாதவன் படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தில் நடிக்கிறார் தனுஷ்.

இதில் நாயகியாக நடிக்கவிருந்த சமந்தா விலகியதை அடுத்து அமலாபால் நடிப்பதாக கூறப்படுகிறது.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ள இப்படம் 3 பாகமாக உருவாகிறது.

முதல் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இதில் தனுஷ்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடிக்கவிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

விக்ரம்-நயன்தாரா ரசிகர்களுக்கு நாளை ‘இருமுகன்’ விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயினாக பத்து வருடங்களுக்கு மேலாக வலம் வந்தாலும் விக்ரமுடன் நடிக்காமல் இருந்தார் நயன்தாரா.

தற்போது இவர்கள் இருவரும் இருமுகன் படத்திற்காக இணைந்துள்ளதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

ஆனந்த் சங்கர் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஹலீனா என்ற பாடலின் டீசர் நாளை (ஜீலை 16) மாலை 7 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதனை நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

‘கயல்’ சந்திரன்-பார்த்திபன் நடிக்கும் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நானும் ரௌடிதான் படத்தை தொடர்ந்து, மீண்டும் பார்த்திபன் வில்லனாக புதிய படத்தில் நடிக்கிறார்.

அறிமுக இயக்குநர் சாய் சுதர்சன் இப்படத்தை இயக்குகிறார் என்பதை முன்பே தெரிவித்திருந்தோம்.

இப்படத்திற்கு ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ என பெயரிட்டுள்ளனர்.

கயல் சந்திரன் மற்றும் பிச்சைக்காரன் புகழ் சட்னா டைட்டஸ் இருவரும் ஜோடியாக நடிக்கின்றனர்.

ஐடி துறையில் வேலை செய்யும் சந்திரனின் சித்தப்பாவாக நடிக்கிறார் பார்த்திபன்.
.
இதன் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.

இதில் நாசர், சாம்ஸ், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ரகு இப்படத்தை தயாரிக்கிறார்.

சொல்லி அடிக்கும் சிவகார்த்திகேயன்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பெண் வேடம் இட்டு நடித்துள்ள படம் ‘ரெமோ’.

இதில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, ஸ்ரீதிவ்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். 24 ஏஎம் ஸ்டூடியோஸ் சார்பாக ஆர் டி ராஜா பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

இந்நிலையில், 2016 அக்டோபர் 7ஆம் தேதி ‘ரெமோ’ ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.

அக்டோபர் 7ஆம் தேதி நவராத்திரி விடுமுறை தினங்கள் என்பதால் அதை கணக்கில் கொண்டு அந்த நாளை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சமீபகாலமாக படங்கள் வெளியீட்டு தேதியை அறிவிக்காமல் பலரும் உள்ள நிலையில் சிவகார்த்திகேயன் தன் படத்தின் ரிலீஸ் தேதியை இரண்டு மாதங்களுக்கு முன்பே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows