நடிகர் சங்க தேர்தல் ரத்து; கோர்ட் தீர்ப்பால் நாசர் டென்ஷன்; ஐசரி ஹாப்பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மைக்காலமாக தமிழக அரசியல் தேர்தல் அளவுக்கு தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலும் களைக்கட்டி வருகிறது.

பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது.

கடந்த 2019 ஆண்டு ஜூன் 23ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது.

ஆனால் இதற்கு முன்பே சில உறுப்பினர்கள் அளித்த புகாரின் பேரில் ஜூன் 19ஆம் தேதி தேர்தலை நிறுத்து வைத்து உத்தரவிட்டார் மாவட்ட பதிவாளர்.

இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் தேர்தலை மட்டும் நடத்த அனுமதி அளித்தது. ஆனால், வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் அடிப்படையில் தான் 2019 ஜூன் 23ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

மேலும் நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தைக் கவனிக்க பதிவுத் துறை உதவி ஐஜி கீதாவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

மேலும் பெஞ்சமின், ஏழுமலை ஆகியோர் நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தலில் எங்களை வாக்களிக்க அனுமதிக்கவில்லை.

வெளியூர்களில் இருக்கும் உறுப்பினர்கள் தபால் மூலம் வாக்களிப்பதற்கான படிவம் கொடுக்கப்படவில்லை எனவே இத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் அனைத்து வழக்குகளையும் விசாரித்த நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

அதில், “கடந்த ஆண்டு ஜூன் 23-ம் தேதி நடத்தப்பட்ட தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. 3 மாதத்துக்குள் வாக்காளர் பட்டியல் தயாரித்து தேர்தலை நடத்த வேண்டும்.

இத்தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நியமிக்கப்படுகிறார். மறுதேர்தல் நடத்தி முடிக்கும் வரை நடிகர் சங்க நிர்வாகத்தை அரசு நியமித்த சிறப்பு அதிகாரியான கீதா நிர்வகிப்பார்” என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை ஐசரி கணேஷ், பாக்யராஜ் உள்ளிட்ட சங்கரதாஸ் சுவாமிகள் அணியினர் வரவேற்றுள்ளனர்.

ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய நாசர், விஷால் அணியினர் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி வரும் திங்கள் கிழமை மேல்முறையீடு செய்யப்படும் என்றும் அவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

High Court judgement on Nadigar Sangam election

மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் இமயம் பாரதிராஜா எழுதி, நடித்து, தயாரித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இப்படம் எத்தனை பெரிய சோதனைகள் வந்தாலும், அவற்றை நேர்மறையாக எதிர்கொண்டு, போராடி, வெற்றிபெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு தன்முனைப்புத் திரைப்படமாகவும், சுயமனித ஒருமைப்பாட்டை அழுத்தமாக பதிவு செய்யும் ஒரு கதைகளத்தை கருவாக கொண்டதாகவும் அமைகிறது.
அயல்நாட்டில் ஒரு வயோதிக ஆணும், ஒரு இளம் பெண்ணும், தத்தமது உறவுகளால், உறவில் ஏற்பட்ட சிக்கல்களால் பாதிக்கப்படும் போது, அதனை எவ்வாறு எதிர்கொண்டு, போராடி, வெற்றிக் கொள்கிறார்கள் என்பதை ஆழ்ந்த சிந்தனையுடன் உணர்வுப்பூர்வமாக தமக்கே உரிய தனித்துவமான விதத்தில் படைத்திருக்கிறார் இயக்குனர் பாரதிராஜா.

இயக்குனர் பாரதிராஜாவுக்கு இணையாக ராசி நக்ஷத்ரா இடம் பெற, முக்கிய வேடத்தில் மௌனிகா பாலுமஹேந்திரா மற்றும் ஜோ மல்லூரி நடிக்கிறார்கள். சாலை சகாதேவன் ஒளிப்பதிவு செய்ய, கேஎம்கே பழனிவேல் படத்தொகுப்பு பொறுப்புகளை கவனிக்க, மதன் கார்கி வசனம் எழுதியிருக்கிறார்.

கலை இயக்கத்திற்கு மோகனமகேந்திரன் பொறுப்பேற்க, நடனத்திற்கு கூல் ஜெயந்த், பிரசன்னா, ஷண்முகசுந்தர் ஆகியோர் பங்களிக்க, கம்பம் சங்கர் வடிவமைப்பு பணிகளை செய்திருக்கிறார்.

சபேஷ் – முரளி பின்னணி இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து, மதன் கார்கி, நா முத்துக்குமார், கபிலன் வைரமுத்து, அகத்தியன் ஆகியோர் பாடல்களை எழுத, என் ஆர் ரகுநந்தன் பாடல்களை படைத்திருக்கிறார்.

மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் இமயம் பாரதிராஜா எழுதி, நடித்து, இயக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ வரும் பிப்ரவரி மாதம் 21ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.

BREAKING ரஜினிக்கு எதிரான மனுக்கள் வாபஸ்; திராவிடர் விடுதலை கழகம் பல்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

துக்ளக் 50 ஆண்டு விழாவில் பெரியார் பற்றி ரஜினி பேசியது சர்ச்சையானது.

எனவே அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் கட்சிகள் வலியுறுத்தின.

மேலும் பெரியார் பற்றி அவதூறான கருத்துக்களை ரஜினி பேசியதாகவும், அவர் மீது நவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடவும் கோர்ட் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த மனு ஐகோர்ட்டில் நீதிபதி ராஜமாணிக்கம் அமர்வு முன்று இன்று விசாரணைக்கு வந்தது. புகார் கொடுத்த 15 நாட்கள் முடிவதற்குள் முன்னதாகவே நீதிமன்றத்தை அணுகியது ஏன்..? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

புகார் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு கால அவகாசம் வழங்கிய பின் மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தை தான் மனுதாரர்கள் அணுகி இருக்க வேண்டும் என்று நீதிபதி ராஜமாணிக்கம் கூறினார்.

இந்த மனுக்கள் விசாரணைக்கு பட்டியலிடபட்டதே தவறு என்று கூறினர். இதனை அடுத்து, மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது.

இதனை தொடர்ந்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ரஜினியின் ‘தலைவர் 168’ படத்திற்கு தர லோக்கலாக தலைப்பிடும் சிவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் படம் வெளியாகி கடந்த 2 வாரங்களாக உலகமெங்கும் வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

அனைத்து தரப்பு மக்கள் ஆதரவுடன் வசூல் வேட்டையாடி வருகிறது.

தற்போது சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடித்து வருகிறார் ரஜினி.

இந்த படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 168 என்று தலைப்பிட்டுள்ளனர்.

இந்த படத்தில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

மற்றொரு முக்கிய கேரக்டரில் சித்தார்த் நடிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் பட நிறுவனம் இதை உறுதிப்படுத்தவில்லை.

இமான் இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் இந்த படத்திற்கு ‘அண்ணாத்த’ என்று தலைப்பிடலாம் என ஒரு தகவல் உலா வருகிறது.

கமல் 3 வேடங்களில் நடித்த ’அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் ’அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ’ என்ற பாடல் இப்போது உங்களுக்கு நினைவுக்கு வந்துருக்குமே…

சன் பிக்சர்ஸ் தலைவர் 168 படத்தலைப்பை அறிவிக்கும் வரை இந்த பாடலை கேட்டுக் கொண்டிருப்போம்… என்ன சரிதானே…

இதனிடையில் ‘மன்னவன்’ என்ற தலைப்பில் ரசிகர் ஒருவர் செய்த போஸ்டர் டிசைன் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

Rajinis Thalaivar 168 movie titled Annathae

25 கிலோ எடையை குறைக்கும் டாப் ஸ்டார்,; பிரமிக்க வைக்கும் பிரசாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆயுஷ்மன் குரானா, தபு ஆகியோர் நடித்திருந்த ‘அந்தாதுன்’ என்ற ஹிந்தி படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

இந்த படம் சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த திரைக்கதை உள்ளிட்ட 3 தேசிய விருதுகளையும் வென்றது.

இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமைக்கு பலத்த போட்டி உருவான நிலையில் இதன் உரிமையை டாப் ஸ்டார் பிரசாந்த் கைப்பற்றினார்.

அந்தாதுன் ரீமேக்கில் நடிக்கும் பிரசாந்த்

இவரின் தந்தையும் நடிகருமான தியாகராஜன் அந்த ரீமேக் உரிமையை பெரும் தொகை கொடுத்து வாங்கியிருக்கிறாராம்.

இந்த படத்தை தமிழில் மோகன் ராஜா இயக்கவுள்ளார் என்பதை நம் தளத்தில் சில தினங்களுக்கு முன் பதிவிட்டு இருந்தோம்.

விரைவில் இதன் சூட்டிங் தொடங்கவுள்ளது.

மீண்டும் மீண்டும் அழகிகளுடன் ஜோடி போடும் பிரசாந்த்

இந்த நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் பிரசாந்த் தன் உடல் எடையை 25 கிலோ குறைத்து வருகிறாராம்.

விரைவில் படக்குழுவினர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

ஆக.. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வரும்போது பிரமிக்க வைப்பார் பிரசாந்த் என நம்பலாம்.

பிரகாசிக்கும் பிரசாந்த்… ஜானி விமர்சனம்

Actor Prashanth lost his weight for Mohan raja movie

ரஜினி பட வழக்கில் உண்மை வென்றது..; ‘லிங்கா’ தயாரிப்பாளர் ஹாப்பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முத்து, படையப்பா ஆகிய படங்களை அடுத்து லிங்கா படத்தில் ரஜினி மற்றும் கேஎஸ் ரவிக்குமார் இணைந்திருந்தனர்.

இந்த படம் கடந்த 2014ல் ரஜினி பிறந்தநாளில் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்திருந்த இந்த படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்திருந்தார்.

இப்பட கதை தன்னுடையது என்று மதுரையை சேர்ந்த ரவிரத்தினம் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கு 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து லிங்கா பட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் கூறியதாவது:

“இயக்குநர் ரவிரத்தினம் தொடுத்த வழக்கை ரத்துசெய்யக்கோரி, ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்திருந்தேன்.

மதுரை கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் ‘லிங்கா’ கதை உரிமம் தொடர்பான வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்றது.

ரூ.10 கோடி காப்புத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்திவிட்டு லிங்கா திரைப்படத்தை வெளியிடலாம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அப்போது உத்தரவிட்டது.

தற்போது கோர்ட் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வெளியாகியுள்ளது .

ரஜினி சார் படம் வெளியாகும் போது இப்படி பிரச்சினைகள் வரும்.

ஆனால் எங்கள் படத்தில் இடம் பெறும் “உண்மை ஒருநாள் வெல்லும்.. இந்த உலகம் உன் பேர் சொல்லும்” பாடலை போல் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது என்பது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது’ என ராக்லைன் வெங்கடேஷ் கூறியுள்ளார்.

Rockline Venkatesh is happy with Judgement in Linga Story case

More Articles
Follows