அஜித்தின் விஸ்வாசம் ரிலீசில் சிக்கல்; கடைசியில் நடந்தது என்ன.?

High court cleared the last minute release issue for Viswasam movieசத்யஜோதி தயாரிப்பில் சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் நாளை ஜனவரி 10ஆம் தேதி வெளியாகிறது.

இப்படத்தின் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதிகளின் உரிமையை விநியோகஸ்தர் சாய்பாபா பெற்றிருந்தார்.
இவர் பைனான்சியர் உமாபதிக்கு ரூ.78 லட்சம் கடன் தர வேண்டி இருந்ததாம்.

அந்த தொகையை திருப்பி தரும் வரை விஸ்வாசம் படத்தை திரையிட அனுமதி கூடாது என உமாபதி வழக்கு தொடர்ந்தார்.

எனவே இந்த வழக்கின் படி இந்த மூன்று ஏரியாக்களிலும் படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டது.

இதை நீக்க கோரி சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் முறையிடப்பட்டது.

அப்போது, ரூ.35 லட்சம் ரூபாயை இன்றே வழங்குவதாகவும், மீதம் உள்ள தொகையை 4 வாரத்திற்குள் வழங்க உத்தரவாதம் அளிப்பதாகவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.

இதை மனுவாக தாக்கல் செய்தால் பிற்பகலில் வழக்கை எடுத்து கொள்வதாக நீதிபதி சுந்தர் அறிவித்தார்.
இந்த வழக்கு பிற்பகலில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

அப்போது, ரூ.35 லட்சம் தொகைக்கு விநியோகஸ்தர் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இந்த உத்தரவையடுத்து விஸ்வாசம் நாளை அனைத்து ஏரியாக்களிலும் ரிலீஸாகிறது.

High court cleared the last minute release issue for Viswasam movie

Overall Rating : Not available

Related News

பொங்கல் திருநாளும் அன்றைய தினத்தில் ரிலீசாகும்…
...Read More
2019 பொங்கலை முன்னிட்டு வெளியான படம்…
...Read More
அண்மைக்காலமாக அஜித் நடித்த வீரம், வேதாளம்,…
...Read More

Latest Post