ஹீரோக்கள் சொந்தமாக கேரவன் வைத்துக் கொள்ளனும்..; மரிஜுவானா இசை விழாவில் கே. ராஜன் பேச்சு

ஹீரோக்கள் சொந்தமாக கேரவன் வைத்துக் கொள்ளனும்..; மரிஜுவானா இசை விழாவில் கே. ராஜன் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Heros must have own caravan says K Rajan at Marijuana audio launch3rd Eye கிரியேஷன்ஸ் சார்பில் எம்.டி.விஜய் தயாரிப்பில், எம்.டி.ஆனந்த் இயக்கி ‘அட்டு’ நாயகன் ரிஷி ரித்விக், நாயகி ஆஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘மரிஜுவானா’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர்கள் பேசியதாவது:

தயாரிப்பாளர் எம்.டி.விஜய் பேசும்போது,

‘மரிஜுவானா’ என்ற இந்த படத்தின் பெயரைக் கூறியதும் அப்படி என்றால் என்ன என்று கேட்டார்கள். இது கஞ்சா என்பதன் அறிவியல் பெயர் தான் ‘மரிஜுவானா:.

கஞ்சா போன்ற போதை பொருட்களைப் பயன்படுத்துவதால் பள்ளி குழந்தைகளும், இளைஞர்களும் எந்தளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை இப்படத்தில் கூறியிருக்கிறோம்.

இப்படத்தின் கதையை பல முன்னணி நாயகர்களிடம் கூறினோம். ஆனால், ரிஷி மட்டும் தான் ஒப்புக்கொண்டார் என்றார்.

நாயகன் ரிஷி ரித்விக் பேசும்போது,

இப்படத்தின் கதையைக் கேட்டதும் சமுதாயத்திற்கு சிறந்த கருத்தைக் கூறும் படமாக இருந்தது. ஆகையால், எனக்கு சம்பளம் வேண்டாம் நான் நடிக்கிறேன் என்று கூறினேன் என்றார்.

தமிழ்த்தாய் கலைக்கூடம் ராஜலிங்கம் பேசும்போது,

இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இச்சமுதாயத்தில் இளைஞர்கள் எப்படி சீரழிகிறார்கள் என்பதை கூறும் படம் இது. 40 வயதில் இருக்கும் பெற்றோர்கள் நிச்சயம் பார்க்க வேண்டும்.

இசையமைப்பாளர் கார்த்திக் குரு பேசும்போது,

இசைத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு தான் சினிமா துறைக்கே வந்தேன். ஆனால், போதிய வாய்ப்பு கிடைக்காததால், இசையை விட்டு வேறு துறைக்கு செல்லலாம் என்ற முடிவில் இருந்தேன். எம்.டி.விஜய் மற்றும் எம்.டி.ஆனந்த் இருவரும் மீண்டும் இசை துறைக்கு அழைத்து வந்து விட்டார்கள்.

இப்படத்தில் எம்.டி.விஜயும் எம்.டி.ஆனந்தும் முழு சுதந்திரம் கொடுத்து ஒத்துழைப்பு கொடுத்தார்கள். ஆகையால் தான் என்னால் சிறப்பாக இசையமைக்க முடிந்தது என்றார்.

இப்படத்தில் ஒரு பாடலை இசையமைப்பாளர் தேவா பாடிக் கொடுத்தார். அவருக்கு நன்றி. இந்த படத்தின் பாடல்கள் நன்றாக வருவதற்கு பின்னணி பாடகர்கள் தான் காரணம் என்றார்.

கதாநாயகி ஆஷா பேசும்போது,

இயக்குநர் மிகவும் வித்தியாசமானவர். எங்களை எங்கள் போக்குக்கு நடிக்க விட்டுவிட்டு, தவறு இருக்குமிடத்தில் மட்டும் சரி செய்வார். ஒவ்வொரு காட்சியில் நடிக்கும்போதும் ரிஷி பயப்படாதீர்கள் என்று கூறிக் கொண்டிருப்பார் என்றார்.

சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணன் பேசும்போது,

நல்ல கருத்தைக் கூறும் படம் ‘மரிஜுவானா’. இப்படத்திற்காக அனைவரும் நன்றாக உழைத்திருக்கிறார்கள். இப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் என்றார்.

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது,

மம்முட்டி போல் அனைவரும் அவரவர் செலவில் கேரவன் வைத்துக்கொள்ள வேண்டும்.

தயாரிப்பாளருக்கு வரும் வருமானத்தில் 10% வரி கட்ட வேண்டும். விநியோகஸ்தர்களும் 10% வரி கட்ட வேண்டும் என்ற மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும், மாநில அரசு வைத்திருக்கும் 8% வரியை நீக்க சொல்லி கோரிக்கை வைக்கவிருக்கிறோம். மத்திய அரசு சினிமா துறையை நசுக்குகிறது. இது தொடர்ந்தால், நாங்கள் போராட்டத்தில் இறங்குவோம்.

ரிஷி ரித்விக்கைப் பார்க்கும் போது தமிழ் படத்திற்கு அர்னால்டு கிடைத்திருக்கிறார் என்று தோன்றுகிறது. இப்படத்தில் சமுதாயத்திற்கு நல்ல கருத்தைக் கூறியிருக்கிறார்கள். அதைப் பார்த்து போதை பொருட்களுக்கு பாதிக்கபட்டவர்கள் திருந்த வேண்டும் என்றார்.

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது,

வரி கட்டுவதற்காக போராட்டம் செய்ய வேண்டிய அவசியமில்லை. முறையான விளக்கத்தோடு அரசாங்கத்தை அணுகினாலே போதுமானது என்று தயாரிப்பாளர் கே ராஜன் கூறியதற்கு இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பதிலளித்தார்.

மேலும், பெற்றோர்களுக்கும் இளைஞர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்தப் படம் அமைந்திருக்கிறது. இப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் என்றார்.

இயக்குநர் மிஷ்கின் பேசும்போது,

ஆர்.கே.செல்வமணியும் பாக்யராஜும் எனக்கு மிகப்பெரிய தூண்டுதலாக இருந்தவர்கள். அதேபோல், நீங்கள் தான் எனக்கு தூண்டுதலாக இருக்கிறீர்கள் என்று எம்.டி.ஆனந்த் கூறினார். ஆகையால் தான் இந்த விழாவிற்கு வர சம்மதம் தெரிவித்தேன். இந்த விழாவைப் பார்க்கும் போது வெற்றி விழாவாகத் தோன்றுகிறது.

மேலும், இது போன்ற நல்ல கருத்தை கூறும் குறைந்த பொருட்செலவில் எடுக்கும் படங்கள் வெற்றிபெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.

இயக்குநர் பாக்யராஜ் பேசும்போது,

இந்த படத்தின் பெயருக்கு அர்த்தம் கேட்ட போது, கஞ்சா என்று கூறினார்கள். 45 வருடங்களுக்கு முன்பு நண்பர்களுடன் சேர்ந்து நானும் கஞ்சா அடித்திருக்கிறேன். ஒரு முறை போதையில் என் நண்பன் தன்னிலையறியாமல் இருப்பதைப் பார்த்தேன். இப்படி இருந்தால் வாழ்வில் எதையும் சாதிக்க முடியாது என்று அன்று முதல் கஞ்சா அடிக்கும் பழக்கத்தைக் கைவிட்டேன். இப்படம் கஞ்சா உபயோகிப்பதன் பாதிப்பை கூறுவதால் இளைஞர்களுக்கு விழிப்புணர்வாக அமையும் என்றார்.

சாய் தீனா பேசும்போது,

வடசென்னையில் இருக்கும் ஜிம் பாய் பசங்களுக்கு நீண்ட நாள் போராடியும் அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தது. அதைப் பெற்று கொடுத்தவர் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி. அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளை கூறியிருக்கும் இப்படம் நிச்சயம் வெற்றியடைய வேண்டும் என்றார்.

‘ஜாகுவார்’ தங்கம் பேசும்போது,

இப்படம் மூலம் இயக்குனரும், தயாரிப்பாளரும் சமுதாயத்திற்கு நல்ல கருத்தை கூறி இருக்கிறார்கள். நாயகன் ரிஷி ரித்விக் தரமான கதையை தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார். நாயகி ஆஷா தமிழ் பெண் என்பதில் பெருமகிழ்ச்சி. இவர் போல துணிச்சலான தமிழ் பெண்கள் சினிமா துறைக்கு வரவேண்டும். இப்படத்தை வாழ்த்த இவ்வளவு கூட்டம் வந்திருக்கிறது. இந்த அரங்கமே வெற்றி விழா போல காட்சி அளிக்கிறது என்றார்.

இயக்குநர் எம்.டி.ஆனந்த் பேசும்போது,

இது எனக்கு முதல் மேடை. அதுவும் பெரிய மேடை. நான் இங்கு நிற்பதற்கு காரணம் என் அம்மா.

அதிக அளவு போதை ஒரு மனிதனின் வாழ்வை எப்படி பாதிக்கிறது என்பதை தான் இப்படத்தில் கூறியிருக்கிறேன்.

மேலும், தணிக்கைக் குழுவினர் ‘ஏ’ சான்றிதழ் குடுத்திருக்கிறார்கள். ஆனால், இது விழிப்புணர்வு படம் மட்டுமே.

கார்த்திக் குரு இசையில் அனைத்து பாடல்களும் நன்றாக வந்திருக்கிறது.

‘அட்டு’ படத்தைப் பார்த்து இது மாதிரி ஒரு படம் எடுக்க வேண்டும் என்று என் தம்பியிடம் கூறினேன். ஆனால், ‘அட்டு’ நாயகன் ரிஷி ரித்விக்கை வைத்து படம் இயக்கியத்தில் மகிழ்ச்சி.

நாயகி ஆஷா எல்லா விதமான காட்சிகளிலும் தைரியமாக நடிக்க கூடியவர் என்றார்.

இயக்குனர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது,

என்னை இந்த விழாவிற்கு அழைத்து போது இவ்வளவு பெரிய அரங்கத்தில் குறைந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்திற்கு என்ன கூட்டம் வந்து விட போகிறது என்று நினைத்தேன். ஆனால் அரங்கம் நிறைந்துவிட்டது. திரைப்படம் மூலம் சமுதாயத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நினைத்த இந்த படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள் என்றார்.

நிகழ்ச்சியின் இறுதியாக, ‘மரிஜுவானா’ படத்தின் இசை தகடு வெளியிடப்பட்டது

Production : “Third Eye Creation”
Producer : M.D. Vijay
Movie Name : MARIJUANA
Director : M.D. Anand
Hero : “Attu” Rishi Rithvik
Heroine : Asha Parthalom
Artist : Power Star , Gana Harish , Madurai Joseph , Janani
Music Director : Karthik Guru
Choreography : “5th Element” Pravin
Dop : Bala Rosiah
Singers : “Thenisai Thendral” Deva, Ananthu , Manu Vardhan , Shobika Murugesan , Smurthi Sridher .
Stunt : Saran
PRO : Priya
Editor : M.D.Vijay
Production Executive : Eazlumala

Heros must have own caravan says K Rajan at Marijuana audio launch

Marijuana audio launch

பிரபுதேவா, ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி இணையும் படம் “பஹிரா” !

பிரபுதேவா, ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி இணையும் படம் “பஹிரா” !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bhagheeraஇயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் பிரபுதேவாவை நாயகனாக கொண்டு இயக்கியுள்ள படத்திற்கு “பஹிரா” என தலைப்பிடப்பட்டுள்ளது. தலைப்பே நம்மை உள்ளிழுக்கும் அம்சமாக இருக்கும் அதே நேரம், பல கேள்விகளையும் எழுப்புகிறது. படம் எதைப்பற்றியது என ஆவலைத் தூண்டும்படி தலைப்பு அமைந்துள்ளது.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தலைப்பு பற்றி கூறும்போது…

இத்தலைப்பு பிரபல காமிக் கதையில் வரும் கதாப்பாத்திரத்தின் பெயர் ஆகும். “தி ஜங்கிள் புக்” காமிக் கதையில் வரும் ஒரு கருஞ்சிறுத்தையின் பெயர் தான் பஹிரா. அந்தக்கதையில் வரும் நாயகன் பாத்திரமான மோக்ளியை பாடுபட்டு காப்பாற்றும் கருஞ்சிறுத்தையின் பெயர் தான் பஹிரா. இப்படத்தில் பிரபுதேவா சாரின் கதாப்பாத்திரம் இந்த குணநலன்களை கொண்டதாக இருக்கும். பாதுகாப்பு அரணாக, காப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய கதாப்பாத்திரம் அவருடையது, அதனால் தான் இந்தப்பெயரை வைத்தோம். இத்தருணத்தில் நடிகர் தனுஷுற்கு எங்கள் படத்தின் தலைப்பை பெருமையுடன் வெளியிட்டதற்கு பெரும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன். “பஹிரா” படம் சைக்கோ திரில்லர் கலந்த மர்ம வகை படமாகும். அதனுள் பல ஆச்சர்யங்களும் பல திருப்பங்களும் கொண்டிருக்கும்.

இப்படம் சைக்கோ திரில்லர் வகை என்றால் தொடர் கொலைகள் படத்தின் கதையில் இடம்பெறுமா என வினவியபோது…

இப்போதைக்கு எதைப்பற்றியுமே சொல்ல முடியாது. ஆனால் இந்த வகை படங்களிலிருந்து முழுக்க மாறுபட்ட ஒரு புதிய அனுபவத்தை இந்தப்படம் உங்களுக்கு தரும். இதுவரையில் இல்லாத பல புதுமைகளை இப்படத்தில் கையாள உள்ளோம். படத்தை பற்றி சொல்லி அதன் சுவராஸ்யங்களை குறைக்க விரும்பவில்லை அதை நீங்களே படத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். ஒன்று மட்டும் உறுதி இப்படத்தில் பிரபுதேவா சாரை நீங்கள் இதுவரை பார்த்திராத புதிய அவதாரத்தில், புத்தம் புது கோணத்தில் காண்பீர்கள் என்றார்.

R.V. பரதன் B.A,B.L மற்றும் S.V.R.ரவி சங்கர் ஆகிய இருவரும் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். அனேகன் படப்புகழ் அமீரா தஸ்தர் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. படத்தில் நடித்துள்ள மற்ற நடிகைகள் பற்றி மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவிக்கவுள்ளது.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

எழுத்து, இயக்கம்- ஆதிக் ரவிச்சந்திரன்

இசை – கணேசன் சேகர்

ஒளிப்பதிவு – அபிநந்தன் ராமனுஜம்

படத்தொகுப்பு – ரூபன்

கலை இயக்கம் – ஷிவ யாதவ்

சண்டைப்பயிற்சி – ராஜசேகர், அன்பறிவு

நடனம் – “பாபா” பாஸ்கர்

பாடல்கள் – பா.விஜய்

உடை வடிவமைப்பு – NJ.சத்யா

மேக்கப் – குப்புசாமி

புகைப்படம் – சாரதி

விஷுவல் எஃபெக்ட்ஸ் – ஹரிஹர சுதன்

தயாரிப்பு ஒருங்கிணைப்பு – P.பாண்டியன்

டிசைன்ஸ் – D stage

டைட்டில் டிசைன் – சிவக்குமார்

தயாரிப்பு – R.V. பரதன் B.A,B.L மற்றும் S.V.R.ரவி சங்கர்

மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, D one

‘சுனில் ஜெயின்’ மீது கமிஷனர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் ராஜராஜன் மோசடி புகார்..!

‘சுனில் ஜெயின்’ மீது கமிஷனர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் ராஜராஜன் மோசடி புகார்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer Raja Rajanதிரைப்பட தயாரிப்பாளர்களின் அப்பாவித் தனத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தன்னுடைய பினாமி சுரபி மோகன் என்பவர் மூலம், பல திரைப்படங்களின் இந்தி டப்பிங் உரிமையை வலுக்கட்டாயமாக அபகரித்து, ஏமாற்றி வந்த சுனில் ஜெயின் மீதும், சுரபி மோகன் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி ‘வா டீல்’, ‘காவியன்’, ‘ஐங்கரன்’, ‘1945’ ஆகிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

மேலும் கமிஷனர் அலுவலகத்தில் ‘1945’ தயாரிப்பாளர் ராஜராஜன் சுனில் ஜெயின் மீது மோசடி சட்டத்தின் கீழ் நடவடிக்கை கோரி புகார் மனு கொடுத்துள்ளார்.

மற்ற தயாரிப்பாளர்களும் , கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க உள்ளனர்.

பல புகார்கள் குவிந்ததால் சுனில் ஜெயின் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘அந்தாதூன்’ ரீமேக்… மீண்டும் இணையும் இளையராஜா-பிரசாந்த்

‘அந்தாதூன்’ ரீமேக்… மீண்டும் இணையும் இளையராஜா-பிரசாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

prashanth ilayarajaஹிந்தியில் சூப்பர் ஹிட்டான ‘அந்தாதூன்’ படத்தை தமிழில் ரீமேக் செய்யவுள்ளனர்.

இந்த படம் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான தேசிய விருதினையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதன் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் கைப்பற்றினார்.

25 கிலோ எடையை குறைக்கும் டாப் ஸ்டார்,; பிரமிக்க வைக்கும் பிரசாந்த்

மோகன் ராஜா இயக்கவுள்ள இப்படத்தில், ஆயுஷ்மான் குரானா கேரக்டரில் பிரசாந்த் நடிக்கவுள்ளார்.

இந்த வேடத்தில் நடிக்க பிரசாந்த் 20 கிலோவுக்கு மேல் உடல் எடையை குறைத்துள்ளார்.

இந்த நிலையில் இளையராஜா இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன் அதாவது 10 ஆண்டுகளுக்கு முன் பிரசாந்த் நடித்த பொன்னர் சங்கர் படத்திற்கு இசையமைத்திருந்தார் இளையராஜ என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நடிக்க பிரசாந்த் 6 மாதம் பியானோ பயிற்சி மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

படத்தை ரிலீஸ் செய்வதற்குள் உயிர் போகுது…; வசந்த பாலன் வருத்தம்

படத்தை ரிலீஸ் செய்வதற்குள் உயிர் போகுது…; வசந்த பாலன் வருத்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director vasantha balanதமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுப்பத்தில் ஒருவர் இயக்குனர் வசந்த பாலன்.

‘வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன்’ போன்ற வித்தியாசமான படங்களைக் கொடுத்துள்ளார்.

இவர் தான் வெயில் படம் மூலம் ஜிவி. பிரகாஷை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார்.

தற்போது ஜி.வி.பிரகாஷை நாயகனாக வைத்து ‘ஜெயில்’ படத்தை எடுத்துள்ளார்.

ஆனால் இந்த படம் இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலையில் இப்பட ரிலீஸ் குறித்து வருத்தமாக தன் இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில்…

“ஒரு தயாரிப்பாளர பிடிக்கிறதுக்கு தலைகீழ நிக்கனும். ஒரு ஹீரோ கிடைக்கிறதுக்கு தலைகீழா நடக்கனும்.

சூட்டிங் தடையின்றி நடக்க கையில அக்னிச்சட்டியோட கயித்துல நடக்கனும். இது எல்லாத்தையும் கூட தாங்கிடலாம்.

ஆனா…..இந்த எடுத்த படத்த ரிலீஸ் பண்ணத்தான் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக போகிறது,” என பதிவிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் பர்த் டே: டாக்டரை அடுத்து அயலானும் வர்றான்..

சிவகார்த்திகேயன் பர்த் டே: டாக்டரை அடுத்து அயலானும் வர்றான்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ayalaan stillsஇன்று நடிகர் சிவகார்த்திகேயன் தன் பிறந்தநாளை கொண்டாடி வருவதால் அவர் நடித்துள்ள டாக்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.

இப்படத்தை நெல்சன் இயக்க, அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த பட தலைப்பான அயலான் பட பர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’.; தலைப்பும் காப்பி.. போஸ்டரும் காப்பி..

இன்று பிப்ரவரி 17ல் மாலை 7.07 மணிக்கு வெளியாகவுள்ளது.

இப்படத்தை ரவிக்குமார் இயக்க ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

24ஏஎம் ஸ்டூடீயோஸ் சார்பாக ராஜா தயாரித்து வருகிறார்.

More Articles
Follows