லவ்வர் டார்ச்சர் முடியல; சூட்டிங்கை விட்டு ஹீரோயின் எஸ்கேப்!

லவ்வர் டார்ச்சர் முடியல; சூட்டிங்கை விட்டு ஹீரோயின் எஸ்கேப்!

Heroine escape from Pappyloan shooting spotசந்திரமுகிக்கு உருவம் கொடுத்தவர் இயக்கி நடித்துள்ள ‘பாப்பிலோன்’.

ப்ளூமிங் ஆர்ட் ஸ்டுடியோ சார்பில் ஆறு ராஜா தயாரித்துள்ள படம் பாப்பிலோன். இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் கதாநாயகனாக நடித்து படத்தை இயக்கியும் இருக்கிறார் ஆறு ராஜா. பாப்பிலோன் என்றால் தமிழில் வண்ணத்துப்பூச்சி என அர்த்தமாம்.

அப்பா இல்லாத தனது குடும்பத்தை அன்பாகக் கவனித்து வருகிறார் ஹீரோ. எதிர்பாராமல் அவரது தங்கையின் வீடியோ ஒன்று கயவர்களின் கையில் சிக்குகிறது.. அவர்கள் அதன்மூலம் தங்கையை பிளாக்மெயில் செய்து பணம் பறிப்பதுடன், ஒரு கட்டத்தில் அவரைக் கடத்தவும் முயற்சிக்கின்றனர்..

இதில் விபத்தில் சிக்கி கோமா நிலைக்குச் செல்கிறார் தங்கை.. கதாநாயகி மூலம் இந்த விபரம் அண்ணனுக்குத் தெரியவர, இதன் பின்னணியில் உள்ள கும்பலை நாயகன் எப்படி வேரறுக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

கதாநாயகியாக ஸ்வேதா ஜோயல் என்பவர் நடித்துள்ளார். தங்கையாக சௌமியா மற்றும் அம்மாவாக ரேகா சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். பண்ணையார் கதாபாத்திரத்தில் பூராமு மற்றும் அவரது மகளாக அபிநயா நடிக்க, ‘மாரி’ புகழ் வினோத் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஷ்யாம் மோகன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.. இவர் சமீபத்தில் வெளியான காவியன் படத்திற்கு இசையமைத்தவர். அருள்செல்வன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.. பார்த்திபனின் வித்தியாச முயற்சியான ‘ஒத்த செருப்பு’ படத்திற்கு படத்தொகுப்பு செய்த சுதர்சன் இப் படத்தின் படத்தொகுப்பைக் கவனித்துள்ளார்.

வத்தலகுண்டு, தாண்டிக்குடி, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்து, தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நிறைவு பெற்றுள்ளது.

இந்தப் படத்தை தயாரித்து, இயக்கி, நடித்து இருக்கும் ஆறு ராஜா, கலை இயக்குநர் தோட்டா தரணியின் குழுவில் ஆர்டிஸ்ட் ஆகப் பணியாற்றியவர்.

சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த பிளாக் பஸ்டர் ஹிட்டான சந்திரமுகி படத்தில் சந்திரமுகியின் ஓவியத்திற்கு வர்ணம் தீட்டியவர் இவர்தான்.

இந்தப் படத்திற்கு முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் வேறு ஒரு கதாநாயகி. கொடைக்கானல் பகுதியில் படப்பிடிப்பு துவங்கிய இரண்டாவது நாளிலேயே, தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை எனக் காரணம் காட்டி படப்பிடிப்பில் இருந்து கிளம்பி சென்றாராம்..

பின்னர்தான் அவர் தனது காதலனின் ஈகோ டார்ச்சர் தாங்காமல் இந்தப் படத்தை விட்டு விலகியிருக்கிறார் என தெரிய வந்துள்ளது.. உடனடியாக ஸ்வேதா ஜோயல் என்கிற இன்னொரு கதாநாயகியை ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பை நடத்தி உள்ளார்கள்..

ஆனால் ஓடிப்போன அந்த கதாநாயகியை விட, இவர் மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் படக்குழுவினர் அனைவருமே மிகுந்த சந்தோஷம் அடைந்துள்ளனர்.

Heroine escape from Pappyloan shooting spot

பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி திரைப்படம் இணையத்தளத்தில் தீபாவளி அன்று வெளியீடு

பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி திரைப்படம் இணையத்தளத்தில் தீபாவளி அன்று வெளியீடு

Sri ramana movie posterகாமராஜ், முதல்வர் மகாத்மா ஆகிய திரைப்படங்களைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி குறித்த ஆவணத் திரைப்படம் ஒன்றை ‘ஸ்ரீ ரமணா’ என்ற பெயரில் தயாரித்துள்ளது. இப்படம் வருகிற 27-10-2019 தீபாவளி தினத்தன்று இணையத்தளத்தில் வெளியிடப்படுகிறது.

ஸ்ரீ ரமண மகரிஷி பற்றி இதுபோன்றதொரு விரிவான திரைப்படமோ ஆவணப்படமோ இதுவரை வெளிவந்ததில்லை என்னும் அளவிற்கு பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் உலக அளவில் உள்ள ரமணர் பக்தர்கள் மத்தியிலும் ஆன்மிக அன்பர்களிடையேயும் ஒரு நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருவண்ணாமலையில் உள்ள ரமணாஸ்ரம நிர்வாகத்தினர், ரமண மகரிஷி குறித்த பல்வேறு அரிய செய்திகளை தந்து உதவியதோடு தங்களிடம் இருந்த அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளையும் தந்து உதவியுள்ளனர். அவைகளும் இந்த ஆவணப்படத்தில் ஆங்காங்கு தக்க இடங்களில் இணைக்கப்பட்டுள்ளன.

சித்தர்கள் வாழ்ந்துவந்த திருவண்ணாமலையின் ஆன்மிக மகத்துவம் குறித்து இதுவரை மக்கள் அறிந்திராத செய்திகள் பலவும் இப்படத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

காந்தி அடிகள் திருவண்ணாமலை வந்திருந்த போது அவர் பகவான் ரமண மகரிஷியை சந்திக்க இயலவில்லை. அதற்கான காரணமும் காட்சி வடிவில் படமாக்கப்பட்டுள்ளது.

திரு. தீனதயாளன் ஸ்ரீ ரமண மகரிஷி வேடத்தில் நடித்துள்ளார். புகழ்பெற்ற திரை நட்சத்திரங்கள் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

காமராஜர் மற்றும் காந்தி பற்றிய திரைப்படங்களைத் , தயாரித்து இயக்கியுள்ள அ.பாலகிருஷ்ணன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

திறமை வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களின் ஒத்துழைப்புடன் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இசை : ஜெயப்பிரகாஷ்

கேமரா: எட்வின் சகாய்

மேற்கண்ட செய்திகளை தாங்கள் தங்களது மேலான பத்திரிகையில் வெளியிட்டு ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அ. பாலகிருஷ்ணன்

இயக்குனர், தயாரிப்பாளர்.

சல்மான் கான் வெளியிட்ட சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ டீஸர்

சல்மான் கான் வெளியிட்ட சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ டீஸர்

sivakarthikeyan in hero‘தபாங் 3’ படத்தின் புரொமஷனல் நிகழ்ச்சிக்கு வந்த சல்மான்கான் இந்தி பேசும் பிரதேசங்களிலும் தமிழ்ப் படங்களுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறது என்பதை விவரித்தவர், தனது சொந்த ஆர்வத்தின் காரணமாக சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்தின் டீசரையும் வெளியிட்டார். தனது மைக்ரோ பிளாக்கில் டீசரை வெளியிட்ட சல்மான் ‘ஹீரோ’ படத்தின் ஸ்டைலான அம்சங்களையும் வெகுவாகப் பாராட்டினார்.

இது குறித்து விவரித்த தயாரிப்பாளர் கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் அதிபர் கோட்டபாடி ராஜேஷ் தெரிவித்ததாவது…
“நாங்கள் எதிர்பார்த்தற்கும் மேலாக கிடைத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், படத்தின் டீசரை சல்மான் சாரிடம் காட்ட வேண்டும் என்று தான் நினைத்தோம். டீசரைப் பார்த்து ரசித்த சல்மான் கான் சார், தானாகவே முன் வந்து இதை நானே வெளியிடுகிறேனே என்றதுடன் டீஸரில் பங்கு பெற்ற நடிக நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் கேட்டறிந்தார்.
சல்மான் சார் தமிழ்த் திரையுலகம் குறித்து எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான் என்றாலும், ஹீரோ படம் முழுமையாகப் பூர்த்தியடைந்ததும், தான் அதைப் பார்க்க மிகுந்த ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தார்”
கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரை இந்த ஆண்டு டிசம்பர் 20 என்பது ஒரு மிக முக்கியமான தினமாகும். காரணம், நிறுவனத்தின் சொந்தத் தயாரிப்பான ஹீரோ வெளியாகும் அதே தினத்தில், விநியோகம் செய்யும் தபாங் 3 படமும் வெளியாகிறது.
சிவகார்த்திகேயனுடன் ஆக்ஷன் கிங் அர்ஜுன் கல்யாணி ப்ரியதர்ஷன், அபி தியோல் பிரதான வேடங்களில் நடிக்கும் ஹீரோ படத்தை இருப்புத்திரை படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார். கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ராஜேஷ் தயாரிக்கும் இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Hero Movie Teaser Link : https://www.youtube.com/watch?v=MB9Dj_YEMW0

விஜய் யின் தெறி படம் மிகவும் பிடிக்கும் – சல்மான் கான்

விஜய் யின் தெறி படம் மிகவும் பிடிக்கும் – சல்மான் கான்

Vijay and salman khanபாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் தபாங் முதல் இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து 3 வது பாகமான “தபாங் 3” பிரபுதேவா இயக்கத்தில் டிசம்பர் 20 வெளியாகிறது.

தபாங் படத்தில் நடித்த அதே நடிகர்கள் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளார்கள். சோனாக்‌ஷி சின்ஹா, பிரகாஷ் ராஜ், அர்பாஸ்கான், மாஹி கில் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தில் புதியதொரு வேடத்தில் நான் ஈ புகழ் கிச்சா சுதீப் நடித்துள்ளார்.

இப்படத்தின் டீஸர் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில் படத்தின் டிரெயலர் நேற்று புதுமையான முறையில் வெளியிடப்பட்டது.

தபாங் 3 படக்குழு வீடியோ கான்ஃபரஸிங் மூலம் மும்பையில் இருந்து சென்னை ,ஹைதராபாத், பெங்களூரு ரசிகர்களை சந்தித்தது. ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுடன் உரையாடி படக்குழு டிரெய்லரை வெளியிட்டது. புதுமையான முறையில் அரங்கேறிய டிரெய்லர வெளியீடு பலரது கவனத்தையும் ஈர்த்தது. தபாங் 3 டிரெய்லர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இவ்விழாவில் பேசிய இயக்குநர் பிரபுதேவா

இந்தப்படம் எனக்கு மிக முக்கியமான படம். தபாங் வெற்றியை தொடர்ந்து தபாங் 3 எடுக்கிறோம் எனும்போதே படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உருவாகிவிட்டது. மொத்தப் படக்குழுவும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய கடுமையாக உழைத்திருக்கிறோம். இந்தியா முழுதும் இப்படம் பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதற்க்காக ரசிகர்களை ஒவ்வொரு மாநிலத்திலும் நேரடியாக சந்திக்க உள்ளோம். படத்தின் டிரெய்லர் உங்களை கவர்ந்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி. படமும் உங்களை கவரும் என்றார்.

சல்மான் கான் பேசியதாவது…

தென்னிந்திய சினிமாக்கள் எனக்கு எப்போதும் பிடிக்கும். ரஜினி, கமல், அஜித், விஜய், விகரம் படங்களை விரும்பி பார்ப்பேன். இங்கே இப்போது ஹிந்தி சினிமாவை விடவும் பாகுபலி, கே ஜி எஃப் என தென்னிந்திய சினிமாக்கள் தான் வசூல் குவிக்கின்றன. தமிழில் குறிப்பாக விஜய்யின் போக்கிரி படத்தை நான் ரீமேக் செய்து நடித்தேன். அவரது தெறி, திருப்பாச்சி படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். தபாங் 3 படம் என் மனதுக்கு நெருக்கமான படம். இந்தப்படம் தெனிந்திய படம் போல் தான் இதில் அதிகமாக தென்னிந்திய கலைஞர்கள் தான் வேலை பார்த்துள்ளனர். பிரபுதேவா எங்களுடைய சொத்து அவர் இப்படத்தை இயக்கியிருப்பது வெற்றிக்கு உத்தரவாதமளிப்பபது போன்றது. எனது அடுத்த படத்தையும் அவர் தான் இயக்குகிறார். தமிழ் உட்பட பல மொழிகளில் இப்படம் வெளியாகிறது. விரைவில் தமிழ் ரசிகர்களை நான் நேரில் சந்திப்பேன். படத்தின் டிரெயலருக்கு நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி என்றார்.

படத்தின் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்

கதை திரைக்கதை – திலீப் சுக்லா

இயக்கம் – பிரபு தேவா

தயாரிப்பு – சல்மான் கான், அர்பாஸ் கான், நிகில் திவேதி.

தயாரிப்பு நிறுவனம் – அர்பாஸ் கான் புரட்கஷன்ஸ், ஸஃபரூன் பிராட்காஸ்ட்.

Dabangg 3 Official Tamil Trailer Link : https://www.youtube.com/watch?v=WVLfRX0jlS4

ராயப்பன் வெறித்தனம்.. அட்லி அல்டிமேட்.. பிகில் விமர்சனம்

ராயப்பன் வெறித்தனம்.. அட்லி அல்டிமேட்.. பிகில் விமர்சனம்

Vijay Bigil Reviewபல கட்ட பிரச்சினைகளுக்கு பிறகு பிகில் படத்தின் அதிகாலை சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்தது தமிழக அரசு.

காலை 4 மணிக்கு சில தியேட்டர்களில் காட்சிகள் என சொல்லப்பட்டாலும் 5 மணிக்கு மேல்தான் தமிழகத்தில் பிகில் திரையிடப்பட்டது.

தற்போது வரை முதல் பாதி பற்றிய விமர்சனங்கள் இதோ…

விஜய்யின் ராயப்பன் கேரக்டர் வெறித்தனம். வயதான கேரக்டரில் அசத்தல். அதிலும் ரயில்வே ஸ்டேசனில் நடைபெறும் இடைவேளை காட்சிகள் தாறுமாறு. ஆனால் ராயப்பன் கெட் அப் நாடக நடிகர் மேக் அப் போல் உள்ளது. இன்னும் நன்றாக மேக் அப் செய்திருந்தால் சூப்பராக இருந்திருக்கும்.

மைக்கேல் காட்சிகள் ரசிகர்களுக்கு பக்கா விருந்து.

வழக்கம்போல் காதல், மாஸ், சென்டிமெண்ட், காமெடி என எதிலும் குறை வைக்காமல் கொடுத்துள்ளார் டைரக்டர் அட்லி. விஜய் நயன்தாரா காட்சிகள் ரொமான்டிக்.

இரண்டாம் பாதியில் பிகில் இன்ட்ரோ மற்றும் அதன் காட்சிகள் இருக்கும் எனத் தெரிகிறது-

இரண்டாம் பாதி ஓடிக்கொண்டிருக்கிறது. முழு விமர்சனம் விரைவில்…

Vijay Bigil Review

அஜித்-விக்ரம் நடித்த உல்லாசம் ரீமேக்? யங் ஹீரோஸ் யார் தெரியுமா..?

அஜித்-விக்ரம் நடித்த உல்லாசம் ரீமேக்? யங் ஹீரோஸ் யார் தெரியுமா..?

vikram prabu and dulquerநடிகர்கள் அஜித் மற்றும் விக்ரம் இணைந்து நடித்த படம் உல்லாசம். இந்த படத்தில் ஸ்ரீதேவி தங்கை மகேஸ்வரி நாயகியாக நடித்திருந்தார்.

1997 வெளியான இந்த படத்தை ஜேடி அண்ட் ஜெரி என்ற இரட்டையர் இயக்கியிருந்தனர். நடிகர் அமிதாப்பச்சன் இந்த படத்தை தயாரித்திருந்தார்.

தற்போது 22 ஆண்டுகளுக்கு பிறகு அதே இயக்குனர் இந்த படத்தை ரீமேக் செய்யவுள்ளார்.

இதில் அஜித் வேடத்தில் துல்கர் சல்மானும் விக்ரம் வேடத்தில் விக்ரம் பிரபுவும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

உல்லாசம் படத்தை அப்படியே எடுப்பார்களா? அல்லது இந்த காலத்திற்கு ஏற்ப மாற்றம் செய்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Ullasam remake with Vikram Prabu and Dulquer Salmaan

More Articles
Follows