தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தின் சூட்டிங், மலேசியா மற்றும் தாய்லாந்து நாடுகளில் நடைபெற்றது.
அப்போது ரஜினிக்கு மலேசியா, தாய்லாந்து மக்களும் அரசாங்கமும் உற்சாக வரவேற்பை தந்தனர்.
அப்போது ரஜினியுடன் ஏற்பட்ட நட்பின் காரணமாக அவரை சந்திக்க, தாய்லாந்து இளவரசி ராஜ்தாராஸ்ரீ ஜெயம்குரா சென்னை வந்துள்ளார்.
அப்போது ரஜினியிடம் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார்.
மேலும் தாய்லாந்தில் மிகப்பெரிய அளவில் ரஜினிக்கு ரசிகர் வட்டம் உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இவர்களின் சந்திப்பின் போது, வி கிரியேஷன்ஸ் தலைமை நிர்வாகி பரந்தாமன் தாணு உடன் இருந்தார்.