விஜய் – ஜெயம் ரவி கூட்டணியில் ஹாரிஸ் ஜெயராஜ்..!

விஜய் – ஜெயம் ரவி கூட்டணியில் ஹாரிஸ் ஜெயராஜ்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor jayam raviஎவரும் எதிர்பாராத கூட்டணியாக இருந்தாலும். இப்படியொரு கூட்டணி அமையாதா என ரசிகர்கள் காத்திருந்தமைக்கு கிடைத்த பலன்தான் இது.

இயக்குனர் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்க ஒப்புக் கொண்ட படம்தான் அது.

தற்போது இவர்களின் கூட்டணியில் இன்னும் பலம் சேர்க்கும் விதமாக இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜீம் இணைந்துள்ளார்.

இதுகுறித்து ஜெயம் ரவி கூறியதாவது….

“இந்த கதையில் பல சுவாரசியங்களையும் உள்ளடக்கி இருக்கிறோம்.

தற்போது இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் எங்களுடன் கைக்கோர்த்து இருப்பது மேலும் பலம் சேர்த்துள்ளது.

விரைவில் இந்த படத்துக்கான பாடல்களை தனக்குரிய மெட்லி ஸ்டைலில் இசையமைக்க இருக்கிறார் ஹாரிஸ்.”என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ஜெயம் ரவி.

அடுத்த வருஷம் தல பொங்கல்… குஷியில் ரசிகர்கள்..!

அடுத்த வருஷம் தல பொங்கல்… குஷியில் ரசிகர்கள்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith stillsதல 57 படத்தின் பூஜை அண்மையில் மிக எளிமையாக நடைபெற்றது.

சிவா இயக்கும் இப்படத்தில் அஜித், காஜல் அகர்வால், கருணாகரன், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைக்க, சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

விரைவில் இதன் படப்பிடிப்பு பல்கேரியா நாட்டில் தொடங்கப்படவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை 2017ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிடவிருக்கிறார்களாம்.

மேலும் இப்படத்தை 2017, ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டு தினத்திலும் வெளியிடவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

கபாலி அப்டேட்ஸ்: ரஜினி ரசிகர்கள் நினைத்தது நிறைவேறியது.!

கபாலி அப்டேட்ஸ்: ரஜினி ரசிகர்கள் நினைத்தது நிறைவேறியது.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kabali certified U and release on July 22nd 2016ஒரு தமிழ் படத்திற்கு இந்த அளவு எதிர்பார்ப்பு இருக்குமா? என கனவில் கூட யாரும் பார்த்து இருக்க மாட்டார்கள்.

அப்படி ஒரு எதிர்பார்ப்பு ரஜினியின் கபாலி படத்திற்கு உருவாகியுள்ளது.

இப்படம் இன்று சென்சார் அதிகாரிகளின் பார்வைக்கு சென்றது. இது போஃப்டா (BOFTA) நிறுவனம் திரையரங்கில் திரையிடப்பட்டது.

‘கபாலி’ படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘யூ’ சர்டிபிகேட் அளித்துள்ளனர்.

இப்படத்தின் ரன்னிங் டைம் 152 நிமிடங்கள் ஆகும். அதாவது 2 மணி நேரம் 32 நிமிடங்கள் ஓடக்கூடியது.

இதனைத் தொடர்ந்து சில நிமிடங்களிலேயே தயாரிப்பாளர் தாணு படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்தார்.

ஜுலை 22ஆம் தேதி உலகம் முழுவதும் தரிசனம் தரவிருக்கிறார் கபாலி.

படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிப்போகும் என பல வதந்திகள் வந்த நிலையில் இன்னும் 10 நாட்களில் படம் ரிலீஸ் ஆவதை ரஜினி ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.

தில்லுக்கு துட்டு: நான்கு நாட்கள் வசூல் எவ்வளவு..?

தில்லுக்கு துட்டு: நான்கு நாட்கள் வசூல் எவ்வளவு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhillukku dhudduகடந்த ஜீலை 7ஆம் தேதி சந்தானம் நடித்த தில்லுக்கு துட்டு படம் ரிலீஸ் ஆனது.

‘லொள்ளு சபா’ புகழ் ராம்பாலா இயக்கிய இப்படத்திற்கு தமன் இசையமைக்க, பின்னணி இசையை கார்த்திக் ராஜா அமைத்திருந்தார்.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்து வெளியிட்டது.

ரம்ஜான் விடுமுறையை முன்னிட்டு வெளியானதால், படமும் எதிர்பார்த்ததை விட நன்றாகவே துட்டு சம்பாதித்து வருகிறதாம்.

தமிழகத்தை பொறுத்தவரை இந்த நான்கு நாட்களில் மட்டும் ரூ.13.45 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையில் ரூ.1.37 கோடியும், செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.3.45 கோடியும், கோவையில் ரூ.2.7 கோடியும் வசூல் செய்துள்ளது.

இது சந்தானம் ஹீரோவாக நடித்த படங்களிலேயே அதிகபட்ச வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி 60 அப்டேட்ஸ்… மூன்று முகம் காட்டும் விஜய்..!

தளபதி 60 அப்டேட்ஸ்… மூன்று முகம் காட்டும் விஜய்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vijayபரதன் இயக்கும் புதிய படத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், அபர்ணா வினோத், சதீஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

தற்காலிமாக தளபதி 60 என பெயரிடப்பட்ட இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

இப்படத்திற்காக விஜய், தன் உடல் எடையை பத்து கிலோ குறைத்து நடித்து வருகிறார்.

மேலும் இப்படத்தில் இரண்டு வேடங்களில் விஜய் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

ஒரே வேடம் என்றாலும் மூன்று விதமான கெட்டப்புகளில் விஜய் தோன்றுவார் எனவும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

தனுஷ் தயாரிப்பாளருடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்..!

தனுஷ் தயாரிப்பாளருடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gv prakash stillsவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘பொல்லாதவன்’ மற்றும் ‘ஆடுகளம்’ படங்களை தயாரித்தவர் கதிரேசன்.

இவர் தற்போது தயாரிக்கவுள்ள படத்தில் ஜி.வி. பிரகாஷ் நாயகனாக நடிக்கிறார். இதற்கான பூஜை நேற்று போடப்பட்டது.

அறிமுக இயக்குனர் சண்முகம் முத்துசாமி இப்படத்தை இயக்குகிறார்.

மேலும் தம்பி ராமையா, ரோபோ சங்கர், ஆர்ஜே அஜய், ஆர்ஜே பிளேடு சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

படத்தின் நாயகன் ஜி.வி.பிரகாஷே இசையமைக்கிறார்.

படத்தின் நாயகி மற்றும் மற்ற கலைஞர்களின் தேர்வு முடிவானவுடன் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

More Articles
Follows