ரஜினி ரசிகராக மாறிய ஹர்பஜன் சிங்..; வாய்ஸ் கொடுக்கும் சிம்பு

ரஜினி ரசிகராக மாறிய ஹர்பஜன் சிங்..; வாய்ஸ் கொடுக்கும் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பிரெண்ட்ஷிப்’ என்ற தமிழ் படத்தின் மூலம் நாயகனாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அறிமுகமாகிறார்.

அவருடன் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறார் பிக்பாஸ் லொஸ்லியா.

இரட்டை இயக்குனர்களான ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா தயாரித்து, இயக்கியுள்ள படம் இது.

இவர்கள் ஏற்கெனவே சென்னையில் ஒருநாள் 2, அக்னி தேவ் ஆகிய படங்களை இயக்கியுள்ளனர்.

இவர்களுடன் முக்கிய கேரக்டரில் ஆக்சன் கிங் அர்ஜூனும், சதீஷூம் நடித்துள்ளனர்.

தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார், மறைந்த நடிகர் சுபா வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஹர்பஜன் சிங் தீவிர ரஜினி ரசிகராக நடிக்க இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ஆந்தம் என்ற பாடலை சிம்பு பாடியுள்ளார்.

கிரிக்கெட்டரே ஹீரோவாக நடிப்பதால் அவருக்கேற்ற வகையில் கிரிக்கெட் விளையாடும் காட்சியும் உள்ளதாம்.

சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்ய டி.எம். உதயகுமார் இசையமைக்கிறார்.

தற்போது கொரோனா ஊரடங்குகளை நீக்கி தியேட்டர்கள் திறக்கப்பட்ட நிலையில், பிரெண்ட்ஷிப் திரைப்படம் இந்த மாதம் திரைக்கு வர உள்ளது.

கல்லூரி நண்பர்கள் 5 பேருக்கு இடையே இருக்கும் நட்பு தான் படத்தின் கதையாம். இந்த 5 பேரில் லாஸ்லியா மட்டுமே பெண். படத்தில் மிக முக்கியமான சமூக கருத்து ஒன்றும் சொல்லப்பட்டுள்ளதாம்.

இந்த படம் வந்தபிறகு ஆண் பெண் நட்புக்கே இன்னொரு முகம் கிடைக்கும். என்கிறார்கள் படக்குழுவினர்.

Harbhajan Singh plays die hard Rajini fan in Friendship

இந்தியா டிரெண்டிங்கில் அசத்தும் ஆர்யாவின் அரண்மனை-3..: ஓடிடியை ஓரங்கட்டிய குஷ்பு சுந்தர்

இந்தியா டிரெண்டிங்கில் அசத்தும் ஆர்யாவின் அரண்மனை-3..: ஓடிடியை ஓரங்கட்டிய குஷ்பு சுந்தர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் பேய்படங்களை குழந்தைகளும் கொண்டாடி பார்க்கும் வண்ணம் மாற்றிய படம் தான் #அரண்மனை திரைப்படம்.

நகைச்சுவை படங்களுக்கு, பெயர் பெற்றவரான இயக்குநர் சுந்தர் சி. இயக்கத்தில் #அரண்மனை முதல் இரண்டு பாகங்களும் பிரமாண்ட வெற்றி பெற்ற நிலையில், தற்போது ஆர்யா நடிப்பில் அரண்மனை 3 ரிலிஸுக்கு தயாராகியுள்ளது.

பர்ஸ்ட் லுக் ரிலீசுக்கு பிறகு நேற்று பாடல் ஒன்று வெளியானது .

ஆர்யா-ராஷிகண்ணா பங்கு பெற்ற இந்த பாடல் நேற்று இந்தியா டிரட்ண்டிங்கில் பரபரப்பானது.

இயக்குநர் சுந்தர்.சி இன் இந்த பிரமாண்ட பாடல் காட்சி You tube 1M ஒன் மில்லியன் கிராஸ் வெற்றி கண்டது.

இப்படத்தை இணைய ஓடிடி தளத்தில் வாங்குவதில் போட்டிகள் இருந்தாலும்.. தியேட்டரில் தான் வெளியிட வேண்டும் என்று முடிவெடுத்திருந்தார் சுந்தர் சி.

இந்த நிலையில் திரைத்துறையில் படத்தை பார்த்த சில முக்கியஸ்தர்கள் இப்படம் குடும்பத்தோடு திரையரங்கில் கொண்டாட்டமாக பார்க்க வேண்டிய படம், இதனை திரைக்கு கோண்டு வாருங்கள் என்றனர்.

இதனை தொடர்ந்து அரண்மனை 3 படத்தை திரையரங்கில் வெளியிடும் வேலைகளை செய்து வருகிறார் இயக்குநர் சுந்தர் சி.

அரண்மனை 3 படம் முதல் இரண்டு பாகங்களை விட இரு மடங்கு பட்ஜெட்டில் மிகப்பிரமாண்டமான வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

முதல் இரண்டு பாகங்களை குழந்தைகள் கொண்டாடிய நிலையில், இப்படமும் குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் மிகச்சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஆர்யா, ராஷிக்கண்ணா, சுந்தர் சி முதன்மை பாத்திரங்களில் நடிக்க, விவேக், யோகி பாபு, சாக்‌ஷி அகர்வால், சம்பத், மனோபாலா, வின்சென்ட் அசோகன், மதுசூதன ராவ், வேலராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத், கோலப்பள்ளி லீலா ஆகியோர் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திரை கொள்ளாத அளவில் பெரும் நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

முதல் முறையாக இயக்குநர் சுந்தர் சி- யும், இந்தியாவின் முக்கிய சண்டைப்பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்ன்-ம் இப்படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளார்.

இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி மட்டுமே 1.5 கோடி ரூபாய் செலவில், 300 தொழிலாளர்கள் உருவாக்கிய பிரமாண்ட செட்டில், 200 கலைஞர்கள் பங்கேற்க, 16 நாட்கள் படமாக்கப்பட்டது.

படத்தின் அதி முக்கியமான, இந்த க்ளைமாக்ஸ் காட்சியின் CG பணிகள் மட்டுமே, 6 மாதங்கள் நடைபெற்றது. படத்தின் அனைத்து பணிகளும் சமீபத்தில் முடிந்த நிலையில் படத்தின் வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

படத்தின் முதல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகவுள்ளது

தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்:

இயக்கம் : சுந்தர் சி
ஒளிப்பதிவு : UK செந்தில்குமார்
இசை : C சத்யா
படத்தொகுப்பு : ஃபென்னி ஆலிவர்
கலை இயக்கம் : குருராஜ்
சண்டை பயிற்சி : பீட்டர் ஹெய்ன்/தளபதி தினேஷ் / பிரதீப் தினேஷ்
நடனம்:பிருந்தா,தினேஷ்
மக்கள் தொடர்பு : ஜான்சன்
தயாரிப்பு நிறுவனம் : ஆவ்னி சினிமேக்ஸ்
தயாரிப்பாளர் : குஷ்பு சுந்தர்

Sundar C’s Aranmanai 3 song trending in india

மஹத் – ஐஸ்வர்யா தத்தா காதல் ஜோடிக்கு வில்லனாகும் ஆதவ்

மஹத் – ஐஸ்வர்யா தத்தா காதல் ஜோடிக்கு வில்லனாகும் ஆதவ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிக் பாஸ் புகழ் மஹத், ஐஸ்வர்யா, தத்தா முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் “கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா”.

இப்படத்தில் யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி கலைஞர்கள் நடிக்கின்றனர்.

ரொமான்ஸ் காமெடி வகையில் உருவாகும் இத்திரைப்படத்தில் அறிமுக நடிகர் ஆதவ் எதிர்மறை நாயகனாக நடிக்கிறார்.

இப்படத்தின் கதை, எதிர்மறை நாயகன் பாத்திரத்திற்கு உடல் ரீதியாகவும், தோற்றத்திலும் ஒரு வலுவான எதிரியை கோரியதால், படக்குழு பொருத்தமான நடிகரை தேடி வந்தது. அந்த வகையில் ஆதவ் நன்கு கட்டமைக்கப்பட்ட உடல் தகுதியுடனும், கவர்ச்சிகரமான ஆளுமையுடனும், எதிர்மறை நாயகன் பாத்திரத்திற்கு மிகப்பொருத்தமானவராக அமைந்தார்.

பல திறமைகளைக் கொண்ட ஆதவ், நடிப்பு, மாடலிங், மேடை நாடக நடிப்பு, கால்பந்து, குத்துச்சண்டை, ஸ்டண்ட் என்று பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்குபவர்.

இரண்டு ஆண்கள் (கதாநாயகன் மஹத் மற்றும் ஆதவ்), ஒரே பெண் (ஐஸ்வர்யா தத்தா) மீது காதலில் விழுகிறார்கள். அதில் நாயகி ஆதவ் பாத்திரத்திற்கு நிச்சயிக்கப்பட்டிருக்க, ஆளுமை மிக்க அந்த எதிர் நாயகனை கடந்து, நாயகன் எவ்வாறு காதலியை கரம்பிடிக்கிறான் என்பதே கதை. பல முன்னணி கலைஞர்கள் பங்களிப்பில் காதல் காமெடி கலந்த அட்டகாசமான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகி வருகிறது..

Mahath and Aishwarya Dutta joins for a new romantic film

எம்ஜிஆர் இயக்கிய ‘உலகம் சுற்றும் வாலிபன்’ மீண்டும் ரிலீஸ்

எம்ஜிஆர் இயக்கிய ‘உலகம் சுற்றும் வாலிபன்’ மீண்டும் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட, பெரும் திருப்பத்தின்போது வெளியான படம், உலகம் சுற்றும் வாலிபன். தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டு, அ.தி.மு.க., துவங்கிய பின், இப்படம், அக்கட்சி கொடியுடன் வெளியானது.

இப்படத்தில், எம்.ஜி.ஆருக்கு, இரட்டை வேடம். விஞ்ஞானியான முருகன், மின்னலை பிடித்து, அதை ஆக்கபூர்வ பணிக்கு பயன்படுத்த நினைப்பார். அத்திட்டத்தின், ‘பார்முலா’வை வில்லன் கூட்டம், அபகரிக்க முயற்சி செய்யும்.

இதை, விஞ்ஞானியின் தம்பியும், புலனாய்வுத் துறை அதிகாரியுமான ராஜூ, எதிரிகளின் சதித்திட்டத்தை முறியடிக்கிறார் என்பது தான், கதை. நாடு, நாடாக பயணிக்கும் சர்வதேச கதை, அதை திறமையாக கையாண்டு இருப்பார், இயக்குனர் எம்.ஜி.ஆர்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன் ஆகியோர், பாடல்களை எழுதினர்.

‘நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், பச்சைக்கிளி முத்துச்சரம், நிலவு ஒரு பெண்ணாகி, சிரித்து வாழ வேண்டும்’ உட்பட, அனைத்து பாடல்களும் பெரும் வெற்றி பெற்றன.

உலகம் சுற்றும் வாலிபன் படத்தை பார்த்தால், எம்.ஜி.ஆர், எவ்வளவு பெரிய திறமைசாலி என்பது அனைவருக்கும் தெரியும்.

இப்படம் தற்போது டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் செப்டம்பர் 3ஆம் தேதி தியேட்டரில் வெளியாக இருக்கிறது.

ரிஷி மூவிஸ் சார்பில் சாய் நாகராஜன் வழங்க, உலகம் முழுவதும் சரோஜா பிலிம்ஸ் வெளியிட, தமிழகம் முழுவதும் 7 ஜி பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறார்கள்.

MGR in Ulagam Suttrum Vaaliban gets re release

ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் செய்யக்கூடாது..; முக ஸ்டாலினுக்கு பவன்கல்யாண் பாராட்டு

ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் செய்யக்கூடாது..; முக ஸ்டாலினுக்கு பவன்கல்யாண் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார் மு.க.ஸ்டாலின்.

பதவியேற்றது முதல் பல்வேறு நல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.

பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம், கோவில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை, வீடு தேடி வந்து மருத்துவம் என பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை பாராட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்..

“அன்பிற்குரிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் அரசியல் செய்ய வேண்டும்.

ஆனால் ஒரு கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் செய்யக்கூடாது. அதை வார்த்தைகளால் அல்ல, செயல்களால் நீங்கள் செய்து வருகிறீர்கள்.

உங்களது ஆட்சி நிர்வாகம், உங்கள் அரசின் செயல்பாடுகள் உங்கள் மாநிலத்திற்கு மட்டுமல்ல நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஊக்கம் அளிக்கும் விதத்தில் உள்ளது. உங்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் மு.க. ஸ்டாலினை பாராட்டி பதிவிட்டுள்ளார்.

Pawan Kalyan talks about TN CM Stalin

தழுதழுத்த குரலில் பாரதிராஜா அழைப்பு.. பதறியடித்து ஓடிய சேரன்.; என்ன நடந்தது..?

தழுதழுத்த குரலில் பாரதிராஜா அழைப்பு.. பதறியடித்து ஓடிய சேரன்.; என்ன நடந்தது..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தில் சென்னைக்கு வந்தவர் இயக்குனர் சேரன்.

“புரியாத புதிர்” படத்தில் உதவி இயக்குனராகவும், “சேரன் பாண்டியன்” “நாட்டாமை” போன்ற படத்தில் அசோசியேட் இயக்குனராக பணியாற்றியவர் இவர்.

பார்த்திபன் & மீனா நடித்த “பாரதி கண்ணம்மா” என்ற படத்தையும் இயக்கி யார் இந்த சேரன்.? என தமிழ் சினிமாவையே தன் பக்கம் திருப்பியவர்.

இந்த படம் விருதுகளை அள்ளியது. அதன்பின்னர் முரளி மீனா நடித்த ‘பொற்காலம்” என்ற திரைப்படத்தை இயக்கி தேசிய விருதை பெற்றார்.

தொடர்ந்து “வெற்றிக்கொடிகட்டு” போன்ற படங்களை இயக்கி வந்த சேரன் முதன்முதலாக “ஆட்டோகிராஃப்” என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார் சேரன்.

இதில் மல்லிகா, கோபிகா, சிநேகா, கனிகா என நான்கு தாயகிகள் நடிக்க ஒரு மனிதனின் நான்கு கட்ட காதல் வாழ்க்கையை காவியமாக சொல்லியிருந்தார்.

‘தவமாய் தவமிருந்து’ படத்தில் தந்தை மகன் பாசத்தை படைத்திருந்தார்.

இதன் பின்னர் நடிப்பு இயக்கம் என இரட்டை குதிரையில் பயணிக்கத் தொடங்கினார்.

பிரிவோம் சந்திப்போம், ராமன் தேடிய சீதை, மூன்று பேர் மூன்று காதல், யுத்தம் செய்” போன்ற படங்களில் இயக்கத்தை விட்டு நடிகராகவே தோன்றினார்.

தற்போது நந்தா பெரியசாமி இயக்கத்தில் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தில் கௌதம் & வெண்பாவுடன் நடித்து வருகிறார்.

இந்த படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் சேரன் தன் ட்விட்டரில் பாரதிராஜா அழைப்பு குறித்து பதிவிட்டுள்ளார்.

அதில்…

காலை பாரதிராஜா அப்பாவிடமிருந்து அழைப்பு.. எடுத்து பேசுகிறேன்.. அவர் குரல் தழுதழுக்கிறது. “என்னப்பா” என சற்று பதட்டம் .

ஆட்டோகிராஃப் பார்க்கிறேன்.. எங்கடா அந்த சேரன்… நீ திரும்ப வரணும்டா என அக்கறையோடு சொல்கிறார்.

இதோ வந்துட்டேன்ப்பா என அவர் இல்லம் சென்றேன்.. ஆசீர்வதித்தார்.. https://t.co/LGEUbMMMYu

Director Cheran met legendary director Bharathi raja

More Articles
Follows