அஜித் படத்தை முடித்துவிட்டு ரஜினி-தனுஷை இயக்கும் வினோத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள பேட்ட படத்தை முடித்துவிட்டார் ரஜினிகாந்த்.

இப்படத்தை 2019 ஜனவரி 10ஆம் தேதி வெளியிட உள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

இப்படத்தை தொடர்ந்து ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி.

இப்படத்தை லைகா தயாரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை முடித்துவிட்டு சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளாராம் ரஜினி.

இதே படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அஜித்தின் 59 படத்தையும் வினோத் தான் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரனும் அரசியல் களத்தில் குதிக்க முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தேமுதிக தலைவரும், தலைமையும் முடிவெடுத்தால் தேர்தலில் போட்டியிடுவேன் என தண்டையார் பேட்டையில் நடந்த கிருஸ்மஸ் நிகழ்ச்சியில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் பேட்டியளித்துள்ளார்.

சென்னை தண்டையார்பேட்டை சேனியம்மன் கோவில் தெருவில் புனித நற்செய்தி அருளப்பர் தேவாலயத்தில் தேமுதிக சார்பில் கிருஸ்துமஸ் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.

அதனை தொடர்ந்து கருணாலயா இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு கிருஸ்துமஸ் பலகாரம் மற்றும் உணவுகள் பரிமாறப்பட்டன.

இந்நிகழ்ச்சியில. தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதல் மகனான விஜயபிரபாகரன் கலந்து கொண்டார்.

அப்போது நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது…

“கட்சி தலைவர் விஜயகாந்த் தற்போது அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். தேமுதிகவை பொறுத்தவரை கட்சியில் எந்த குளறுபடியும் இல்லை.

நான் அரசியலுக்கு வருவதில் எந்த கட்டுபாடும் இல்லை. தேமுதிக தலைவரும், தலைமையும் முடிவெடுத்தால் தேர்தலில் போட்டியிடுவேன். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்குப்பின் கூட்டணி குறித்து கட்சியின் தலைமை அறிவிக்கும்.” என அவர் தெரிவித்தார்.

இந்துக்கள் எதிர்ப்பை அடுத்து ஹன்சிகாவை முஸ்லீமாக மாற்றிய ஜமீல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை ஹன்சிகாவின் 50வது படமான ‘மஹா’ படத்தை இயக்கி வருகிறார் ஜமீல்.

இந்த பட போஸ்டர்கள் சில நாட்களாகவே சர்ச்சையாகி வருகிறது.

இந்து பெண் துறவி போல கஞ்சாவை புகைத்துக் கொண்டு அந்த போஸ்டர்களில் ஹன்சிகா இருந்தார்.

இதனால் இந்துக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்புகள் உருவானது.

மேலும் இந்து மக்கள் முன்னணி அமைப்பாளர் நாராயணன் என்பவர், சென்னை, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்து, இயக்குநர் மற்றும் நடிகை மீது நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், இப்படத்தின் 2வது போஸ்டரை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் டைரக்டர் ஜமீல்.

அதில்… ஒரு முஸ்லிம் பெண் போல வேடமிட்டு தொழுகையில் ஈடுபடுகிறார் ஹன்சிகா. பின்னணியில் ஹன்சிகாவின் நிழல் துப்பாக்கி ஏந்தியபடியே நிற்கிறார்.

இதுகுறித்து ஜமீல் கூறியதாவது : ‘ ‘மஹா’ படத்தில், ஹன்சிகா, இந்து பெண்மணியாக இருந்து முஸ்லிம் பெண்மணியாக மாறுவது போல காட்சி அமைப்புகள் உள்ளன.

எந்த மதத்தையும் இழித்தோ, பழித்தோ செய்வது போல, எதையும் செய்யவில்லை. எல்லா மதங்களும் எனக்கு ஒன்றுதான். கோடை விடுமுறையின் மஹா படம் வெளியாகும்”. எனத் தெரிவித்துள்ளார்.

கோடை விடுமுறையில் கமல்-விக்ரம் வைக்கும் மெகா விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் பரமக்குடி என்ற கிராமத்தில் பிறந்த கமல்ஹாசன் மற்றும் விக்ரம் இருவரும் தமிழ் சினிமாவை பெருமைப்பட வைத்த கலைஞர்களில் மிக முக்கியமானவர்கள்.

இவர்கள் இருவரும் தற்போது ‘கடாரம் கொண்டான்’ என்ற படத்திற்காக இணைந்துள்ளனர்.

ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக கமல் தயாரிக்கும் இப்படத்தில் விக்ரமும், கமலின் மகள் அக்ஷராஹாசனும், இணைந்து நடித்து வருகின்றனர்.

நாசரின் மகன் அபி மெய்தி ஹாசன், ‘8 தோட்டாக்கள்’ பட நாயகி மீரா மிதுன் ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.

ராஜேஷ் எம் செல்வா இயக்கி வரும் இப்பட சூட்டிங்கை 2019 ஜனவரிக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

எனவே 2019 கோடை விடுமுறையில் இப்படத்தை வெளியிடும் முடிவில் இருக்கிறார்களாம்.

விஜய்யால் நஷ்டம்; தனுஷ் படத்தை நிறுத்திய பிரபல நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்த மெர்சல் படத்தை தங்களது 100வது படைப்பாக பிரம்மாண்டமாக தயாரித்தது ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்.

‘மெர்சல்’ படம் நல்ல வசூலைக் கொடுத்துள்ளதாக சொல்லப்பட்டாலும் அது தயாரிப்பு நிறுவனமாக தேனாண்டாள் பிலிம்சுக்கு லாபமாக அமையவில்லை என்பதே உண்மை.

எனவே இதனையடுத்து சன் பிக்சர்ஸ் தயாரித்த சர்கார் படத்தை வாங்கி வெளியிட்டனர்.

அதுவும் அவர்களுக்கு லாபமாக அமையவில்லை என்றே கூறப்படுகிறது.

இதனிடையில் நடிகர் தனுஷ் இயக்கும் 2வது படத்தை தாங்கள் தயாரிப்பதாக அந்த நிறுவனம் அறிவித்தது.

இதில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, சரத்குமார், எஸ்ஜே சூர்யா, ஸ்ரீகாந்த், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடிக்க, இதை சரித்திர காலப் படமாக தனுஷ் இயக்கவிருந்தார்.

செப்டம்பரில் சூட்டிங்கை ஆரம்பித்து சில நாட்கள் படப்பிடிப்பையும் நடத்தினார்.

ஆனால் சில நாட்களாக சூட்டிங் நடக்கவில்லை.

ஏனென்றால் தற்போது நிதிப் பிரச்சினை காரணமாக சூட்டிங்கை நிறுத்திவிட்டதாம் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்.

தனுஷின் பட பட்ஜெட் அதிகமாகிவிட்டதால் அந்த படத்தை கைவிடும் அளவுக்கு அந்த நிறுவனம் தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையில் தனுஷ் அடுத்து வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகும் ‘அசுரன்’ படத்தில் நடிக்கவுள்ளார்.

தயாரிப்பாளர்கள் சங்க துணைத் தலைவரானது ஏன்..? பார்த்திபன் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு பூட்டு போட்ட விவகாரத்தால் விஷால் தலைமையில் தயாரிப்பாளர் சங்கத்தின் சிறப்பு கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் புதிய துணை தலைவராக பார்த்திபன் தேர்வு செய்யப்பட்டார்.

இதற்கு முன் துணை தலைவராக இருந்த கவுதம் மேனன் பதவி விலகியதை அடுத்து பார்த்திபன் புதிய துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி போன்ற அரசியல் நமக்குள் வேண்டாம் என்றும், துணை தலைவராக தேர்ந்தெடுத்த போது, முதலில் மறுத்து, பின் தற்போது சூழ்நிலை மதித்து சம்மதித்ததாகவும் பார்த்திபன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..

தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்க அங்கத்தினர்கள் அனைவருக்கும்…

நான் தயாரிப்பாளர் ஆனது என் படைப்பின் சுதந்திரத்திற்கே! உறுப்பினரானது கடமை. செயற்குழு உறுப்பினரானது இருந்ததை காட்டிலும் சிறந்ததை செய்ய நம் உழைப்பையும் நேரத்தையும் கூடுதலாக தரலாம் என்ற தர்ம சிந்தனையின்றி லாப நோக்கமல்ல.

இச்சங்கத்தில் இதுவரை நான் கண்டதெல்லாம், சிறிய பலனுக்கு கூட சீரிய முயற்சி எடுக்கப்பட்டதென்னவோ உண்மை. காணாதது, ஊழல் மற்றும் உபத்தொழிலாய் பதவிகளை பயன்படுத்தி யாரும் லஞ்ச லாபம் அடைவது. அதை நான் என்றாவது அறிந்திருந்தால் அன்றே பதவி விலகிருப்பேன். நேர்முக மறைமுக கலெக்‌ஷன் என்று ஒன்று இருந்தால் மட்டுமே எலெக்‌ஷன் சூடு பிடிக்குமோ என்னவோ?

அதிரடி அறிக்கைகளும், ஆர்ப்பாட்டங்களும் காண்கையில் பொதுமக்களுக்கும் அதுவே தோன்றுகிறது. நியாயம் கேட்க நீதிமன்றத்தில் பல வாசல்கள் உண்டு. முடிவாய் உரிமையை நன்முறையில் நிலைநாட்ட தேர்தல் என்ற ஒன்று மிக அருகில் இருக்கையில் பூட்டு போட்டு வன்முறையில் ஈடுபடுவது அநாகரீகமானது என்பதை நான் மட்டுமல்ல, நீதிமன்றமும் வன்மையாக கண்டித்துள்ளது.

சகலரிடமும் சுமூகமாக நேசக்கரம் நீட்டுபவன் நான். வன்முறையில் துளியும் நம்பிக்கை இல்லாதவன். சங்க பதவி மூலம் அந்த நட்பில் சிறு பிளவு ஏற்படுவதையும் விரும்பாதவன்.

எனவே ஆளுங்கட்சி, எதிர்கட்சி போன்ற அரசியல் நமக்குள் இருந்தால், அதை களைந்து ஒற்றுமை மேம்பட முயற்சிப்போம். நேற்று திடீரென தலைமையும், செயற்குழு உறுப்பினர்களும் என்னை துணை தலைவராக தேர்ந்தெடுத்த போது, முதலில் மறுத்து, பின் சூழ்நிலை மதித்து சம்மதித்தேன். (தேர்தலின் போதே விஷால் என்னை உயர் பொறுப்புகளுக்கு நிற்க சொல்லியும் மறுத்தவன் நான்)

இந்த அமைப்பின் பதவிக்காலம் முடியும் வரை, என்னால் இயன்ற ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று முடிவெடுத்தே EC உறுப்பினராக ஆனேன்.

இந்த பதவியில் எந்த சுகமும் இல்லை, பணிச்சுமை மட்டுமே. மிச்சமுள்ள குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவின் உச்சமான ஒரு இசைக்கலைஞனுக்கு உரிய மரியாதையை கெளரவமாக செய்து, அந்நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் தொகையை நலிந்த தயாரிப்பாளர்களுக்கு உதவிடும் வகையில் செய்யும், ஒரே ஒரு பொறுப்பை மட்டுமாவது பொறுப்பாய் செய்திட இடையூன்றி அனைவரும் இணைந்திட வேண்டுகிறேன்.

இவ்வாறு பார்த்திபன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

More Articles
Follows