சஞ்சீவ்-திவ்யா இணைந்த *மன்னிப்பாயா* குறும்படத்தை வெளியிட்டார் ஜிவி. பிரகாஷ்

GV Prakash launched Sanjeev and Divya starring Mannippaya short film“குளிர் 100 டிகிரி”, “ராஜா ராணி” சீரியல் நாயகன் சஞ்சீவ் மற்றும் “சுமங்கலி” சிரியல் நாயகி திவ்யா இருவரும் இணைந்து நடித்துள்ள குறும்படம் “மன்னிப்பாயா”.

தந்தையின் கனவை நிறைவேற்ற துடிக்கும் இளைஞனின் வாழ்வில் காதல் வந்தால், அவன் வாழ்க்கை எவ்வாறு மாறும் என்பதை எதார்த்தமாகவும் அழகாககவும் இயக்குநர் கூறியுள்ளார்.

மேலும் ஒவ்வொரு காதல் பிரிவிற்கு பின் ஒரு அழகான வாழ்க்கை உள்ளது என்பதையும் உணர்வுப் பூர்வமாக படமாக்கியுள்ளார்.

இக்குறும்படத்தை சத்யசீலன் தயாரித்து இயக்கியுள்ளார். இவர் “வீரையன்”, “சுட்டு பிடிக்க உத்தரவு”, “அதோ அந்த பறவை” ஆகிய திரைபடங்களில் துணை இயக்குனராக பணிபுரிந்தவர்.

இக்குறும்படத்திற்கு சூர்யாகாந்தி ஒளிப்பதிவு செய்துள்ளார், மலேசியாவை சேர்ந்த ஸ்டேன்லி ராய் பிரான்சிஸ் என்பவர் இசையமத்துள்ளார். எடிட்டிங் பொறுப்பினை ஸ்ரீநாத் ஏற்றுள்ளார். ப்ரோமோ எடிட் மற்றும் VFX பணிகளை சேவியர் கவனித்துள்ளார்.

மேலும் இக்குறும்படத்திற்கு மலையாளத்தில் பிரியா வாரியர் நடித்த “ஒரு அடார் லவ்” படத்தின் பாடலை பாடிய ஜுபீர் மொஹாமத் ஒரு பாடலை பாடி உள்ளார்.

முன்னதாக இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதியும், பாடல்களை நடிகர் அசோக் செல்வனும் வெளியிட்டிருந்தனர்.

அவர்களின் வரிசையில் நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமார் இக்குறும்படத்தினை வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

GV Prakash launched Sanjeev and Divya starring Mannippaya short film

Overall Rating : Not available

Related News

Latest Post