ஓகி புயல் பாதிப்பு; கிரௌட் பண்ட் மூலம் நிதி திரட்டும் ஜிவிபிரகாஷ்

ஓகி புயல் பாதிப்பு; கிரௌட் பண்ட் மூலம் நிதி திரட்டும் ஜிவிபிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GV Prakash crowdfunds to help families affected by Ockhi cycloneசில நாள்களுக்கு முன்பு ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

கடலோரப் பகுதிகளில் இருந்த மீனவக் குடும்பங்கள் அதிக பாதிப்புகளை சந்தித்தன. இதனால், ஒகி புயலால் பாதிக்கப்பட்ட ஐநூறு மீனவர்கள் மற்றும் விவசாய மக்களுக்கு உதவுவதற்காக முதன்முதலில் கிரௌட் பண்ட் என்ற முறையில் நிதி திரட்டப்படுகிறது.

இதற்கான முயற்சியை இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி பிரகாஷ்குமார் தொடங்கியுள்ளார்.

எதுதர்மா (Edudharma) என்ற பெயரில் இயங்கும் வலைதள முகவரி மூலமாக இந்த நிதி திரட்டுப்பட்டு வருகிறது. இதுதொடர்பான பணிகளை ஜி.வி.பிரகாஷின் நண்பரும், சமூக சேவகருமான குணசேகரன் மேற்கொண்டுவருகிறார்.

இதுபற்றி அவர் கூறியதாவது…

”தென் கடலோர மாவட்டங்களில் ஒகி புயலால் மக்கள் பாதிக்கப்பட்டபோது கன்னியாகுமரிக்கு நேராக சென்று நடிகர் ஜி.வி.பிரகாஷ் தன்னால் முயன்ற உதவிகளைச் செய்தார்.

மேலும், அப்போது குடும்ப உறுப்பினர்களை முழுவதுமாக இழந்து தனியாளாக ஆதரவற்று நின்ற சின்னத்துறையைச் சேர்ந்த செல்வராணி என்ற பெண்மணிக்கு தன்னாலான உதவிகளைச் செய்தார்.

அப்போது அங்குள்ளவர்கள் எங்களுக்கும் ஜி.வி பிரகாஷ்குமார் ஏதேனும் உதவி செய்யமாட்டாரா? என ஏக்கத்துடன் கேட்டனர். அதற்காகவும், கல்வி மற்றும் உடல் நலம் குறித்த திட்டங்களுக்காகவும் அங்கு பாதிக்கப்பட்ட மக்கள்குறித்த தகவலை எங்களுடைய உறுப்பினர்கள் மூலம் சேகரித்து, அதில் முதலில் ஐநூறு பேருக்கு கிரௌட் பண்ட் என்ற உத்தி மூலம் நிதி திரட்டி ஆதரிக்க எண்ணினோம்.

இத்திட்டத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டதுடன், தன்னுடைய பங்களிப்பாக ஒரு சிறிய தொகையைக் கொடுத்து இந்த கிரௌட் பண்ட் நிதி திரட்டும் திட்டத்தைத் தொடங்கிவைத்தார்” என்றார்.

இதுதவிர, ஜி.வி பிரகாஷ்குமார் ஏற்கெனவே இந்த எதுதர்மா என்ற அறக்கட்டளை மூலம் கதிரவன் என்ற தடகள வீரர் பயிற்சியை மேற்கொள்வதற்குத் தேவையான நிதி உதவியான ஒரு லட்சத்தை வழங்கியிருக்கிறார் என்பதும், கள்ளக்குறிச்சி என்ற ஊரில் உள்ள அரசு பள்ளிக்கு கழிப்பறை ஒன்றைக் கட்டிக் கொடுக்க நிதி உதவி அளித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

GV Prakash crowdfunds to help families affected by Ockhi cyclone

gv prakash

புருஸ்லீ மாதிரி உள்குத்து இருக்காது… ஜிவி. பிரகாஷ் பட இயக்குனர் கிண்டல்

புருஸ்லீ மாதிரி உள்குத்து இருக்காது… ஜிவி. பிரகாஷ் பட இயக்குனர் கிண்டல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ulkuthuகார்த்திக் ராஜீ இயக்கத்தில் விட்டல் ராஜ் தயாரித்துள்ள படம் உள்குத்து.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படத்தில் தினேஷ், நந்திதா, சரத் லோகித், ஆர்ஜெய், பாலசரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டு இருந்த இப்படம் ஒருவழியாக இந்த மாதம் டிசம்பர் 29ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

எனவே இப்படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான புரூஸ் லீ பட இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது…

உள்குத்து படம் நன்றாக வந்துள்ளது. இப்படம் நிச்சயமாக நான் இயக்கிய புரூஸ்லீ படம் போல இருக்காது.” என்று தன் படத்தையே கலாய்த்துக் கொண்டு பேசினார்.

பத்திரிகையாளர்களை மெர்சலாக்கிய சங்கு சக்கரம் படக் குழந்தைகள்

பத்திரிகையாளர்களை மெர்சலாக்கிய சங்கு சக்கரம் படக் குழந்தைகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sangu chakkaram press meetஇயக்குனர் பி. வாசுவிடம் உதவி இயக்குநராக பணி புரிந்தவர் ரஞ்சித். ரஜினி நடித்த குசேலன் படம் வரை அவரிடம் உதவி இயக்குனராக பணி புரிந்துள்ளார்.

தற்போது மாரிசன் என்று தன் பெயரை மாற்றி, சங்கு சக்கரம் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

புன்னகை பூ கீதா, திலீப் சுப்பராயன் மற்றும் 10 குழந்தைகள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

சினிமாவாலா மற்றும் லியோ விஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படம் வருகிற டிசம்பர் 29ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இன்று சற்றுமுன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர்.

பொதுவாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகர், நடிகைகள், கலைஞர்கள் படம் பற்றி பேசுவார்கள். இது வழக்கமான ஒன்றுதான்.

ஆனால் இன்று நடைபெற்ற நிகழ்வில் மோனிகா, தேஜா உள்ளிட்ட படத்தில் நடித்த குழந்தைகள் அனைவரும் பேசினார்கள்.

பகலில் பள்ளிக்கு சென்று இரவில் சூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றதையும், அங்கு உறங்க வேண்டும் என்று அடம் பிடித்ததையும் பகிர்ந்து கொண்டார்கள்.

மேலும் 2 மணி நேரம் மேக்கஅப் போட்டு அதை அழிக்க ஒரு மணி நேரம் ஆகும் என்பதையும் குழந்தை மோனிகா பகிர்ந்துக கொண்டார்.

தயாரிப்பாளர் சதீஷ் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வரும்போது எங்களுக்கு கிண்டர் ஜாய் மற்றும் சாக்லேட்டுக்கள் வாங்கி தருவார் என்றும் பேசினார்கள்.

ஒவ்வொருவரும் தங்கள் மழலை மொழி மாறாமல் அதே சமயம் நாமே வியக்கும் அளவுக்கு தெளிவாக பேசி அசத்தினர்.

இது பத்திரிகையாளர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தியது.

அந்த குழந்தைகளை அனைவரும் வாழ்த்தி சென்றனர்.

கமல் ரசிகர்களின் மெகா மருத்துவ முகாம்; ஆரி-ரோபா சங்கர் கலந்து கொண்டனர்

கமல் ரசிகர்களின் மெகா மருத்துவ முகாம்; ஆரி-ரோபா சங்கர் கலந்து கொண்டனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal haasanமத்திய சென்னை #கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில், மாவட்ட பொறுப்பாளர் கோமகன் கமல் தலைமையில் நடைபெற்ற மெகா மருத்துவ முகாமை தொடங்கி வைத்து நலத் திட்ட உதவிகள் வழங்கிய நடிகர் ஆரி, பிக்பாஸ் புகழ் நடிகர் வையாபுரி, ரோபோசங்கர் மற்றும் #அகில இந்திய நற்பணி இயக்க பொறுப்பாளர் தங்கவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த மருத்துவமுகாமில் கலந்து சிறப்பித்தவர்கள் ACS மருத்துவ கல்லூரி மருத்துவமணை, வாசன் கண் மருத்துவமணை, தாய் மூகாம்பிகா பல் மருத்துவமணை.

மேலும், இவ்விழாவில், திருப்பூர் ஜீவா, ஆவடி பாபு, வட சென்னை மாறன், வேலூர் சத்யா, கதிரவன்பாபு, பாலமுருகன், கதிரவன் பாபு, சங்கர் நாராயணன், கணேஷ் சாய், சேத்பட் ரவி, உதயகுமார், பாபு, உள்ளிட்ட மத்திய சென்னை நற்பணி இயக்க நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் ராக்கர்ஸ் சிறந்த வேலைக்காரன்; நான் அதிர்ஷ்டக்காரன்… : மோகன்ராஜா

தமிழ் ராக்கர்ஸ் சிறந்த வேலைக்காரன்; நான் அதிர்ஷ்டக்காரன்… : மோகன்ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Mohan Rajaதனி ஒருவன் படத்தை தொடர்ந்து மோகன் ராஜா இயக்கிய வேலைக்காரன் படம் நாளை ரிலீஸ் ஆகிறது.

இது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் மோகன்ராஜா.

அவர் பேசியதாவது…

“நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்பேன். எனக்கு கிடைத்த பெற்றோர் முதல் அனைவரும் அதற்கு காரணம்.

என் வாழ்க்கையில் நான் எப்போதும் கஷ்டப்பட்டது இல்லை.

சொல்லப்போனால் நான் பிறக்கும்போதே ஒரு டைரக்டராகத்தான் பிறந்தேன்.

சினிமாவில் எனக்கு பின்னணி இருந்தது. எனவே அதிக பொறுப்பு இருந்தது. எந்த இயக்குனரும் முதலில் தனக்கு பிடித்த கதையை படமாக்க முடிவதில்லை.

தயாரிப்பாளருக்கு அந்த கதை பிடிக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. எனவே தயாரிப்பாளருக்காக படம் இயக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

எனவேதான் நானும் முதலில் சில ரீமேக் படங்களை இயக்கினேன். சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட பல படங்களுக்கு நல்ல தாக்கம் ஏற்பட்டது.

சினிமாவுக்கு வந்து 14 வருடங்கள் ஆகிவிட்டது. என்னை நான் நிலைநிறுத்திக் கொள்ள சில படங்கள் தேவைப்பட்டது.

அதன்பின்னரே தன் ஒருவன் படம் போன்ற சமூக பிரச்சினைகளை சொல்ல முடிந்தது.

இன்று அருவி படம் ஒருவாரம்தான் ஓடும். உடனே பார்த்து விடுங்கள் என்கிறார் தயாரிப்பாளர்.

சினிமா அப்படி ஆகிவிட்டது. வேலைக்க்காரன் படமும் அப்படிதான். 2, 3 வாரங்கள் ஓடும்.

ஏனென்றால் திருட்டு விசிடி, தமிழ் ராக்கர்ஸ் ஆகியவை உள்ளது.

என்னை பொறுத்தவரை தமிழ் ராக்கர்ஸ் சிறந்த மூளைக்காரன். அவர் மிகச்சிறந்த வேலைக்காரன் என்பேன்.

இரவு பகல் பாராமல் வேர்வை சிந்தி அந்த படத்தை வெளியிடுகிறார்கள்.

ஆனால் அவர் சிறந்த வேலைக்காரன் என்றால், எங்கள் படத்தை தாமதாக இணையத்தில் வெளியிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.” என்று பேசினார்.

சிவகார்த்திகேயன் இல்லாமல் வேலைக்காரன் இல்லை : மோகன்ராஜா

சிவகார்த்திகேயன் இல்லாமல் வேலைக்காரன் இல்லை : மோகன்ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mohan rajaசிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள வேலைக்காரன் படத்தை மோகன்ராஜா இயக்கியுள்ளார்.

இப்படம் உலகம் முழுவதும் நாளை வெளியாகிறது. எனவே பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் இயக்குநர் மோகன்ராஜா.

அவர் பேசியதாவது….

ஒரு காலத்தில் ரீமேக் படங்களை இயக்குவதால் என்னை ரீமேக் ராஜா என்றார்கள். ஆனால் அதே மீடியா என்னுடைய தனி ஒருவன் படம் வந்தபோது கொண்டாடியது.

படத்தின் முதல்நாளே நீங்கள் கொடுத்த வரவேற்புதான் என்னை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது.

என்னை பார்த்த பொதுமக்கள் பலரும் பாராட்டி பேசும்போது அவ்வளவு மகிழ்ச்சியாக உணர்ந்தேன்.

நாளை மறுநாள் வேலைக்காரன் படம் ரிலீஸ். படம் வந்தபிறகும் உங்களை சந்திக்கிறேன்.

அப்படத்தில் சமூக பிரச்சினைகளை சொல்லியிருக்கிறேன். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது.

சிவகார்த்திகேயன் இல்லையென்றால் இந்த படம் வந்திருக்காது.” என்றார்.

More Articles
Follows