விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு..: ஏர்முனை கடவுள் விவசாயி – ஜிவி பிரகாஷ்..; அதிகாரத்தை வழங்கியது மக்களே.. – வெற்றிமாறன்

gv prakash vetrimaaran (1)புதுடெல்லியில் கடந்த 75 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது.

கடந்த ஜனவரி 26 குடியரசு தினத்தன்று போலீஸ் தடியடியுடன் கலவரமாக மாறியது.

இந்திய தேசிய கொடி பறந்த செங்கோட்டையில் அன்றைய தினம் சீக்கிய கொடியையும் பறக்க விட்டனர் விவசாயிகளில் சிலர்.

இன்று வரை தொடர்ந்து விவசாயிகள் போராடி வருகின்றனர்.

வெளிநாட்டினர் கூட இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் தமிழக திரை பிரபலங்கள் எவரும் இது குறித்து பேசவில்லை.

இந்த நிலையில் நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் விவசாயிகள் போராட்டம் குறித்து தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.

தன் ட்விட்டர் பதிவில்…

“போராடுவதற்கான உரிமை மக்களுக்கு இருக்கிறது. அரசு மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். புதிய சட்டங்களை ஏற்றுக்கொள்ளக்கூறி வற்புறுத்துவது தற்கொலைக்குச் சமம்.

மக்கள் தங்கள் உரிமைக்காகப் போராடுவது ஜனநாயகமே. அவர்களை “ஏர்முனை கடவுள்” என்றழைத்தால் மட்டுமே நமை படைத்தவனும் மகிழ்வான்” என பதிவிட்டுள்ளார்.

இயக்குனர் வெற்றிமாறன் தன் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதாவது…

“ஆள்பவர்களுக்கு மக்கள்தான் அதிகாரத்தை வழங்கியுள்ளனர். அந்த அதிகாரம் மக்களின் நலனைக் காக்க வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களைப் போல நடந்துகொள்ளக் கூடாது.

தேசத்தின் ஆன்மாவைப் பாதுகாக்கவே விவசாயிகள் முயற்சி செய்கின்றனர். தங்களுடைய உரிமைக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றனர். அந்தப் போராட்டத்தை ஆதரிப்பதே ஜனநாயகம் ஆகும்”.

இவ்வாறு வெற்றிமாறன் பதிவிட்டுள்ளார்.

GV Prakash and Vetrimaaran supports Farmers

Overall Rating : Not available

Latest Post