விஜய் & வெற்றிமாறன் இணையும் பட பற்றி ஜிவி பிரகாஷ் தந்த சூப்பர் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமா ரசிகர்களுடன் ட்விட்டரில் உரையாடினார் ( வீடியோ வடிவில்) ஜி.வி.பிரகாஷ்.

அப்போது ஒரு ரசிகர்… விஜய் – வெற்றிமாறன் இணைந்து பணிபுரிய உள்ள படம் பற்றி கேட்டார்.

அதாவது… விஜய் – வெற்றிமாறன் படம் நடந்தால் கண்டிப்பாக நீங்கள் இல்லாமல் நடக்காது. அது எப்போது?” என்று கேட்டார்.

“கண்டிப்பாக. இருவருமே இணைந்து பணிபுரிய விரும்புகிறார்கள்.

அதற்கான நேரம்தான் அமையவில்லை. இருவருடைய படங்களை வைத்துப் பார்த்தால் 2021 அல்லது 2022-ல் இணைய வாய்ப்புள்ளது”. என்றார் ஜிவி.

சூர்யா & சூரி நடிக்கவுள்ள படங்களை இயக்கவுள்ளார் வெற்றிமாறன்.

முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் படத்தில் நடிக்கவுள்ளார் விஜய்.

இந்த படங்களை முடித்துவிட்டு இருவரும் இணையலாம்.

GV Prakash about Vijay Vetrimaaran film

இந்தியாவை கலக்கிய பேஃமிலி க்ரைம் த்ரில்லர்.; மீண்டும் மோகன்லால் – மீனா நடிப்பில் ‘த்ரிஷ்யம்-2’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏழு வருடங்களுக்கு முன் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மீனா நடிப்பில் வெளியான படம் ‘த்ரிஷ்யம்’.

மலையாள சினிமாவை கலக்கிய இப்படம் தமிழ், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, சிங்களம் உள்ளிட்ட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு எங்கும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

தமிழில் கமல் & கௌதமி நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் உருவானது.

அனைத்து பேஃமிலி ஆடியன்சாலும் ரசிக்கப்பட்ட இந்த க்ரைம் திரில்லரின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக உள்ளது.

முதல் பாக க்ளைமாக்சில் தன் குடும்பத்தால் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரியின் மகனை புதிய போலீஸ் ஸ்டேஷனில் கட்டிடத்தில் புதைத்து விட்டு திரும்புவார் ஹீரோ.

தற்போது 2ஆம் பாகத்தில் போலீஸ் அதிகாரி கண்டுபிடிக்கிறாரா? என்பதே கதையாக இருக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.

‘த்ரிஷ்யம் 2’ திரைப்படத்திலும் மோகன்லாலுக்கு ஜோடியாக மீனா நடிக்கிறார்.

(தமிழில் ரீமேக் செய்யப்பட்டால் கமலுடன் கௌதமி நடிப்பாரா? என்பதுதான் கேள்வி)

இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகளுடன் சூட்டிங் அனுமதி அளித்திருக்கும் நிலையில் இன்று பூஜையுடன் ‘த்ரிஷயம் 2’ படப்பிடிப்பு தொடங்கியது.

இத்தகவலை ட்விட்டரில் புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார் மோகன்லால்.

Mohanlals drishyam2 goes on thf floors

ஊரடங்கிலும் பொதுத்துறை வங்கிகள் ரூ 20000 கோடி மோசடி..; முறைகேடில் SBI முதலிடம்.. – ரிசர்வ் பேங்க் தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா காலத்தில் அமலில் உள்ள ஊரடங்கால் மக்கள் இயல்பு வாழ்க்கையை தொலைத்து வருமானமின்றி தவித்து வருகின்றனர்.

தனியார் பள்ளிகளில் சேர்க்க பணமில்லாமல் அரசு பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்த்து வருகின்றனர்.

ஆனால் அரசாங்கமோ பள்ளிகள் திறக்காத நிலையிலும் அரசு ஆசிரியர்களுக்கு முழு சம்பளத்தை வழங்கி வருகிறது.

மக்கள் வரிப்பணத்தில் சொகுசாக வாழும் அரசியல்வாதிகள் & அரசு அதிகாரிகள் மக்களை கண்டுக் கொள்வதில்லை.

இவை எல்லாம் ஒரு புறமிருக்க இந்த கொரோனா காலத்திலும் பொதுத்துறை வங்கிகளில், பல்வேறு நிதி முறைகேடுகள் நடைபெற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

சந்திரசேகா் கெளா் என்பவா் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கு இந்த மோசடிகளை அம்பலப்படுத்தியுள்ளது இந்திய ரிசா்வ் வங்கி.

(இந்த அம்பலம் அவர்களை ஒன்றும் செய்துவிடாது என்பது தெரிந்த ஒன்றுதான்.. மக்கள் விழிப்புணர்வு பெற்று இனியாவது நல்லவர்களை மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம்.)

நிதி முறைகேடுகள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாவது…

ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலத்தில், பொதுத்துறை வங்கிகளில் 2,867 நிதி மோசடிகள் நடைபெற்று உள்ளது.

அதன் மூலம் கிட்டத்தட்ட 20000 கோடி ரூபாய்க்கு நிதி முறைகேடு நடைபெற்று உள்ளது.

அதன் விவரம் வருமாறு…

மொத்தம் உள்ள 12 பொதுத் துறை வங்கிகளில்..

பாங்க் ஆப் இந்தியாவில் 47 மோசடிகளில், 5,125 கோடி ரூபாய் முறைகேடு

கனரா வங்கியில் 33 மோசடிகளில் 3,885 கோடி ரூபாய் முறைகேடு

பாங்க் ஆப் பரோடாவில் 60 மோசடிகளில் 2,843 கோடி ரூபாய் முறைகேடு

பாரத ஸ்டேட் வங்கியில் 2,326 கோடி ரூபாய் முறைகேடு.

இந்தியன் வங்கியில் 1,470 கோடி ரூபாய் முறைகேடு

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில் 1,208 கோடி முறைகேடு

இத்துடன்… சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, யுகோ வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி என பட்டியல் நீள்கிறது.

அதிக எண்ணிக்கையிலான நிதி முறைகேடு பாரத ஸ்டேட் வங்கியில் நடைபெற்றுள்ளதாம்.

Public sector banks report frauds worth over Rs 20000 cr in April-June says RBI

திமுக வெற்றிக்கு ரஜினியே காரணம்.; ஹிந்தி தெரியுமென்று தயாநிதி மாறனை MP ஆக்கியவர் கருணாநிதி.; சூர்யா தெரியாமல் பேசுகிறார்.. – ராதாரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் பல படங்களில் பல வேடங்களை போட்டு அசத்தியவர் டத்தோ ராதாரவி.

அதுபோல் பல கட்சிகளிலும் இவர் இருந்து பிரிந்து சென்றிருக்கிறார்.

இவர் ஓரிரு வருடங்களுக்கு முன்பு நடிகை நயன்தாரா குறித்து கேவலமாக நயன்தாரா நடித்த ‘கொலையுதிர் காலம்’ பட விழாவில் பேசினார்.

இதனையடுத்து நடிகர் ராதாரவி திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

இதனையடுத்து அதிமுகவில் இணைந்தார்.

சில மாதங்களுக்கு பின்னர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார் ராதாரவி.

இவர் மேடைகளில் பேசினாலே ஏதாவது பரபரப்பு உண்டாகும். தற்போது கொரோனா ஊரடங்கால் எந்த நிகழ்ச்சியும் இல்லை.

இந்த நிலையில் இன்று ராதாரவி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது பல்வேறு விஷயங்களை பேசினார்.

அதில்…

அடுத்தாண்டு 2021 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும்.

நடிகர் விஷால் பாஜகவில் இணைந்தால் நானும் அவருடன் இணைந்து பணியாற்ற தயார்.

நடிகர் சங்க கட்டிடம் கட்ட 2 முறை அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. நடிகர் சங்கம் உருப்படாது..

ரஜினிகாந்த் ஒரு நல்ல மனிதர். திமுக ஒரு காலத்தில் வெற்றி பெற்றதற்கு ரஜினியும் காரணம்.

நடிகர் சூர்யா எதை பேசினாலும் தெரியாமல் பேசுகிறார்.

தயாநிதி மாறனை எம்பி ஆக்கியதற்கு காரணம் அவருக்கு ஹிந்தி தெரியும் என்று சொன்னவர் கருணாநிதி.

இவ்வாறு ராதாரவி பேசினார்.

Radharavi praises super star rajinikanth

கில்லர் பர்ஃபாமென்ஸ்…; பிரிட்டன் டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் தனுஷ் & அனிருத்தின் ஹிட் சாங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரிட்டன் நாட்டில் நடத்தப்படும் ‘காட் டேலண்ட்’ என்ற நடன ரியாலிட்டி ஷோவில் மாரி பட டைட்டில் பாடல் இடம்பெற்றுள்ளது.

அந்த நிகழ்ச்சியில் மும்பையைச் சேர்ந்த டான்ஸ் குழுவினர், மாரி படப்பாடலுக்கு அக்ரோபேட்டிக்ஸ் நடனமாடி அசத்தியுள்ளனர்.

இதனையறிந்த மாரி பட டைரக்டர் பாலாஜி மோகன் ட்விட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

அந்த நடனத்தை பார்த்து ‘கில்லர் பர்ஃபாமென்ஸ்’ எனப் பாராட்டியுள்ளார்.

“மாரி தர லோக்கல்” என்ற பாடலுக்கு இசையமைத்த அனிருத்துக்கும் பாடலை எழுதி பாடிய தனுஷுக்கும் ஆகியோருக்கு பகிர்ந்துள்ளார்.

இந்த படம் 2015ம் ஆண்டு வெளியானது.

Maari Thara local song played on international tv show

அம்மா நகரும் நியாய விலை கடைகள் ஆரம்பம்..; 5,36,000 குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவர்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விரைவில் அம்மா நகரும் நியாய விலை கடை திட்டம் தொடங்கப்படும் என தெரிவித்திருந்தார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

அதன்படி தமிழகத்தில் ரூ.9 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் 3,501 நகரும் நியாயவிலைக் கடைகளுக்கான திட்டம் இன்று முதல் தொடங்கப்பட்டது.

அம்மா நகரும் நியாய விலை கடைகளுக்கான தொடக்க விழா இன்று நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 262 கடைகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 212 கடைகளும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 168 கடைகள் உள்படத் தமிழகம் முழுவதும் 3,501 நகரும் அம்மா நியாய விலை கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அம்மா நகரும் நியாய விலை வாகனங்களை தமிழக முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 5 லட்சத்து 36 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவர் என தெரிவித்துள்ளனர்.

மேலும் மலைப் பகுதிகள், காட்டுப்பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளை கவனத்தில் கொண்டு நகரும் நியாய விலை கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாம்.

TN Cm inaugurates mobile ration shops

More Articles
Follows