தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்தியா & சீனா ராணுவத்திற்கிடையே ஏற்பட்ட மோதலின்போது 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இதையடுத்து, சீனாவுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக நாட்டின் இறையாண்மை & தேச நலன் பாதுகாப்பு ஆகிய அடிப்படையில் ஜூன் மாதம் இறுதியில் சீனாவைச் சேர்ந்த 59 மொபைல் செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது.
டிக்டாக், ஹலோ, யூசி பிரவுசர் உள்ளிட்ட செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
இதன்பின்னர் செப்டம்பர் 2-ம் தேதி 118 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது மேலும் 43 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69 ஏ இன் கீழ் 43 மொபைல் ஆப்களை இந்தியாவில் பயனர்கள் அணுகுவதைத் தடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Govt bans 43 Chinese apps in India