கவர்னர் இல.கணேசன் இல்ல விழா.; ஸ்டாலின் – மம்தா – தமிழிசை – ரஜினி பங்கேற்பு

கவர்னர் இல.கணேசன் இல்ல விழா.; ஸ்டாலின் – மம்தா – தமிழிசை – ரஜினி பங்கேற்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மேற்கு வங்கம் பொறுப்பு மற்றும் மணிப்பூர் மாநில ஆளுநர் இல.கணேசனின் சகோதரர் இல.கோபாலன் 80ஆவது பிறந்த நாள் (சதாபிஷேகம்) விழா சென்னை கோடம்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது.

இதில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த விழாவில் தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றுள்ளார்.

ரஜினிகாந்த் இன்று காலை அந்த விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். அவர் தன. வழக்கமான ஸ்டைலில் விறுவிறுவென நடந்து சதாபிஷேக விழா மண்டப மேடைக்கு சென்றார்.

பின்னர் மேடையில் இருந்து கீழே இறங்கி வந்த ரஜினிகாந்த் மேற்கு வஅங்கு முதல்வர் மம்தா பேனர்ஜியிடம் பேசினார்.

பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் கட்சி பேதமின்றி இல. கணேசன் சகோதரர் சதாபிஷேக விழாவில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘வீரா’ & ‘படையப்பா’ பாணியில்..; ‘ஜெயிலர்’ பட சூட்டிங் & ரிலீஸ் அப்டேட்ஸ்

‘வீரா’ & ‘படையப்பா’ பாணியில்..; ‘ஜெயிலர்’ பட சூட்டிங் & ரிலீஸ் அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ‘ஜெயிலர்’.

இந்தப் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது.

சில வாரங்களுக்கு முன்பு புதுச்சேரி – கடலூர் பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது சென்னை புறநகர் பகுதிகளான கிழக்கு கடற்கரை சாலை, எண்ணூரில் நடந்து வருகிறது.

தற்போது, சூட்டிங் 50% நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில் ‘ஜெயிலர்’ படத்தை அடுத்தாண்டு 2023, ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கு முன் ரஜினி நடித்த வீரா, அருணாச்சலம், படையப்பா உள்ளிட்ட படங்கள் தமிழ் புத்தாண்டு சமயத்தில் (ஏப்ரல்) வெளியானது குறிப்பிட்டத்தக்கது.

மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி உடன் இணையும் விஜய் சேதுபதி

மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி உடன் இணையும் விஜய் சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் சேதுபதி அடுத்ததாக மற்றொரு ஜாம்பவானுடன் இணைகிறார் என்று சூடான செய்தி இப்போது
வந்துள்ளது, அவர் வேறு யாருமல்ல, பல தேசிய விருதுகளை வென்ற பவர்ஹவுஸ் நடிகரான மம்முட்டி தான்.

இந்தப் படத்தை ‘காக்கா முட்டை’, ‘ஆண்டவன் கட்டளை’, ‘கடைசி விவசாயி’ ஆகிய படங்களை இயக்கிய மணிகண்டன் இயக்குகிறார்.

விஜய் சேதுபதி தனது பிஸியான கால அட்டவணைக்கு மத்தியில் இந்த படத்திற்காக உடனடியாக தேதிகளை ஒதுக்கியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன, மீதமுள்ள நடிகர்கள், குழுவினர் விவரம் விரைவில் வெளியாகும்.

ராம் சரண் படத்துக்காக அதிரடியான அறிமுக காட்சியை படமாக்கிய இயக்குனர் சுகுமார்

ராம் சரண் படத்துக்காக அதிரடியான அறிமுக காட்சியை படமாக்கிய இயக்குனர் சுகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் தயாரிப்பின் போது மெகா பவர் ஸ்டார் ராம் சரணை வைத்து சுகுமார் தனது படத்தின் தொடக்க காட்சியை படமாக்கினார் என்று கூறப்படுகிறது.

அந்த சமயம் சரண் உடலை மெருகேற்றி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

அந்த வாய்ப்பை பயன்படுத்தி அவருடன் ஒரு காட்சியை படமாக்கினார் இயக்குனர் சுகுமார்.

கடந்த ஆண்டு, ராஜமௌலியே அந்தக் காட்சி என்னவென்று தனக்குத் தெரியும் என்று தெரிவித்தார்.

மேலும் அச்செய்தியை நான் வெளியிட்டால் , சுகுமாருக்கு மாரடைப்பே வந்துவிடும் என பதில் அளித்தார்.

‘இந்தியன் 2’ படத்தில் கமலுடன் இணைந்த ரஜினியின் ‘தர்பார்’ பட நடிகர்

‘இந்தியன் 2’ படத்தில் கமலுடன் இணைந்த ரஜினியின் ‘தர்பார்’ பட நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைக்கா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன்.

இதில் கமலுடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைக்கும் இப்பட படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது.

தற்போது இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வரும் நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் அப்பா யோக்ராஜ் சிங் இதில் நடித்து வருவதாக அவரே தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்..

‘இந்தியன் 2’ படத்திற்காக மேக்கப் போட்டு தான் நடித்து வருவதாக போட்டோவை பகிர்ந்துள்ளார் யோக்ராஜ்.

இவர் ஏற்கனவே பாலிவுட்டில் நிறைய படங்களில் நடித்துள்ளார். தமிழில் ரஜினிகாந்தின் ‘தர்பார்’ படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று அஜித் படங்களை இயக்கியவருக்கு வாய்ப்பளிக்கும் கமல்ஹாசன்

மூன்று அஜித் படங்களை இயக்கியவருக்கு வாய்ப்பளிக்கும் கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித்குமார் நடித்த ‘நேர் கொண்ட பார்வை’ மற்றும் ‘வலிமை’ ஆகிய படங்களை இயக்கியவர் எச். வினோத்.

தற்போது அஜித்தின் ‘துணிவு’ படத்தையும் இயக்கியுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற வங்கி்க் கொள்ளையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளது.

மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடிக்க ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் 2023 பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது.

தொடர்ந்து அஜித் படங்களை இயக்கிய வினோத்துக்கு தற்போது கமல்ஹாசன் வாய்ப்பு வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியன் 2 படத்தை முடித்துவிட்டு வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பார் என கூறப்படுகிறது.

More Articles
Follows