பெற்றோரே சத்துணவு முட்டையை வாங்கி கொள்ளலாம்..; நாப்கின் எப்படி கொடுப்பீங்க..? அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

tn studentsகொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக நாடெங்கிலும் பள்ளிகள் திறக்கப்படவில்லை.

எனவே தமிழக பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படாமல் உள்ள முட்டைகளை அவர்களின் பெற்றோர் மூலமாக வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு மெட்ராஸ் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், மாணவர்களை தினமும் பள்ளிகளுக்கு அழைத்து முட்டை வழங்குவது பாதுகாப்பாக இருக்காது.

எனவும், முட்டை கொள்முதல் செய்வதிலும் சில இடர்பாடுகள் இருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சத்துணவுத் திட்டத்தின் கீழ் வழங்கிவந்த முட்டைகள் ஊரடங்கால் தடைபட்டு விடக்கூடாது என்பதால் மாணவர்களுக்கு அரசு தொடர்ந்து முட்டை வழங்க வேண்டும் எனத் தெரிவித்தனர் நீதிபதிகள்.

அதன்படி மாணவர்களின் பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்து முட்டைகள் வழங்கலாம் என தெரிவித்தனர்.

முட்டைகளை தினம்தோறும் வழங்குவதா, வாரம்தோறும் மொத்தமாக வழங்குவதா போன்றவற்றை அரசே முடிவெடுத்துக்கொள்ளலாம்.

மாணவிகளுக்கு சானிடரி நாப்கின் எப்படி வழங்குவது? என்பதையும் அரசு திட்டமிட வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Overall Rating : Not available

Latest Post