‘இமானுக்கு சம்பளமே கொடுக்க கூடாது…’ – இயக்குநர் ஆர்.கே. செல்வமணி

ggsr imman with heroinesஅம்மா கிரியேஷன்ஸ் T.சிவாவின் வெள்ளி விழா வருட திரைப்படம் ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்.

இதன் ஆடியோ வெளியீட்டு விழாவில் அதர்வா முரளி, சூரி, ரெஜினா கசன்றா, அதீதி போஹன்கர், இசையமைப்பாளர் டி.இமான், இயக்குநர் ஓடம் இளவரசு, பிக்பிரிண்ட் கார்த்தி, 2எம்.பி ரகு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் FEFSI தலைவர் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி பேசியது…

இப்படத்துக்கு ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் என்ற மிகச்சிறப்பான தலைப்பு தமிழில் உள்ளது அதை GGSR என்று ஆங்கிலத்தில் அழைப்பது தவறாகும்.

வரிவிதிப்புக்காக தமிழில் பெயர் வைக்கக்கூடாது. தமிழ் மேல் பற்றோடு நாம் தமிழில் தலைப்பு வைக்க வேண்டும்.தமிழ் நிலைத்து இருக்கவேண்டும் என்றால் எல்லோரும் தமிழில் பெயர் வைக்க வேண்டும்.

தயாரிப்பாளர் சிவா இசையமைப்பாளர் இமானுக்கு சம்பளமே கொடுக்க வேண்டாம். அப்படி கொடுத்திருந்தால் திருப்பி வாங்கி விடுங்கள். இப்படி நான்கு கதாநாயகிகளோடு சேர்ந்து அவர் இருக்கும் புகைப்படத்தை பார்க்கும் போது எனக்கு பொறாமையாக உள்ளது.

எனக்கு முதல் படம் கிடைக்க காரணமாக இருந்தவர் அம்மா க்ரியேஷன் சிவா தான். அவர் தான் தயாரிப்பாளர் ராவூதரிடம் பேசி எனக்கு முதல் பட வாய்ப்பை வாங்கி தந்தார்.

அந்த படத்தை இடையில் வேறொரு இயக்குநரிடம் போனது. அந்த சமயத்திலும் தயாரிப்பாளர் ராவூத்தரிடம் பேசி மீண்டும் எனக்கு முதல் பட வாய்ப்பை வாங்கி தந்தவர் சிவா அவருக்கு நான் எப்போதும் நன்றி கடன் பட்டிருக்கிறேன் என்றார் ஆர்.கே.செல்வமணி.

ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் இசை வெளியீட்டு விழாவுக்கு இடையே இயக்குநர் வெங்கட் பிரபுவின் பார்ட்டி திரைப்படத்தின் முதல் பார்வை வெளியிட்டு விழா நடந்தது.

இதில் இயக்குநர் வெங்கட் பிரபு, படத்துக்கு இசையமைக்கும் சத்யா ராஜ், ரம்யா கிருஷ்ணன், சிவா, கயல் சந்திரன், ரெஜினா சசன்றா, நிவேதா பெத்துராஜ்,சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

GGSR Producer should not give salary to Imman says RK Selvamani

Overall Rating : Not available

Related News

Latest Post