தனுஷுக்கு வில்லனாக கௌதம்மேனன் மாற என்ன காரணம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன் படங்களில் ஹீரோவுக்கு இணையான வில்லன்களை தேர்ந்தெடுத்து மாஸ் காட்டி வருபவர் கௌதம்மேனன்.

‘காக்க காக்க’ ஜீவன் முதல் ‘என்னை அறிந்தால்’ அருண்விஜய் வரை பல வில்லன்களை உதாரணமாக சொல்லலாம்.

இந்நிலையில், தனுஷ் நடித்து வரும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்திற்கும் வில்லன் வேட்டை நடத்தி வந்தார்.

ஆனால் தனுஷை எதிர்க்கும் சரியான வில்லன் கிடைக்கவில்லையாம்.

எனவே இறுதியாக தானே நடிக்கலாம் என களமிறங்கிவிட்டாராம் கவுதம்.

இதில் இவர்கள் மோதும் சண்டைக் காட்சிகள் இல்லை என்றாலும், தனி ஒருவன் ஸ்டைலில் அழகான வில்லத்தனம் செய்திருக்கிறாராம் கௌதம்.

கபாலிக்கு பிறகு சூப்பர் ஸ்டாரின் அடுத்த ரிலீஸ் திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கபாலி படத்தின் கேரள உரிமையை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் வாங்கியிருந்தார்.

இப்படத்தை 300க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியிட்டார்.

இந்நிலையில் தற்போது ஜீனியர் என்டிஆருடன் இவர் நடித்துள்ள நேரடி தெலுங்கு படமான “ஜனதா கேரேஜ்” படத்தை கேரளாவில் வெளியிட உள்ளார்.

200 தியேட்டர்களில் இப்படத்தை வெளியிட இருக்கிறாராம்.

கொரட்ல சிவா இயக்கியுள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சமந்தா மற்றும் நித்யா மேனன் இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர்.

இப்படம் செப்டம்பர் 1ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.

சிவகார்த்திகேயனுக்கு சிக்கலை ஏற்படுத்திய விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

படத்தின் விநியோகமும் ஜெட் வேகத்தில் பறந்து வருகிறது.

இந்நிலையில் இதே நாளில் ஜீவாவின் கவலை வேண்டாம், விஜய் சேதுபதியின் றெக்க உள்ளிட்ட படங்களும் ரிலீஸ் ஆகிறது.

அண்மையில் வெளியான தர்மதுரை, நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளதால் றெக்க படத்திற்கும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் றெக்க படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றிருக்கும் சிவபாலன் பிக்ஸர்ஸ், இப்படத்தை தமிழகத்தில் மட்டும் 550க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறாராம்.

இதனால், பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகிய சிவகார்த்திகேயன் படத்திற்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் உண்டாகும் எனத் தெரிகிறது.

உலகளவில் ரஜினி மகள் ஐஸ்வர்யா தனுஷுக்கு கிடைத்த பெருமை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ரஜினிகாந்தின் மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா படங்களை இயக்கி வருகிறார்.

தற்போது இவருக்கு சர்வதேச அளவில் பெருமைமிக்க அங்கீகாரம் கிடைத்துள்ளது.

ஐ.நா அமைப்பின் பெண்கள் நல்லெண்ண தூதராக தென்னிந்தியாவுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இது அறிவிக்கப்பட்ட முதல் இவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

எம்மா வாட்சன், Anne Hathaway, Nicole Kidman போன்ற பிரபல நடிகைகளும் இதுபோன்ற பதவிகளை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஃபுல் மப்புல கார் ஓட்டி போலீஸ் வண்டியில் இடித்த அருண்விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பல படங்களிலும் ஹீரோவாகவும், அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாகவும் நடித்தவர் அருண் விஜய்.

இவர் இன்று அதிகாலை 2,30 மணியளவில் நடிகை ராதிகா மகள் வரவேற்பு பார்ட்டியை முடித்துக் கொண்டு வீடு திரும்பியிருக்கிறார்.

அப்போது நன்றாக குடி போதையில் இருந்திருக்கிறார்.

இதனால், சென்னை நுங்கம்பாக்கம் அருகே நின்று கொண்டிருந்த போலீஸ் வாகனத்தில் மோதியுள்ளார்.

எனவே, அருண் விஜய்யின் காரை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தை விஜயகுமாரிடம் இது தொடர்பாக போலீசார் விசாரித்துள்ளனர்.

விஜய்யின் ராசி படியே தலைப்பை உறுதி செய்த படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரதன் இயக்கத்தில் விஜய் தன் 60வது படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு கடந்த சில தினங்களாகவே நம்ம வீட்டுப்பிள்ளை, உங்க வீட்டுப்பிள்ளை மற்றும் நம்ம வீட்டு பிள்ளை என்று பெயர்களில் ஒன்று வைக்கப்படலாம் என செய்திகள் வந்தன.

இதனிடையில் எம்ஜிஆர் ரசிகர்கள் இதுபோன்ற தலைப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

எனவே ரஜினி-மம்மூட்டி நடித்து சூப்பர் ஹிட்டடித்த தளபதி என்ற டைட்டிலையே வைக்க முடிவு செய்து இருக்கிறார்களாம்.

விஜய்யே இந்த டைட்டிலை பரிந்துரை செய்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் சமீபகாலமாக வந்த விஜய் படங்களில் தலைப்பு ஒரு வார்த்தையாகவே இருந்தது.

கத்தி, ஜில்லா, துப்பாக்கி, தெறி, உள்ளிட்ட இவை அனைத்தும் வெற்றியை பெற்றுள்ளதால், அந்த ராசி படியே தலைப்பிட முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

More Articles
Follows