துல்கர் சல்மான் படத்தில் நடிகராக டைரக்டர் கௌதம் மேனன்!

Gautham Menon part of Dulquers 25th film Kannum Kannum Kollaiyadithaalஇது நாள் வரை கேமராவுக்கு பின்னால் இருந்து ரசிகர்களை கவர்ந்த கௌதம் வாசுதேவ் மேனன், அவரது ஸ்டைலான நடிப்பு திறன்களை ரசிகர்களுக்கு வழங்க இருக்கிறார்.

தென்னிந்திய இளம் ரசிகர்களின் கனவு நாயகனான நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார்.

இயக்குனர் தேசிங் பெரியசாமி இது பற்றி கூறும்போது…

“கௌதம் சார், எங்கள் படத்தில் ஒரு உற்சாகமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த கதாபாத்திரத்தில் நடிக்க அவர் தான் பொருத்தமாக இருப்பார் என நினைத்து, ஒரு வருடத்திற்கும் மேலாக அவருக்கு மெசேஜ் அனுப்பி, அவரை நடிக்க கேட்டு வந்தேன்.

ஒரு கட்டத்தில் நான் நம்பிக்கை இழந்தபோது, அவர் பொதுவாக அவரை சந்திக்க அழைத்தார். நாங்கள் கதையைத் தவிர்த்து வாழ்க்கையைப் பற்றி நிறைய பேசினோம்.

ஆனால் கடைசியாக, அவர் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அந்தக் கட்டத்தில் கனவு மெய்ப்பட ஆரம்பமானது, இப்போது ரசிகர்களை மகிழ்விக்க தயாராக உள்ளது” என்றார்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்பது தற்போதைய இளம் தலைமுறையிடம் இருந்து எடுக்கப்பட்ட ஒரு கதை, அதில் இளைஞர்கள் நடிக்க, அவர்களுக்கு அர்ப்பணிக்கப்படும் ஒரு படம்.

நடிகர் துல்கர் சல்மான் மற்றும் நடிகை ரிது வர்மா ஜோடியாக நடிக்க, இந்த படத்தில் KPY புகழ் ரக்ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, நிரஞ்சனி அகத்தியன் நடிகையாக அறிமுகமாகிறார்.

தேசிங் பெரியசாமி இயக்க, ஆண்டோ ஜோசப் ஃபிலிம் கம்பெனி சார்பில் ஆண்டோ ஜோசப் தயாரிக்கிறார்.

Gautham Menon part of Dulquers 25th film Kannum Kannum Kollaiyadithaal

Overall Rating : Not available

Latest Post