பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக ஸ்ரீதிவ்யா

sri divya gautham karthikபத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார்

எல்.சிந்தன், ராஜேஷ்குமார் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்.

இவர்கள் தயாரிப்பில் பத்ரி வெங்கடேஷ் ஏற்கனவே ‘பிளான் பண்ணி பண்ணணும்’ என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய படத்தை பற்றி டைரக்டர் பத்ரி வெங்கடேஷ் கூறியதாவது:-

“ஒரு படம் தயாரிப்பில் இருக்கும்போதே அந்த படத்தின் டைரக்டருக்கு அதே தயாரிப்பாளர்கள் இன்னொரு புதிய படத்தையும் இயக்கும் வாய்ப்பை தருவது அபூர்வம்.

எனக்கு அப்படி ஒரு வாய்ப்பை கொடுத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி.

வடசென்னையைச் சேர்ந்த ‘வெரலு’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் கௌதம்

அவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா, ‘பிசியோதெரபிஸ்ட்’ வேடத்தில் வருகிறார்.

கதாநாயகன் கவுதம் கார்த்திக் ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். அதில் இருந்து அவர் எப்படி வெளியே வருகிறார்? என்பதுதான் கதை.

இதன் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க இருக்கிறது. சென்னை, ராஜஸ்தான், குஜராத், கேரளா ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.”

இவ்வாறு பத்ரி தெரிவித்துள்ளார்.

Gautham Karthik and Sri Divya joins for Badri Venkatesh film

Overall Rating : Not available

Related News

Latest Post