கௌதம் கார்த்திக் & பத்ரி வெங்கடேஷ் கூட்டணியில் புதிய படம்

கௌதம் கார்த்திக் & பத்ரி வெங்கடேஷ் கூட்டணியில் புதிய படம்

தங்கள் தயாரிப்பில் ஒரு இயக்குநரின் படம் வெளியாகும் முன்னரே, அவரை புதிய படத்திற்கும் ஒரு தயாரிப்பாளர் ஒப்பந்தம் செய்வது, தமிழ் சினிமாவில் அரிதாக நிகழும் சம்பவம். Positive Print Studios LLP நிறுவன தயாரிப்பாளர்கள் L சிந்தன் மற்றும் ராஜேஷ் குமார் இருவரும், இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் “பிளான் பண்ணி பண்ணனும்” படத்தின் இறுதி வடிவத்தை பார்த்து, வியந்து, அவரை தங்களது அடுத்த, புதிய படத்திலும் ஒப்பந்தம் செய்துள்ளார்கள்.

இந்த புதிய படத்தில் கௌதம் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார்.

Positive Print Studios LLP நிறுவன தயாரிப்பாளர்கள் L சிந்தன் மற்றும் ராஜேஷ் குமார் இது குறித்து கூறியதாவது…

எங்கள் மனதை கவர்ந்த இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் உடன் மேலும் ஒரு புதிய படத்தில் இணைவது பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. அவருடைய இயக்கத்தில் நாங்கள் தயாரித்த முதல் படம், ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவான “பிளான் பண்ணி பண்ணனும்” எங்களுக்கு மிகப்பெரும் திருப்தியை தந்துள்ளது. “பிளான் பண்ணி பண்ணனும்” படத்தின் இறுதி வடிவம் ஒரு தயாரிப்பாளாரக எங்கள் எதிர்பார்ப்பை பலமடங்கு பூர்த்தி செய்து, பெரும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. உலகளாவிய வகையில் அனைத்து ரசிகர்களையும் இப்படம் கண்டிப்பாக கவரும். ஆக்‌ஷன் கலந்த கமர்ஷியல் தன்மை கொண்ட, மற்றுமொரு அட்டகாசமான திரைக்கதையுடன் அவர் எங்களை அனுகியபோது, உடனடியாக அவருடன் மீண்டும் இணைந்து பணிபுரிய ஒப்புக்கொண்டோம். எந்தவகையான கதாப்பாத்திரத்திலும் கலக்கும் இளம் நடிகர் கௌதம் கார்த்திக் இப்படத்தில் இணைந்திருப்பது மெலும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இப்படம் இதுவரை அவர் திரைவாழ்வில் செய்திராத, முழுக்க முழுக்க ஆக்‌ஷன் அவதாரத்தில் அவரை காட்டும் படமாக இருக்கும்.

இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் கூறியதாவது….

முதலில் இந்த இக்கட்டான சூழ்நிலையில் பெரும் ஆதரவாக இருந்து, புதிய படத்தை துவக்கவும் காரணமாக இருக்கும் தயாரிப்பாளர்கள் L சிந்தன் மற்றும் ராஜேஷ் குமார் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன். இருவரும் எனது புதிய திரைக்கதையால் கவரப்பட்டார்கள். இந்த கடினமான சூழல் எந்த ஒரு தயாரிப்பாளருக்கும் கடும் பிரச்சனைகளை தந்து வருகிறது என்பதால் படத்தின் பட்ஜெட்டை மாற்றியமைக்கும் எண்ணத்தில் இருந்தேன், ஆனால் இருவருமே அதை மறுத்து, திரைக்கதை கேட்பதை அப்படியே எடுப்போம். இறுதி வடிவமே முக்கியம் என்றார்கள். சினிமா மீதான அவர்களின் காதலும், என் மீதும் திரைக்கதை மீதும் அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும் எனக்கு பெரும் மகிழ்வை தந்தது. அவர்களுக்கு நான் பெரும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இளமை நாயகனாகவும் திறமை வாய்ந்த நடிகராகவும் கலக்கி வரும் கௌதம் கார்த்திக்குடன் இப்படத்தில் இணைந்த்திருப்பது பெரும் மகிழ்ச்சி.

தற்போதைய நிலையில் “தயாரிப்பு எண் 2” என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்கவுள்ளது. 2021 மார்ச் மாதம் படத்தின் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் நடிகர்கள் குழு பற்றிய தகவல்கள் அதிகாரப்பூர்வமாக மிகவிரைவில் வெளியிடப்படும்.

Gautham Karthik and Badri Venkatesh joins for a new film

தமிழக பெண் உருவாக்கிய அசத்தலான ஆஃப் Reto – நடிகை இந்துஜா வெளியிட்டார்

தமிழக பெண் உருவாக்கிய அசத்தலான ஆஃப் Reto – நடிகை இந்துஜா வெளியிட்டார்

ஸ்மார்ட்போன்களின் வருகையால் சோசியல் மீடியா எனப்படும் சமூக வலைதளப் பக்கங்களின் வருகை அதிகரித்திருப்பதோடு,
இளைஞர்களுக்கான பொழுதுபோக்கு ஆஃப்களின் வருகையும் அதிகரித்துள்ளது. ஆனால், இத்தகைய ஆஃப்கள் பெரும்பாலும் இந்தியா
அல்லாமல், பிற நாடுகளைச் சேர்ந்தவைகளாகவே இருக்கிறது. சமீபத்தில் கூட சீனா நாட்டை சேர்ந்த பல ஆஃப்க்களுக்கு மத்திய அரசு
தடை விதித்தது. அதில் ஒன்று மக்கள் அதிகம் பயன்படுத்திய Tik Tok என்பதால், அதன் பயன்பாட்டாளர்கள் ரொம்பவே அப்செட்டாகி
விட்டார்கள். அப்படி அப்செட்டானவர்களுக்கு தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தி.

ஆம், டிக் டாக் பயன்பாட்டாளர்களுக்காக டிக் டாக்கை விட பாதுகாப்பான அதே சமயம் பொழுதுபோக்கு மற்றும் தொழில்துறை
பயன்பாட்டுக்கும் சேர்த்து புதிய ஆஃப் ஒன்று அறிமுகமாகியுள்ளது. ரீட்டோ (Reto) என்ற இந்த புதிய ஆஃப்பை சென்னையை சேர்ந்த
மூன்று பெண்கள் உருவாக்கியுள்ளார்கள்.

சென்னையை சேர்ந்த கனிணி பொறியாளரான ஃபேட்ரிஸியா என்ற பெண், டிக் டாக் இருக்கும் போதே அதற்கு போட்டியாக ஒரு ஆஃப்பை
உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். அவரது பணி முடியும் தருவாயில் டிக் டாக் தடை செய்யப்பட, தற்போது ஃபேட்ரிஸியா தான்
உருவாக்கிய Reto ஆஃப்பை மக்கள் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

டிக் டாக்கை விட அதிக வசதிகள் கொண்ட Reto ஆஃப்பில் வாய்ஸ் கால், வீடியோ கால், லைவ் ஸ்ட்ரீமிங் போன்ற வசதிகளுடன்
சீக்ரெட் சாட்டிங் என்ற கூடுதல் வசதியும் இருக்கிறது. இந்த சீக்ரெட் சாட், மூலம் நீங்கள் ஒருவருக்கு அனுப்பும் மெசஜ் அல்லது
வீடியோவை, ஸ்கீரின் ஷாட் கூட எடுக்க முடியாது. அதேபோல், சீக்ரெட் சாட்டில் குறிப்பிட்ட நேரத்தை பதிவு செய்து மெசஜ்
அனுப்பினால், அந்த மெசஜ் தானாகவே அழிந்து விடும்.

மேலும், தொழில்துறையை சார்ந்தவர்கள் தங்களது பொருட்களை இலவசமாக Reto ஆஃபில் விளம்பரம் செய்யலாம். அதேபோல்,
வெறும் பொழுதுபோக்கிற்கான வசதிகளை மட்டும் வைக்காமல், இளைஞர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தும் விதமாக ரீட்டோ
சேலேஞ்ச் மூலம் நடனம், பாட்டு, நடிப்பு போன்ற திறமைகளை வெளிப்படுத்தவும் செய்யலாம்.

இந்த புதிய அசத்தல் Reto ஆஃப் அறிமுக நிகழ்ச்சி, அக்டோபர் 25 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் திரைப்பட நடிகை இந்துஜா சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு Reto ஆஃப்பை அறிமுகம் செய்து வைதார்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகை இந்துஜா, “சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் உருவாக்கிய ரீட்டோ ஆஃப் அறிமுக விழாவில் பங்கேற்பது
பெருமையாக இருக்கிறது. பல வெளிநாட்டு ஆஃப்க்களை பயன்படுத்தும் நம் மக்கள், நமது நாட்டு ஆஃப்பான Reto-வுக்கு நிச்சயம்
ஆதரவு அளிப்பார்கள் என்று நம்புகிறேன். நான், டிக் டாக் ஆஃப்பை பயன்படுத்தியதில்லை, ஆனால் நிச்சயம் Reto-வை
பயன்படுத்துவேன்.” என்றார்.

Reto ஆஃப்பை உருவாக்கிய Trifft Solution நிறுவனத்தின் உரிமையாளர் ஃபேட்ரிஸியா பேசுகையில், ”இளைஞர்களுக்கான
பொழுதுபோக்கு ஆஃப்பாக மட்டும் இல்லாமல் அனைத்து தரப்பினருக்குமான ஒரு ஆஃப்பாகவும் ரீட்டோவை உருவாக்கியுள்ளோம். இதில்,
அனைத்து வசதிகளும் உள்ளது. ரீட்டோ என்று பெயர் வைக்க காரணம், ரீட்டோ என்றால் சேலேஞ்ச் ஆகும். இந்த சேலேஞ்ச் மூலம்
இளைஞர்களின் திறமையை வெளிக்காட்டுவதற்கான அம்சங்களையும் இதில் வைத்துள்ளோம்.

அதேபோல், பாதுகாப்பு வசதிகளும் இதில் அதிகம் உள்ளது. எங்கள் சர்வர் முழுவதும் இந்தியாவில் இருப்பதால், Reto-வை பயன்படுகிறவர்களின் தகவல் பாதுகாப்பாக இருக்கும். மேலும், எதாவது செய்தி அல்லது தகவல் மீது புகார் வந்தால் அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்போம். மொத்தத்தில், பொழுதுபோக்கு மற்றும் பாதுகாப்பு நிறைந்த Reto அனைத்து தரப்பினருக்கும் பயன் உள்ள ஆஃப்பாக இருக்கும்.” என்றார்.

Actress Indhuja launched Reto app

indhuja reto app

வெண்பாவுக்கு ‘அல்வா’ தரும் ஆர்ட் டைரக்டர்..; நித்யானந்தா பாணியில் பாக்யராஜ் சீடர்.?

வெண்பாவுக்கு ‘அல்வா’ தரும் ஆர்ட் டைரக்டர்..; நித்யானந்தா பாணியில் பாக்யராஜ் சீடர்.?

Kiran and Venba join together for making Alwa“ஒரு நாள்’, “இருவர்’, “சொந்த பந்தம்’ உள்ளிட்ட பல குறும்படங்களை இயக்கியவர் ஜெ.எம். ராஜா. இவரின் குறும்படங்கள் இவருக்கு பல விருதுகளை பெற்று தந்துள்ளது.

இவர் திரைக்கதை மன்னன் பாக்யராஜிடம் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார்.

இந்த கொரோனா லாக்டவுனுக்கு பிறகு பிரபல நடிகரை வைத்து காமெடி படத்தை இயக்கவுள்ளாராம் ஜெ.எம். ராஜா.

இந்த நிலையில் தன் குருநாதர் பாக்யராஜ் பாணியில் பர்ஸ்ட் நைட்டை மையப்படுத்தி ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார் ராஜா.

‘அல்வா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த குறும்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இதில் கதையின் நாயகனாக பிரபல ஆர்ட் டைரக்டர் கிரண் நடித்துள்ளார். இவர் ஓரிரு படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார்.

கதையின் நாயகியாக வெண்பா நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து தற்போது பள்ளி பருவத்திலே.. காதல் கசக்குதய்யா.. மாயநதி உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

கிரண் மற்றும் வெண்பா ஜோடியுடன் டெல்லி கணேஷ் மற்றும் அவரது மகன் பாலா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தினேஷ் தங்கராஜ் ஒளிப்பதிவு செய்ய, ரோகித் சோகன் பாபு இசையமைத்துள்ளார். பூதக்கண்ணாடி புரொடக்சன் நிறுவனம் தயாரித்துள்ளது.

35 வயதாகியும் திருமணம் ஆகாத கிரண் 22 வயதான வெண்பாவை திருமணம் செய்கிறாராம். அதன்பின்னர் அவர்களின் முதலிரவில் ஏற்படும் பிரச்சினைகளே படத்தின் கதையாம்.

அண்மையில் இதன் பர்ஸ்ட் லுக் வெளியானது. அதில் கிரண் சாமியார் வேடத்தில் இருக்க அவர் கையில் முருங்கைகாய் கட்டு உள்ளது.

அவரின் அருகே நித்தியானந்தா சிஷ்யைகள் போல அழகிய இளம் பெண்கள் அமர்ந்துள்ளனர். பர்ஸ்ட் லுக்கை பார்த்தாலே படத்தில் நிறைய சமாச்சாரங்கள் இருக்கும் என்பது தெரிகிறது.

ஆக.. இந்த ‘அல்வா’ திகட்டாத சுவை தரும் என நம்பலாம்.

Kiran and Venba join together for making Alwa

Kiran and Venba join together for making Alwa

டி.ஆரின் தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி – வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் இன்று நடைபெற்றது

டி.ஆரின் தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி – வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் இன்று நடைபெற்றது

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிடும் டி.ஆரின் தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி – வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் இன்று (29-10-2020) நடைபெற்றது.

நிர்வாக பொறுப்புக்கு போட்டியிடுபவர்கள் விவரம்:

தலைவர் – T.இராஜேந்தர்
செயலாளர் – T.மன்னன் (மன்னன் பிலிம்ஸ்)
செயலாளர் – N.சுபாஷ் சந்திரபோஸ் (திருப்பதி பிரதர்ஸ்)
பொருளாளர் – K.ராஜன்
துணைத்தலைவர் – K.முருகன்
துணைத்தலைவர் – P.T.செல்வகுமார்

செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் விவரம்

A.M.ரத்னம்
N.பிரபாகரன்
M. அசோக் சாம்ராஜ்
மனோஜ் குமார்
M.மனோ பாலா
ஷக்தி சிதம்பரம்
பருத்திவீரன் V.சரவணன்
T.D.ராஜா
பர்வேஸ் அகமத் (என்கிற) V.ரிஷிராஜ்
A.ஶ்ரீதர்
M.திருமலை
J.செந்தில் குமார்
I.ஜான் மேக்ஸ்
கின்னஸ் பாபுகணேஷ்
K.G.பாண்டியன்
V.இசக்கிராஜா (எ) ராஜா
மதுரை செல்வம்
ராஜா (எ) பக்ருதின் அலி அகமது
பிரபாதிஷ் சாம்ஸ்
கா.திருக்கடல் உதயம்
சிகரம் R.சந்திரசேகர்

T Rajendar’s production team meeting in chennai

மறைந்த சேதுவுக்கு கட் அவுட் வைத்து க்ளினிக் திறந்து வைத்த சந்தானம்

மறைந்த சேதுவுக்கு கட் அவுட் வைத்து க்ளினிக் திறந்து வைத்த சந்தானம்

சந்தானம் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் அவரின் நண்பராக நடித்தவர் சேதுராமன்.

இவர் தோல் மருத்துவர் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

கொரோனா ஊரடங்கு சமயத்தில் கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

ஒரு டாக்டருக்கே 36 வயதில் மாரடைப்பால் மரணமா? என ரசிகர்கள் வேதனை அடைந்தனர்.

சேதுராமன் இறப்பதற்கு முன்பு ஈசிஆர் பகுதியில் தன் ஸ்கின் கேர் கிளினிக்கின் புது கிளையை துவங்க பூஜை போட்டு இருந்தாராம்.

அந்த பூஜையின்போது எடுக்கப்பட்ட வீடியோவை சேதுராமன் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சேது மரணத்தால் ஈசிஆர் கிளை துவங்கப்படுமா? என்பது சந்தேகமாக இருந்தது.

இந்த நிலையில் கணவன் சேது விட்டுச் சென்ற வேலையை அவரின் மனைவி உமா தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில் இன்று அக்டோபர் 29ல் சேதுராமனின் பிறந்தநாளை முன்னிட்டு அந்த கிளினிக்கை நடிகர் சந்தானம் துவங்கி வைத்துள்ளார்.

அப்போது அங்கு வைக்கப்பட்டு இருந்த சேதுராமனின் கட் அவுட்டுடன் இணைந்து போஸ் கொடுத்துள்ளார் சந்தானம்…. ரியல் நண்பேன்டா…

Actor Santhanam opens late actor Sethuraman new clinic at Ecr

லாரன்ஸ் பிறந்தநாளில் ‘ருத்ரன்’ பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு

லாரன்ஸ் பிறந்தநாளில் ‘ருத்ரன்’ பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு

நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் இயக்கியுள்ள ஹிந்தி படம் லட்சுமி பாம் தீபாவளி சமயத்தில் ஓடிடி தளத்தில் ரிலீசாகிறது.

இதனையடுத்து லாரன்ஸ் நடிப்பில் உருவாகவுள்ள அடுத்த தமிழ் படம் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் என்பதை ஓரிரு தினங்களுக்கு முன் நம் தளத்தில் பார்த்தோம்.

பொல்லாதவன், ஆடுகளம் படங்களை தயாரித்த கதிரேசன் தயாரிக்கவுள்ள படத்தில் நடிக்க்கிறார் லாரன்ஸ்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

முதன்முறையாக லாரன்ஸ் படத்திற்கு ஜிவி இசையமைக்கிறார்.

படத்தின் இயக்குனர் யார்? என்ற தகவலை வெளியிடவில்லை. ஆனால் ஒருவேளை லாரன்ஸ் இயக்குகிறாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த நிலையில் இன்று அக்டோபர்.,29ல் நடிகர் ராகவா லாரன்ஸ் பிறந்தநாளை முன்னிட்டு இப்பட தலைப்பை அறிவித்துள்ளனர்.

இதிலும் லாரன்ஸ் நடிக்கிறார் என்பதை மட்டுமே அறிவித்துள்ளனர்.

’ருத்ரன்’ என்று பெயரிட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

Raghava Lawrence’s next is titled Rudhran

Rudhran first look

More Articles
Follows