தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
சூர்யா நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வரும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.
இந்த படம் 10 மொழிகளில் வெளியாகும் என கூறப்படும் வரும் நிலையில் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு ‘கங்குவா….’ என்ற பாடல் கிளிப்ஸ் வீடியோ வெளியானது.
இந்தப் பாடல் வரிகள் பல நூறாண்டு காலத்திற்கு முன்பு உள்ள வரிகளை கொண்டிருப்பதால் பலருக்கு இதன் வரிகளின் அர்த்தம் புரியாமல் இருந்தன.
இந்த நிலையில் இதன் பாடல் வரிகளை வெளியிட்டுள்ளார் வசனகர்த்தா மற்றும் பாடலாசிரியரான மதன் கார்க்கி.
“ஆழிக்குள் கொடி நட்ட மாறாக்கன் வழிவந்து
வேழத்த விழவெச்ச கொச்சாமி வழிவந்து
பஞ்சத்தச் செயிச்செடுத்த இளம்பன் வழி வந்த
பெருமலையப் பேத்த தங்கையனுந்த பேரன்
சச்சாங்கனச் சாச்ச செந்தீயினுந்த மவன்
மண்டயாத்து மலயேறி கொண்டலப் புடிக்கவும்
வெங்காட்டு மரமேறி வெண்வேங்க அடிக்கவும்
அரத்தித் தீவேறி அச்சத்தக் காட்டவும்
முக்காட்டுக் களிறேரி திக்கெல்லாம் ஓட்டவும்
ஒண்டையே ஒண்ட வீரந்தைன்
எங்க கங்கா
ஒருநூறு புலிநகமும் மாரறைய
சருகூரும் உரகங்க நின்னுறைய
கரையூரும் திரையெல்லாம் முகம் வரைய
பெருமாச்சிப் பறையெல்லாம் பேர் பறைய
ஒண்டையே ஒண்ட வீரந்தைன்
சண்டையே ஏங்கஞ் சூரந்தைன்
தீ அவ பெத்தத் தீரந்தைன்
எங்க பெருமாச்சிக்காரந்தைன்
கங்கா கங்கா கங்குவா’…
Gangs Ganga Kanguva song lyrics here
