வெங்கட்பிரபு-பிரேம்ஜியின் தந்தை ஆஸ்பத்தியில்அனுமதி

வெங்கட்பிரபு-பிரேம்ஜியின் தந்தை ஆஸ்பத்தியில்அனுமதி

gangai amaren stillsநடிகர்கள் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜியின் தந்தையும் பிரபல இசையமைப்பாளருமான கங்கை அமரன் கோவையில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உப்புச்சத்து குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு, கழுத்துப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்தமுறை ஆர்.கே.நகர் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட கங்கை அமரன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அவருக்கு பதிலாக கரு.நாகராஜன் என்பவர் போட்டியிடுவார் என்று தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.

என் மகன் தீரனுக்காக லிப்லாக் சீனை மறுத்தேன்.. : சிபிராஜ்

என் மகன் தீரனுக்காக லிப்லாக் சீனை மறுத்தேன்.. : சிபிராஜ்

sibiraj sillsசத்யராஜ் தயாரிப்பில் சிபிராஜ் நடித்துள்ள சத்யா படம் டிசம்பர் 8ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது சத்யா படம் பற்றி நடிகர் சிபிராஜ் பேசியதாவது…

தெலுங்கில் வெளியான சனம் திரைப்படத்தை நான் முதலில் திரையரங்கில் பார்த்தேன். சனம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என்னுடைய அம்மாவும் , தங்கையும் படத்தை பார்த்தனர் அவர்களுக்கும் படம் மிகவும் பிடித்திருந்தது. அனைவரும் கலந்து பேசி சனம் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கலாம் என்று முடிவு செய்து வாங்கினோம். நான் சனம் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளேன் என்பதை ட்விட்டரில் அறிவித்தேன்.

இதை அறிந்த என் நண்பரான நடிகர் விஜய் ஆண்டனி என்னை தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.ப

டத்துக்கு டைரக்டர் பிக்ஸ் பண்ணியாச்சா என்று கேட்டார்… இல்லை இன்னும் முடிவு பண்ணவில்லை பார்த்துக்கொண்டு இருக்கிறோம் என்றேன். அப்போது அவர் நடித்துக்கொண்டிருந்த சைத்தான் திரைப்படத்தின் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தியை பற்றி என்னிடம் கூறினார்.

அதன் பின் நான் பிரதீப்பை சந்தித்து பேசினேன். நாங்கள் முதல் முறை பேசும் போது படத்தை பற்றி அதிகம் பேசவில்லை.

தமிழை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் தான் அதிகம் பேசினோம். பிரதீப் ஏன் படத்தை பற்றி கதையை பற்றி அதிகம் எண்ணிடம் பேசவில்லை என்று அடுத்த நாள் நான் அவரிடம் கேட்டபோது நான் உங்கள் பாடி லாங்குவேஜை நோட் செய்து கொண்டிருந்தேன்.

உங்களை படத்தில் எப்படி கையாளுவது என்று எனக்கு தெரியவேண்டும் அல்லவா என்று கூறினார். படம் ஆரம்பிக்கும் போது என்னை புதுவிதமாக காட்டவேண்டும் என்று கூறினார். சொன்னது போல என்னை நிஜமாகவே வேறமாதிரி காட்டியுள்ளார்.

படத்தில் என்னோடு ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடித்துள்ளார். இதுதவிர சதீஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சைமனின் இசையில் பாடல்கள் அனைத்தும் நன்றாக வந்துள்ளது.

யவன்னா பாடல் அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. என்னை மட்டுமல்ல படத்தில் நடித்த அனைவரையும் நன்றாக வேலைவாங்கினார் இயக்குநர் பிரதீப்.

ரம்யா நம்பீசன் அனுபவம் உள்ள நடிகை அவரை இப்படி தான் நீங்கள் நடிக்க வேண்டும் என்கிறாரே என்று நான் யோசிப்பேன். வரலட்சுமி சரத்குமாரிடம் இயக்குநர் இப்படி தான் நடிக்க வேண்டும் என்று கூறியதும் அவரை பார்த்து “ போயா “ என்று கிண்டலாக கூறிவிட்டார். இப்படி சீரியசாகவும், ஜாலியாகவும் சென்றது சத்யாவின் படபிடிப்பு. நீங்கள் கேட்பது போல் படபிடிப்பின் போது லிப் லாக் முத்த காட்சியில் நான் நடிக்க மாட்டேன் என்று கூறியது உண்மை தான்.

அதற்கு காரணம் என்னுடைய மகன் தீரன். அவன் இப்போது சிறுவன் , என்னை ரோல் மாடலாக பார்க்கிறான். நான் எதை செய்தாலும் அதை அவன் திரும்ப செய்கிறான்.

நான் படத்தில் லிப் லாக் காட்சியில் நடிப்பதை பார்த்து. அதே போல் பள்ளிக்கு சென்று செய்துவிட்டால் பிரச்சனை நமக்கு தான். அதனால் இப்போது அதை போன்ற காட்சிகளில் நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளேன்.

நிச்சயம் எதிர்காலத்தில் லிப் லாக் முத்த காட்சியில் நடிப்பேன். கதை சொல்ல வரும் இயக்குநர்கள் அனைவரும் எனக்காக லிப்லாக் காட்சிகளை கதையிலிருந்து நீக்கிவிட வேண்டாம்.” என்றார் சிபிராஜ்.

நடிகர் ஆனந்த்ராஜ் பேசியது :- இந்த தலைமுறை நடிகர்கள் அனைவரும் தங்களுடைய சீனியர் நடிகர்களை மதிக்கும் பண்பை கடைபிடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. பெரியவர்களை மதித்தாலே அவர்கள் அடுத்த கட்டத்துக்கு நிச்சயம் செல்வார்கள்.

சத்யா படத்தில் நான் நடித்திருக்கும் கதாபாத்திரத்தில் நான் இல்லாவிட்டால் அதில் சத்யராஜ் அண்ணன் தான் நடித்திருக்க முடியும்.

சத்யாராஜ் அண்ணன் இன்னும் பல ஆண்டு காலம் நன்றாக வாழவேண்டும். அனைவரையும் மதிக்கும் சிபிராஜ் அடுத்தக்கட்டத்துக்கு செல்வார் என்றார் ஆனந்த்ராஜ்.

நாயகி ரம்யா நம்பீசன் பேசியது…

மிகவும் ஒழுக்கமான நேர்மையான சத்யா படத்தின் டீமுடன் பணியாற்றியது எனக்கு மகிழ்ச்சி. சத்யாவில் ஒவ்வொரு நிமிடமும் ட்விஸ்ட் டார்ன் என்று பரபரப்பாக இருக்கப்போகிறது என்றார் ரம்யா நம்பீசன்.

சிபிராஜுக்கு உதவிய கமல்-சூர்யாவுக்கு சத்யராஜ் நன்றி

சிபிராஜுக்கு உதவிய கமல்-சூர்யாவுக்கு சத்யராஜ் நன்றி

sibiraj and sathyarajசைத்தான் பட இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள படம் சத்யா.

இப்படத்தை சத்யராஜ் தயாரிக்க, அவரது மகன் சிபிராஜ் நாயகனாக நடித்துள்ளார்.

இவருடன் ரம்யா நம்பீசன், வரலட்சுமி, ஆனந்த்ராஜ், சதீஷ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

சைமன் K கிங் இசையமைக்க, அருண் மணி ஒளிப்பதிவாளர் செய்ய எடிட்டிங் பணிகளை கெளதம் ரவிச்சந்திரன் மேற்கொண்டுள்ளனர்.

இப்படம் வருகிற டிசம்பர் 8ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இப்படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது தயாரிப்பாளர் சத்யராஜ் பேசியதாவது…

நான் பாகுபலி படத்தின் படபிடிப்பில் இருந்த போது சிபி என்னை தொடர்பு கொண்டு தெலுங்கில் ஹிட் அடித்த ஷணம் படத்தை பற்றி விசாரிக்கும் படி கூறினார்.

நான் பிரபாஸிடம் ஷணம் படத்தை பற்றி கேட்டேன். என்னிடம் அவர் “ ஷணம் “ நல்ல படம் எதற்காக கேட்குக்றீங்க என்றார். அதற்கு நான் என் மகன் சிபிராஜ் இந்த படத்தின் ரீமேக் உரிமையை வாங்கலாமா? என்று கேட்கிறார் என்றேன். ஷணம் தரமான படம் கண்டிப்பாக வாங்கலாம் என்று சிபிராஜ் எனக்கு நம்பிக்கை கொடுத்தார்.

அதன் பின் தான் நாங்கள் இப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி படத்தை ஆரம்பித்தோம். நான் சத்யா படத்தின் படபிடிப்பு துவங்கி பத்து நாள் கழித்து தான் ஷணம் படத்தை பார்த்தேன்.

படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தற்போது மிகச்சிறந்த நடிகர் பட்டாளத்துடன் சத்யா திரைப்படம் நன்றாக வந்துள்ளது.

சத்யா என்ற டைட்டிலை கமலிடம் கேட்க சொன்னார் என் மகன். ஆனால் எனக்கு சிபாரிசு பிடிக்காது.

எனவே சிபிராஜே கமல்ஹாசனிடம் பேசி வாங்கிவிட்டார். கமலுக்கு நன்றி. அதுபோல் இப்படத்தின் ட்ரைலரை வெளியிடும் சூர்யாவுக்கும் நன்றி. என்று பேசினார் சத்யராஜ்.

வேலைக்காரன் இசை விழாவில் சிவகார்த்திகேயனை மறந்த இருவர்

வேலைக்காரன் இசை விழாவில் சிவகார்த்திகேயனை மறந்த இருவர்

MohanRaja and Anirudh forgotten Sivakarthikeyan at Velaikkaran Audio Launchமோகன்ராஜா, சிவகார்த்திகேயன், அனிருத் ஆகியோர் கூட்டணில் உருவாகியுள்ள படம் வேலைக்காரன்.

இப்படம் வருகிற டிசம்பர் 22ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், இதன் இசை வெளியீட்டு விழா திரையுலகமே வியக்கும் வண்ணம் மிகப்பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் திரையுலக சிறப்பு விருந்தினர்கள் யாரும் கலந்துக் கொள்ளவில்லை.

மாறாக நிஜ வாழ்க்கையில் கடினமாக உழைத்து முன்னேறிய தொழிலாளர்களை கொண்டு இந்த இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் பேசிய பலரும் சிவகார்த்திகேயனை புகழ்ந்து பேசினார்கள்.

ஆனால் இயக்குனர் மோகன்ராஜா மற்றும் அனிருத் பேசும்போது சிவகார்த்திகேயன் பெயரை கூற மறந்துவிட்டனர்.

அதன்பின் சுதாரித்துக் கொண்டு மீண்டும் மேடைக்கு வந்து அவரைப் பற்றி பேசினார்கள்.

இறுதியாக சிவகார்த்திகேயன் பேசும்போது, அவர்கள் இருவரும் முதலில் மறந்து இருக்கலாம்.

ஆனால் அவர்கள் என்னை பற்றி என்ன நினைத்து வைத்திருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும்.

எங்களுக்குள் நல்ல புரிதல் மற்றும் நட்பு உள்ளதுஞ” என பேசினார் சிவகார்த்திகேயன்.

MohanRaja and Anirudh forgotten Sivakarthikeyan at Velaikkaran Audio Launch

velaikkaran team

உலகப்புகழ் பெற்ற சன்னி லியோனை தமிழுக்கு அழைத்து வரும் இயக்குனர்

உலகப்புகழ் பெற்ற சன்னி லியோனை தமிழுக்கு அழைத்து வரும் இயக்குனர்

sunny leone

‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’, ‘சவுகார்பேட்டை’, ‘பொட்டு’, ‘கன்னியும் காளையும் செம காதல்’ ஆகிய படங்களை இயக்கிவர் வி.சி.வடிவுடையான்.

சரித்திரக் கதையை அடிப்படையாகக் கொண்ட இவர் இயக்கும் புதிய படத்தில் சன்னி லியோன் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. நாசர், நவ்தீப் ஆகியோர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது.

படம் குறித்து நடிகை சன்னி லியோன் கூறுகையில், ”தென்னிந்திய கலாச்சாரங்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படத்தில் நாயகியாக நான் நடிக்கிறேன்.

தென்னிந்தியாவில் எனக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளாது, குறிப்பாக ஆந்திரா, கேரளா, தமிழ்நாட்டில் நிறைய ரசிகர்கள் உள்ளனர்.

கிளாமர் ரூட்டில் இனி பயணிப்பதில்லை என்ற முடிவை எடுத்துள்ளேன். சரித்திரப் படம் என்பதால் கத்திசண்டை, குதிரையேற்றம் போன்ற சண்டைக் கலைகளையும் கற்று வருகிறேன். படத்துக்காக 150 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறேன்.

இந்தப் படத்துக்குப் பிறகு என்னுடைய அடையாளம் நிச்சயம் மாறும். ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்க எனக்கு எப்போதுமே பிடிக்கும்.

இந்த மாதிரி கதைகளுக்காக சில வருடங்களாகவே காத்திருக்கிறேன். வி.சி.வடிவுடையான் இந்தக் கதையை எனக்கு சொன்ன போதிலிருந்தே நான் படத்துக்கு தயாராக ஆரம்பித்து விட்டேன்” என்று தெரிவித்துள்ளார் இந்த கவர்ச்சி புயல்.

இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Sunny Leone to play a warrior queen in Tamil

sunny leon new tamil film

மெர்சலுக்கு அடுத்த இடத்தை பிடித்த தானா சேர்ந்த கூட்டம்

மெர்சலுக்கு அடுத்த இடத்தை பிடித்த தானா சேர்ந்த கூட்டம்

Thaana Serndha Kootam Teaser became fastest 500K likes teaser after Mersalசில ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு படம் ரிலீசானால், அதன் வசூல் எவ்வளவு? எத்தனை நாட்கள் ஓடியது? வெற்றிவிழா கொண்டாடப்பட்டதா? என்பதே பலரின் பேச்சாக இருக்கும்.

ஆனால் தற்போது படம் வெளியாகி 3 அல்லது 5 நாட்களில் சக்ஸ்ஸ் மீட் வைக்கும் அளவுக்கு திரையுலகம் முன்னேறிவிட்டது.

அதற்கு ஏற்ப யூடியுப் சாதனை மற்றும் லைக்ஸ் எவ்வளவு,? என்பதே தற்போதைய டிரெண்டாகிவிட்டது.

விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் டீசர் பலத்த வரவேற்பை பெற்று 1 மில்லியன் லைக்ஸை பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து அண்மையில் வெளியான சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் பட டீஸர் 500k லைக்குகளை பெற்று முன்னேறி வருகிறது.

எனவே #SecondFastest500KTSKTeaser என்ற ஹாஸ்டேக்கை உருவாக்கி சூர்யா ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர்.

Thaana Serndha Kootam Teaser became fastest 500K likes teaser after Mersal

More Articles
Follows