கஜா புயல் பாதிப்புக்கு ரூ. 20 லட்சம் நிதி வழங்கிய சிவகார்த்திகேயன்

Gaja Relief Aid Sivakarthikeyan gives Rs 20 lakhs to relief fundஓரிரு தினங்களுக்கு தமிழகத்தின் கரையை கடந்த கஜா புயலால் மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.

நாகப்பட்டினம், வேதாரண்யம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களை கஜா புயல் கடுமையாக தாக்கியது.

இதன் காரணமாக இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளனர். 347 மின் மாற்றிகள் சேதமடைந்துள்ளன. 39,938 மின் கம்பங்கள் விழுந்துள்ளன.

3,559 கி.மீ. நீளமுள்ள மின் கம்பிகள் சேதமடைந்துள்ளன. 56,942 குடிசை வீடுகள் முழுமையாகவும், 3,404 குடிசை வீடுகள் பகுதியாகவும், 30,328 ஓட்டு வீடுகளும் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் 20 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

10 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களைத் தன்னுடைய ரசிகர் மன்றத்தினர் மூலம் பாதிக்கப்பட்டுள்ளப் பகுதிகளுக்குக் கொண்டு சேர்த்துள்ளார்.

மேலும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தனியாக ரூ. 10 லட்சம் நிதியை வழங்கியிருக்கிறார்.

Gaja Relief Aid Sivakarthikeyan gives Rs 20 lakhs to relief fund

Overall Rating : Not available

Latest Post