கைபா பிலிம்ஸ், கோ ஸ்டுடியோஸ், மற்றும் நாஸிக் ராவ் மீடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஹாலிவுட்டில் தயாரித்துள்ள படம் Trapcity

கைபா பிலிம்ஸ், கோ ஸ்டுடியோஸ், மற்றும் நாஸிக் ராவ் மீடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஹாலிவுட்டில் தயாரித்துள்ள படம் Trapcity

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GV Prakashகைபா பிலிம்ஸ், கோ ஸ்டுடியோஸ், மற்றும் நாஸிக் ராவ் மீடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஹாலிவுட்டில் தயாரித்துள்ள படம் Trapcity. பிராண்டன் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க ஜிவி பிரகாஷும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். ரிக்கி பர்செல் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். இன்று இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்டு, தயாரிப்பாளர் பேசியதாவது,

டெல்.கணேசன் பேசியதாவது,

“இந்தப்படம் எடுப்பதற்கான ஐடியா 2019-ல் வந்தது. ஒரு சவுண்ட் ட்ராக் வேலைக்காகத் தான் ஜிவியைச் சந்தித்தேன்..அப்போது தான் அவரை ஹாலிவுட் அழைத்தேன். இப்படத்தில் சர்ஜனாக ஜிவி நடித்துள்ளார்.

தெலுங்கிலும் சூர்யா குரலை பதிவு செய்த ஜிவி. பிரகாஷ்

படத்தின் ஹீரோ பிராண்டன் ஒரு பெரிய ராப் சிங்கர். அவர் அவரது வறுமை காரணமாக போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட போலிசாரால் சுடப்படுகிறார். அவருக்கு ட்ரீட்மெண்ட் செய்பவராக ஜீவி வருகிறார். இந்தச் சம்பவம் நடக்கும் போதே பிராண்டன் வெளியிட்ட ஒரு பாடல் பெரிதாக ஹிட் ஆகிறது. படத்தின் கதை இப்படியாகத் தான் ட்ராவல் ஆகும்

படம் புரொடக்சன் முடிந்து விட்டது. தற்போது போஸ்ட் புரொடக்சன் வேலை நடந்து கொண்டிருக்கிறது.

அங்கு ரிலிஸ் எப்படி?

அங்கு முதலில் டிஸ்ட்டிப்யூட்டரிடம் பேசுவோம்..அதன் பிறகு நிறைய மார்க்கெட் இருக்கிறது..

“ஜீவியை தேர்ந்தெடுத்த காரணம்?

கார்த்திக் நரேன் இயக்கத்தில் இணையும் தனுஷ் & ஜிவி. பிரகாஷ்

” அவரைச் சந்தித்த போதே அவரிடம் ஒரு திறமை இருப்பதாக தெரிந்தது..அவரின் வொர்க் எனக்குப் பிடிக்கும்..இனி இசைக்காக ஹாலிவுட்ல இருந்து வருவார்கள்.
மேலும் இந்தப் படத்தில் பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் நடித்துள்ளனர். நம்ம ஸ்டார்ஸும் இருக்கிறார்கள்… எத்தனை தியேட்டரில் ரிலீஸ் பண்ணணும் என்று ப்ளான் பண்ணவில்லை..
தமிழை விட ஆங்கிலம் மார்க்கெட் 200% அதிகம். அதனால் ஜிவி இண்டெர்நேஷனல் லெவலில் இனி அறியப்படுவார். ஜிவியை அமெரிக்காவில் உள்ள லோக்கல் மக்கள் அக்செப்ட் பண்ணிவிட்டார்கள். . படம் அங்கும் இங்கும் ஒரே நேரத்தில் ரிலிஸ் ஆகாது. ஏன் என்றால் அங்கு சென்சார் தனி..இங்கும் சென்சார் தனி.
டெவில்ஸ் நைட், கிறிஸ்துமஸ் கூப்பன், ட்ராப் சிட்டி, படங்களின் தயாரிப்பைத் தொடர்ந்து மேலும் இரண்டு படங்களை டிஸ்டிபூட் பண்ண இருக்கிறேன். தமிழில் இப்பைதைக்கு படம் பண்ணும் ஐடியா இல்லை.

யாருமே பண்ணாத விசயங்களைத் தான் நான் செய்யணும் என்று நினைக்கிறேன். இந்த ட்ராப் சிட்டி படம் ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். முதலில் ஆங்கிலத்தில் அதன்பின் டப் செய்து தமிழில் வெளியீடும் திட்டமும் இருக்கிறது” என்றார்

நடிகர் ஜிவி பிரகாஷ் பேசியதாவது,

சூர்யா-தாணு-வெற்றிமாறன் கூட்டணியில் ஜிவி பிரகாஷ்

இந்தப்படம் எனக்கு நல்ல செயல் எக்ஸ்பீரியன்ஸ். படத்தின் ஹீரோ
பிராண்டன் நல்ல மனிதர். அவரும் ஒரு மியூசிக் லவ்வர். அவரோடு வொர்க் பண்றது நல்லாருந்தது..ஹாலிவுட் மாதிரி இடங்களில் தொடர்ந்து பயணிக்க ஆசை இருக்கிறது. அதற்கான முயற்சிகளும் நடக்கின்றன.

தமிழ்படத்திற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

அதை கம்பேரே பண்ண முடியாது. எனக்கு ஹாலிவுட் படத்தில் ஒரு நன்மை நடந்தது. கதையை முன்னமே என்னிடம் கொடுத்து விட்டார்கள். அதனால் படத்தை முழுதுவமாக உள்வாங்க முடிந்தது. மேலும் படப்பிடிப்பிற்குள் செல்லும் முன்பு ஒரு பக்கா ரிகல்சர் நடக்கும். அது சூட்டிற்கு போகும்போது கான்பிடன்ட்ஸ் கொடுக்கும்.

இப்படத்திற்காக இரண்டு பாடல்கள் பாடியுள்ளேன். இது பக்கா மியூசிக்கல் மற்றும் திரில்லர் படம்

கான்செர்ட் அமெரிக்காவில் பண்ணுவீங்களா?

ஜிவி: 350க்கும் மேல் பாடல்கள் பண்ணி இருக்கிறேன்..அதனால் நிச்சயம் கான்செர்ட் செய்வேன்.

தனுஷுடன் நடிகராக மோதி இசையமைப்பாளராக ஜெயித்த ஜிவி. பிரகாஷ்

உங்களுடைய அடுத்தடுத்த படங்கள்?

வசந்தபாலன் சார் இயக்கிய ஜெயில் முதலில் ரிலீஸாக இருக்கிறது. ஐங்கரன், அடுத்து வரும், அதற்கடுத்து எழில் சார் இயக்கிய ஆயிரம் ஜென்மங்கள்..வரும். சூரரைப் போற்று, வாடிவாசல் படங்களுக்கு இசை அமைத்து வருகிறேன்”.

Trap city படம் மூலம் ஹாலிவுட் சினிமாவில் என்ட்ரி ஆவதை ஒரு நல்ல நகர்வாகப் பார்க்கிறேன்” என்றார்

தென்னிந்திய நடிகைகளில் முதல் முறையாக மேடம் டுஸாட் மெழுகு சிலை மாளிகையில் இடம்பெற்ற காஜல் அகர்வால் !

தென்னிந்திய நடிகைகளில் முதல் முறையாக மேடம் டுஸாட் மெழுகு சிலை மாளிகையில் இடம்பெற்ற காஜல் அகர்வால் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Kajal Aggarwalதென்னிந்திய நடிகைகளில் முதல் முறையாக காஜல் அகர்வாலின் மெழுகு சிலை சிங்கப்பூர் மேடம் டுஸாட் மெழுகு சிலை மாளிகையில் இடம் பெறப்போவதாக அறிவிப்பு வெளியானபோது, அவரது ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். அவரது மெழுகு சிலை எந்தளவு தத் ரூபமாக இருக்கும்? அவரைப்போல் அச்சு அசலாக இருக்குமா? என பல கேள்விகள் சுற்றிவந்தன. இறுதியாக இன்று 5 பிப்ரவரி 2020 காலை சிங்கப்பூர் மேடம் டுஸாட் மெழுகு சிலை மாளிகையில் காஜல் அகர்வாலின் சிலை திறக்கப்பட்டது. தென்னிந்திய நடிகைகளில் முதல் முறையாக இந்தப் பெருமையை பெற்ற தன் வாழ்வின் பொன்னான தருணத்தை கொண்டாடி வருகிறார் காஜல் அகர்வால். தத்ரூபமாக படைக்கப்பட்டிருக்கும் அவரது சிலையை கண்டு அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்து வருகிறார்கள்.

மீண்டும் சூர்யா & சிவாவுடன் இணையும் காஜல் அகர்வால்

இது குறித்து காஜல் அகர்வால கூறியதாவது…

என்னை நானே ஒரு கலைஞரின் விழியில் பார்க்கிறேன். எனக்கும் சிலைக்குமான ஒப்பீடு அபாரமானதாக உள்ளது. ஒரு சிறு பிசிறில்லாமல் அத்தனை நுண் விவரங்களுடன் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. இத்தருணம் என் வாழ்வின் இன்றியமையாத பொன்னான தருணம். உலகின் மிக மிக பிரபலமான நபர்களின் சிலைகளுடன் எனது சிலையும் இடம்பெற்றிருப்பதில் மிக மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணர்கிறேன் என்றார்.

நடிகராக இருப்பதால் ரஜினிக்கு அரசியல் தெரியல..; நடிகர் உதயநிதி பேச்சு

நடிகராக இருப்பதால் ரஜினிக்கு அரசியல் தெரியல..; நடிகர் உதயநிதி பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini is an actor He dont know politics says Actor Udhayanidhiஇன்று காலை நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்த போது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அதில்…

இந்திய இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை திருத்த சட்டத்தால் அச்சுறுத்தல் இல்லை. அச்சுறுத்தல் வந்தால் நான் முதல் ஆளாக குரல் கொடுப்பேன்.

ரசியல் கட்சிகள் தங்கள் சுயலாபத்திற்காக குடியுரிமை சட்டத்தை பயன்படுத்துகின்றன.

குறிப்பாக மாணவர்கள் போராட்டத்தில் இறங்கும்போது தீர ஆராய்ந்து இறங்குங்கள்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியமானது. அது கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும்.

சைக்கோ படத்துல CCTV இல்லையே? ஜெயலலிதா மரணம் காட்டி உதயநிதி பதிலடி

என்பிஆர் அவசியம்; மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால்தான் யார் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவரும்.

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை தரப்பட வேண்டும்.

என ரஜினிகாந்த் பேசினார்.

இந்த நிலையில் ரஜினிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக இளைஞரணிச் செயலாளரும் நடிகருமான உதயநிதி பேட்டியளித்துள்ளார்.

அவர் கூறியதாவது…

நடிகராக இருப்பதால் ரஜினிக்கு அரசியல் தெரியவில்லை. அவர் முதலில் கட்சி தொடங்கி கொள்கைகளை அறிவிக்கட்டும்.

அதன்பின்னர் அவரது கருத்துக்கு பதில் கூறுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

டாடி ஒரு டவுட்டு… ஒரு வேளை உதயநிதி தான் ஒரு நடிகரை என்பதை மறந்துவிட்டாரோ என்னவோ…

Rajini is an actor He dont know politics says Actor Udhayanidhi

BREAKING ‘மாஸ்டர்’ சூட்டிங்கில் விஜய்யை லாக் செய்து ஐடி ரெய்டு

BREAKING ‘மாஸ்டர்’ சூட்டிங்கில் விஜய்யை லாக் செய்து ஐடி ரெய்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Income Tax Department raid at Vijays Master shooting spotநெய்வேலி என்.எல்.சி. சுரங்கம் பகுதிகளில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் பட சூட்டிங் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சூட்டிங் ஸ்பாடுக்கு சென்ற வருமான வரித் துறை அதிகாரிகள் விஜய்யிடம் விசாரணை நடத்தினர்.

இந்த படத்திற்கு முன்பு பிகில் படத்தில் நடித்திருந்தார் விஜய். அந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.

அந்த நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடந்து வரும் நிலையில் விஜய்யிடம் விசாரணை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

நடிகர் விஜய்யிடம் விலை போனதா ஹலோ ஆப்.? நெட்டிசன்கள் டென்சன்

இதனால் மாஸ்டர் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து விஜய்யை வருமான வரித்துறையினர் அழைத்து சென்றனர்.

அவரை விசாரித்த நிலையில் அவரது காரிலேயே வருமான வரித்துறை அதிகாரிகள் அவரை அழைத்து சென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

எனவே மாஸ்டர் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

‘பிகில்’ பட சம்பள விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய்யிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் நடிகர் விஜய்யின் தந்தை தற்போது குடியிருக்கும் சாலிகிராம வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

Income Tax Department raid at Vijays Master shooting spot

பாலிவுட் வெப் சீரிஸில் அறிமுகமாகும் நடிகை அமலா பால் !

பாலிவுட் வெப் சீரிஸில் அறிமுகமாகும் நடிகை அமலா பால் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

amala paul in web series2020 நடிகை அமலா பாலுக்கு புது வெளிச்சம் பாயும் வருடமாக தொடங்கியுள்ளது. கடந்த வருடத்தில் பாரம்பரிய அழகும் மிளிரும் குடும்ப பெண்ணாக “ராட்சசன்” படத்திலும், அனைவரையும் மிரளச்செய்த, துணிவான நடிப்பில் “ஆடை” படத்திலும் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் அமலா பால். பாடலுக்கு ஹீரோவுடன் நடனமாடும் துடுக்கு பெண்ணாக அல்லாமல், ஒவ்வொரு படங்களிலும் எவரும் ஏற்க தயங்கும் கதாப்பத்திரங்களில், அதிரடி காட்டி, அற்புத நடிப்பை வெளிப்படுத்தி, இந்தியாவெங்கும் கவனம் ஈர்த்திருக்கிறார் அமலாபாலுக்கு இந்த 2020 வருடத்தில் எதிர்பார்ப்பு மிக்க பல புதுமையான படங்கள் வரிசையில் இருக்கிறது.

ஹீரோஸ் கூட ஜோடி போட நிறைய நடிகைகள் இருக்காங்க. – அமலா பால்

அவரது நடிப்பில் “அதோ அந்த பறவை போல” படம் எதிர்பார்ப்பு மிக்க படைப்பாக, ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் அவரது மகுடத்தில் இன்னொரு மயிலறாக, அவரது திறமைக்கு அடையாளமாக, தற்போது அவர் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். பாலிவுட் ஆளுமை தயாரிப்பாளர், இயக்குநர் மகேஷ் பட் உருவாக்கும் வெப் சீரிஸ் ஒன்றில் நாயகி வேடமேற்கிறார் நடிகை அமலா பால்.

இது குறித்து அமலா பால் கூறியதாவது…

சில ஆச்சர்யங்கள் அறிவிப்பின்றி வாழ்க்கையில் வந்துவிடும். அப்படியானது தான் இயக்குநர் மகேஷ் பட்டிடமிருந்து கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு. அவருடன் வேலை செய்வது தென்னிந்திய நாயகிகள் அனைவருக்கும் ஒரு கனவு. அவர் திரையில் உருவாக்கும் பெண் கதாப்பாத்திரங்கள் வலுவனாது, உணர்வுப்பூர்வமானது. காலத்தால் அழியாத நிலைத்து நிற்கும் படைப்புகளை தருபவர் அவர். அவரது பட்டறையில் கற்றுக்கொள்ள மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன். மேலும் இத்தொடரின் இயக்குநர் புஷ்ப்தீப் மிகத் திறமையானவர். மிகச்சிறந்த தொலை நோக்கு பார்வை கொண்டவர். திரையில் என்ன வர வேண்டும், அதை எப்படி கொண்டு வர வேண்டும் என்பதில் மிகத்தெளிவானவராக உள்ளார். அவரது திரைக்கதையை படித்த பிறகு இந்த தொடர் ஒரு அற்புதமான படைப்பாக வரும் என்கிற நம்பிக்கை உள்ளது.

தடய அறுவை சிகிச்சை நிபுணராக அமலா பால்

இன்னும் பெயரிடப்படாத இந்த இணையத்தொடர் 1970 களில் வெற்றிக்கு போராடும் இயக்குநருக்கும், பிரபலமாக இருக்கும் நடிக்கைக்கும் இடையே உள்ள உறவை சொல்வதாக அமைக்கப்பட்டுள்ளது. Chhichhore ஹிந்தி திரைப்படத்தில் அட்டகாச நடிப்பின் மூலம் மகேஷ் பட்டின் மனம் கவர்ந்த நடிகர் தாஹிர் இத்தொடரில் இயக்குநராக நடிக்கிறார். அமலா பால் பிரபல நடிகையாக நடிக்கிறார். சினிமா உலகில் மிக நீண்ட பாரம்பரியம் கொண்ட ஆளுமையான மகேஷ் பட் மற்றும் மிகத் திறமை வாய்ந்த இயக்குநர் புஷ்ப்தீப் பரத்வாஜ் ஆகிய இருவரும், இந்த தொடரின் நாயகி கதாப்பாத்திரத்திற்காக, இந்தியாவின் அனைத்து பிரபல நாயகிகளையும் பரிசீலித்து பின் மிகப்பொருத்தமனாவர் என அமலா பாலை, இந்தக் கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்துள்ளனர். நடிகை அமலா பாலுக்கும் இந்தக்கதாப்பாத்திரம் சவாலான ஒன்றாக அமைந்தது.

கட்டிப்பிடிக்க வந்த அமலாபாலை அவாய்ட் செய்த *ராட்சசன்* டைரக்டர்

வட இந்திய பெண்னாக நடை, உடை, பாவனை பயிற்சி எடுத்து மொழிப்பயிற்சிகளை மூன்று மாதங்கள் மேற்கொண்டு இறுதியாகவே இந்தக்கதாப்பாத்திரத்திற்கு தயாராகியுள்ளார்.

தற்போது அமலா பால் நடிப்பில் “அதோ அந்த பறவை போல” ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அடுத்து மலையாளத்தில் “ஆடு ஜீவிதம்”, “கடாவர்” மற்றும் பாலிவுட் “கோஸ்ட் ஸ்டோரீஸ்” தெலுங்கு ரீமேக் ஆகியவை தாயாரிப்பின் பல்வேறு நிலைகளில் உள்ளன.

BREAKING – NPR அவசியம்; முஸ்லிம்களை அச்சுறுத்தினால் வாய்ஸ் கொடுப்பேன் – ரஜினி

BREAKING – NPR அவசியம்; முஸ்லிம்களை அச்சுறுத்தினால் வாய்ஸ் கொடுப்பேன் – ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth press meetசற்றுமுன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

பல்வேறு கேள்விகளுக்கு அப்போது பதிலளித்தார்.

அவர் பேசியதாவது…

இந்திய இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை திருத்த சட்டத்தால் அச்சுறுத்தல் இல்லை.

இந்திய இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் வந்தால் நான் முதல் ஆளாக போராடுவேன்

இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் என பீதி கிளப்பப்படுகிறது.

ரஜினி படத்தில் முதன்முறையாக வித்தியாசமான வேடத்தில் நயன்தாரா

அரசியல் கட்சிகள் தங்கள் சுயலாபத்திற்காக குடியுரிமை சட்டத்தை பயன்படுத்துகின்றன.

குறிப்பாக மாணவர்கள் போராட்டத்தில் இறங்கும்போது தீர ஆராய்ந்து இறங்குங்கள்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியமானது. அது கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும்.

என்பிஆர் அவசியம்; மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால்தான் யார் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவரும்.

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை தரப்பட வேண்டும்.

தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக சம்மன் இன்னும் வரவில்லை.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

More Articles
Follows