8 தோட்டாக்கள் கூட்டணியின் அடுத்த படம் ஜிவி

jiiviகடந்த ஆண்டு சின்ன பட்ஜெட்டில் வெளியாகி அனைவரையும் வியக்க வைத்த படம் 8 தோட்டாக்கள்.

தற்போது இதே டீம் இணைந்து ஜிவி என்ற படத்தை உருவாக்குகிறது.

8 தோட்டாக்களை தயாரித்த பிக்பிரிண்ட் பிக்சர்ஸ் கார்த்திகேயன் தயாரிக்கிறார். அதில் நடித்த வெற்றி இதிலும் ஹீரோவாக நடிக்கிறார்.

அஸ்வினி, மோனிகா என்ற இரு ஹீரோயின்கள் அறிமுகமாகிறார்கள்.

இவர்களுடன் கருணாகரன், மைம்கோபி, ரோகினி, ரமா ஆகியோர் நடிக்கிறார்கள்.

பாபு தமிழ், கதை வசனம் எழுதுகிறார், வி.ஜே.கோபிநாத் இயக்குகிறார். பிரவீன்குமார் ஒளிப்பதிவு செய்கிறார், சுந்தரமூர்த்தி இசை அமைக்கிறார்.

இப்படம் பற்றி இயக்குனர் கோபிநாத் கூறியதாவது:

விஞ்ஞானத்திற்கும், மெய்ஞானத்திற்கும் இடையில் உள்ள மனித உணர்வுகள் சார்ந்த தொடர்பியல் ரீதியில் கதை அமைக்கப்பட்டுள்ளதால் இது முற்றிலும் மாறுபட்ட திரைக்கதை.

சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகி வருகிறது என்றார். இதன் படப்பிடிப்புகள் நேற்று துவங்கியது. இரண்டு கட்டமாக படப்பிடிப்பு நடத்தி முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

‘8 தோட்டாக்கள்’ படத்தை இயக்கிய ஸ்ரீகணேஷ்…
...Read More
சில நேரங்களில், ஒரு படத்தின் ஜானர்…
...Read More
‘8 தோட்டாக்கள்’ படத்தை இயக்கியவர் ஸ்ரீகணேஷ்.…
...Read More
நடிகர் அரவிந்த்சாமி தலைமை விருந்தினராக பங்கேற்க்கும்…
...Read More

Latest Post