‘பைரவா’ ஆடியோவின் எல்லா தகவல்களும் வெளியானது

‘பைரவா’ ஆடியோவின் எல்லா தகவல்களும் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bairavaa vijay keerthy sureshபரதன் இயக்கியுள்ள விஜய்யின் ‘பைரவா’ பட பாடல்கள் டிசம்பர் 23ஆம் தேதி வெளியாகவுள்ளது.

வைரமுத்துவின் வரிகளுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் உள்ளதாம். அவற்றில் ஒரு பாடல் தீம் மியூசிக்.

இதன் பாடல்கள் உரிமை பிரபல லஹரி நிறுவனம் பெற்றுள்ளது.

இந்நிலையில் ஒரு நாளைக்கு ஒரு பாடலின் தொடக்க வரிகள் என ஒவ்வொன்றாக வெளியிட இருக்கிறார்களாம்.

அதன்படி இன்று முதல்பாடலின் ஆரம்ப வரி ‘அழகிய சூடான பூவே’ என்பதை வெளியிட்டுள்ளனர்.

விஜய்நரேன் மற்றும் தர்ஷனா பாடியுள்ளனர்.

இனி நாளை எந்த பாடல் வருகிறது என்பதை பார்ப்போம்.

ஏற்கெனவே வர்றலாம் பைரவா வா… என்ற பாடல் வரிகளை கவிஞர் வைரமுத்து வெளியிட்டது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

From Bairavaa movie Azhagiya Soodana Poovey song lyrics revealed

சற்றுமுன் எல்லா பாடல்கள் தகவல்களையும் வெளியிட்டுள்ளனர்.

bairavaa full track list

ரஜினியின் ‘மன்னன்’ ரீமேக்… விஜய் இடத்தை கைப்பற்றிய லாரன்ஸ்

ரஜினியின் ‘மன்னன்’ ரீமேக்… விஜய் இடத்தை கைப்பற்றிய லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay lawrenceரஜினியின் மறக்கவே முடியாத படங்களில் மன்னன் படம் மிக முக்கியமான ஒன்று

பி.வாசு இயக்கிய இப்படத்தை பிரபு தயாரிக்க, ரஜினி, விஜயசாந்தி, குஷ்பூ, கவுண்டமணி, விசு, மனோரமா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படம் வெளியாகி 24 வருடங்களை கடந்துவிட்டாலும் இன்றுவரை டிவி களில் இப்படத்திற்கு பெரும் வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் இப்படத்தை பி.வாசுவே ரீமேக் செய்யவிருக்கிறாராம்.

இதில் ரஜினி வேடத்தில் ராகவா லாரன்சும், கவுண்டமணி வேடத்தில் வடிவேலும் நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

மற்ற கலைஞர்கள் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தில் விஜய் நடிக்கலாம் என்றும் பின்னர் அது பொய்யானதும் தங்களுக்கு நினைவிருக்கலாம்.

ரஜினியின் மூன்றுமுகம் ரீமேக்கிலும் லாரன்ஸ் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

P Vasus mannan remake lawrance in rajini character. Vadivelu doing Goundamani Character

மீண்டும் விஜய்யுடன் வடிவேலு; எத்தனையாவது முறை தெரியுமா?

மீண்டும் விஜய்யுடன் வடிவேலு; எத்தனையாவது முறை தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay vadiveluஒரு சில முன்னணி நடிகர்களுக்கு மட்டுமே காமெடி நடிகர்களுடன் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகும்.

அதில் முக்கியமானவர் இளைய தளபதி விஜய்யை கூறலாம்.

இவர் கவுண்டமணி, விவேக் மற்றும் வடிவேலு உடன் இணைந்து நடித்துள்ளார்.

விரைவில் அட்லி இயக்கவுள்ள படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய்.

இதில் நீண்ட நாட்களுக்கு பிறகு வடிவேலு உடன் இணையவுள்ளார்.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ப்ரெண்ட்ஸ், காவலன், வசீகரா, வில்லு, போக்கிரி, சுறா, பகவதி, மதுர, சச்சின் உள்ளிட்ட 9 படங்களில் விஜய்யுடன் வடிவேலு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘பட்டதாரி’ ஜோடி இணையும் ‘நாங்க வேலைக்கு போயிட்டா… ஊரை யார் பாத்துக்கிறது?’

‘பட்டதாரி’ ஜோடி இணையும் ‘நாங்க வேலைக்கு போயிட்டா… ஊரை யார் பாத்துக்கிறது?’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Naanga Velaikku Poyitta Oorai Yaar Pathukkirathu movie updatesஎவர்கிரீன் என்டர்டெயினர்ஸ் நிறுவனம் சார்பில் M.விஜயகாந்த் தயாரிக்கும் படம் ‘நாங்க வேலைக்கு போயிட்டா… ஊரை யார் பாத்துக்கிறது’.

ஆதி நடித்த ‘அய்யனார்’ படத்தை இயக்கிய S.S.ராஜமித்ரன் இந்தப்படத்தை இயக்குவதுடன் இணை தயாரிப்பாளராகவும் பொறுப்பேற்றுள்ளார்.

ரவுடியிசம் தலைவிரித்தாடும் பகுதியில் வசிக்கும் இளைஞன் ஒருவன், கல்விதான் வாழ்க்கையில் முன்னேற்றம் தரும் என்கிற நம்பிக்கையுடன் கல்லூரியில் படித்து கோல்டு மெடல் வாங்குகிறான்.

ஆனால் காலம் அவனையும் ரவுடியாக மாற்ற முயற்சிக்கிறது. அவன் ரவுடியாக மாறினானா..? அல்லது தான் கற்ற கல்வியை வைத்து பிரச்சனைகளை சாதுர்யமாக எதிர்கொண்டானா என்பதுதான் படத்தின் கதைக்கரு.

சமீபத்தில் வெளியான ‘பட்டதாரி’ படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த அபி சரவணன்-அதிதி இருவரும் இந்தப்படத்தின் மூலம் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர்.

‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த காமெடி வசனங்களுக்கு சொந்தக்காரரான எழிச்சூர் அரவிந்தன் தான் இந்தப்படத்தின் வசனங்களை எழுதுகிறார்.

பார்த்திபனின் ‘குடைக்குள் மழை’ மற்றும் பா.விஜய் நடித்த ‘இளைஞன்’ உட்பட பல படங்களில் பணியாற்றிய சஞ்சய் இந்தப்படத்தின் ஒளிப்பதிவை கவனிக்க, ‘சாலையோரம்’ படத்திற்கு இசையமைத்த சேதுராஜா.S இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.

மொழி, அபியும் நானும், சமீபத்தில் வெளியான மாவீரன் கிட்டு உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் பணியாற்றிய படத்தொகுப்பாளர் காசி விஸ்வநாதன் இந்தப்படத்தின் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.

பாடல்களை யுகபாரதி எழுதுகிறார். ஆக்சன் காட்சிகளை சூப்பர் சுப்பராயன் வடிவமைக்கிறார்.

வரும் ஜனவரி முதல் வாரத்தில் இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

இசையமைப்பாளர் ஆகும் சிம்புக்கு விவேக்-ஆர்யா அட்வைஸ்

இசையமைப்பாளர் ஆகும் சிம்புக்கு விவேக்-ஆர்யா அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vivek simbu aryaசந்தானம், விவேக், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடிக்கும் படம் சக்கப் போடு போடு ராஜா.

இப்படத்தை சேதுராமன் இயக்க, விடிவி கணேஷ் தயாரிக்கிறார்.

இதில் முதன்முறையாக சிம்பு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

இதனையறிந்த பலரும் சிம்புக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

“இதைவிட பெரிய அறிவிப்பு இருக்க முடியாது. இசைமைப்பாளர் சிம்பு, தயவுசெய்து பீப் சாங் வேண்டாம்” என ஆர்யா கேட்டுக்கொண்டார்.

இவரைத் தொடர்ந்து, விவேக்கும் தன் கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில்.. “சிம்புவின் வளர்ச்சி சந்தோஷம் அளிக்கிறது. வாழ்த்துக்கள்.

இசை உலகை இளையராஜா ஆட்சி செய்தபோது, உங்கள் தந்தை டி. ராஜேந்தர் சிறந்த பாடல்களை கொடுத்தார். நீங்களும் அப்படியே செய்யுங்கள்” என வாழ்த்தியுள்ளார்.

Arya ‏@arya_offl
I don’t think any announcement can get better than this @iam_str as #musicdirector phenomenal but no beep songs pls

Vivekh actor ‏@Actor_Vivek 5m5 minutes ago

@iam_str happy to know the new development Simbu! Wish you good luck!Remember wn raja sir was ruling, TR sir could giv superhit songs!

லாரன்ஸ் புதிய முயற்சி; மரக்கன்றுகளும் டோர் டெலிவரியும் இலவசம்

லாரன்ஸ் புதிய முயற்சி; மரக்கன்றுகளும் டோர் டெலிவரியும் இலவசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

lawranceசென்னையில் கடந்த வாரம் வர்தா புயல் வீசியது.

இதனால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்துவிட்டன.

தற்போது வரை சென்னை தெருக்கள் காடுகளாகவே காட்சியளித்து வருகின்றன.

இந்நிலையில் நடிகர் லாரன்ஸ் தனது ட்ரஸ்ட் மூலம் சென்னை முழுவதும் மரக்கன்றுகளை நட திட்டமிட்டிருக்கிறார்.

தங்கள் வீடுகள் அல்லது தங்களது தெருக்களில் வைக்க மரக்கன்று தேவைப் படுகிறவர்கள் 9791500866, 9790750784, 9003037939 என்ற எண்களுக்கு போன் செய்தால் வீடு தேடி வந்து மரக்கன்றை தருவதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை முதல் மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows