தென்னிந்தியா முழுவதும் இன்றுமுதல் புதிய படங்கள் ரிலீஸாகாது

தென்னிந்தியா முழுவதும் இன்றுமுதல் புதிய படங்கள் ரிலீஸாகாது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

From 1st March new films wont be released in South India

தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் கியூப், யூஎப்ஒ, பிஎக்ஸ்டி உள்ளிட்ட டிஜிட்டல் சேவை அமைப்புகள் மூலம் படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.

இதற்காக அந்த அமைப்புகள் திரைப்பட தயாரிப்பாளர்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை கட்டணமாக வசூலித்து வருகின்றன.

புதிய படங்களை திரையிடுவதற்கு டிஜிட்டல் சேவை அமைப்புகள் ரூ.22 ஆயிரத்தில் இருந்து ரூ.34 ஆயிரம் வரை கட்டணமாக வசூலிப்பதாக தயாரிப்பாளர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

மேலும் இந்த கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும் அவர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.

இதுபோல் மலையாளம், தெலுங்கு, கன்னட திரைப்பட தயாரிப்பாளர்களும் டிஜிட்டல் சேவை கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று மார்ச் 1ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல் புதிய படங்களை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களிலும் வெளியிடமாட்டோம் என்றும் அறிவித்துள்ளனர்.

இந்த போராட்டத்தை கைவிட தயாரிப்பாளர்களுக்கும், டிஜிட்டல் சேவை அமைப்பினருக்கும் நடந்த சமரச பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து இந்த மாதம் திரைக்கு வரவுள்ள கரு, பக்கா, இரும்புத்திரை உள்ளிட்ட பல படங்களின் ரிலீஸ்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

From 1st March new films wont be released in South India

Breaking: முதன்முறையாக ரஜினி படத்திற்கு அனிருத் இசை

Breaking: முதன்முறையாக ரஜினி படத்திற்கு அனிருத் இசை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini anirudhரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள காலா மற்றும் 2.0 படங்கள் திரைக்கு வரத் தயாராகி விட்டன.

இதில் காலா திரைப்படம் ஏப்ரல் 27ஆம் தேதி திரைக்கு வருகிறது.

2.0 படத்தின் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருவதால் படத்தின் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் ரஜினிகாந்த்.

இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார்.

இந்நிலையில் இப்படத்திற்கு இசையமைக்க அனிருத் ஒப்புக் கொண்டுள்ளாராம்.

ரஜினி படத்திற்கு அனிருத் இசையமைப்பது இதுவே முதன்முறையாகும்.

Anirudh composing music for Rajini movie directed by Karthik Subbaraj

அஜித்-59 படத்தை இயக்கும் கார்த்தி பட இயக்குனர்

அஜித்-59 படத்தை இயக்கும் கார்த்தி பட இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vinoth may direct thala 59சிவா இயக்கவுள்ள விஸ்வாசம் படத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித்.

இதில் நாயகியாக நயன்தாரா நடிக்க, யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா ஆகியோரும் நடிக்கவுள்ளனர்.

இமான் இசையமைக்கும் இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இதன் சூட்டிங்கை மார்ச் இறுதியில் தொடங்கி இந்தாண்டு 2018 தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வரத்திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தை முடித்துவிட்டு சதுரங்க வேட்டை, கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கக்கூடும் என செய்திகள் வந்துள்ளன.

மேலும் விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி ஆகியோரும் அஜித்தை சந்தித்து கதை கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

Theeran Adhigaaram Ondru fame Vinod may direct Ajith 59

காலா டீசர் ஒத்திவைப்பால் தனுஷ்-ரஞ்சித் கருத்து மோதல்..?

காலா டீசர் ஒத்திவைப்பால் தனுஷ்-ரஞ்சித் கருத்து மோதல்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush and Ranjith mis understanding because of Kaala teaser postponedரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தை தனுஷ் தயாரிக்க ரஞ்சித் இயக்கியுள்ளார்.

இப்படம் ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு அடுத்து வெளிவரவிருப்பதால் இதனை அவரது ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

இந்நிலையில் காலா டீசர் மார்ச் 1ஆம் தேதி காலை 11மணிக்கு வெளியாகும் என தனுஷ் ட்வீட் செய்திருந்தார். இதனை டைரக்டர் ரஞ்சித் ரீட்வீட் செய்திருந்தார்.

இதனையடுத்து இரண்டு மணி நேர இடைவெளியில் காஞ்சி சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திரர் சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் மரணத்தால் காலா டீசர் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.

தனுஷின் இந்த ட்வீட்டை ரஞ்சித் ரீட்வீட் செய்யவில்லை.

இதனால் ‘காலா’ டீசர் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டதில் ரஞ்சித்துக்கு உடன்பாடு இல்லை என கோலிவுட்டில் கூறப்படுகிறது.

தலித்திய அரசியல், அம்பேத்கர் மற்றும் பெரியாரின் சிந்தனைகளை தனது படங்களில் அவற்றை எதிரொலிப்பவர் ரஞ்சித்.

ஆனால் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் சுவாமிகள் பிராமண ஆதிக்கத்தை நிலைநாட்டுவதில் விருப்பமுள்ளவர்.

அவரது மரணத்தால் தான் இயக்கிய பட டீசர் ரிலீஸை தள்ளிவைத்ததை ரஞ்சித் விரும்பவில்லை என கிசுகிசுக்கப்படுகிறது.

Dhanush and Ranjith mis understanding because of Kaala teaser postponed

காலா டீசர்; ரஜினி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தனுஷ்

காலா டீசர்; ரஜினி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush apologies to Rajini fans for postpone of Kaala teaserரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள காலா படத்தின் டீசர் மார்ச் 1 ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என அப்பட தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பு வந்த 2 மணி நேரத்திற்கு பிறகு காலா டீசர் மார்ச் 1ஆம் தேதி வெளியாகாது. மார்ச் 2ஆம் தேதிதான் வெளியாகும் என அறிவித்தார்.

இதுகுறித்து அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது…

காஞ்சிபுரம் சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திரர் சரஸ்வதி சுவாமிகள் மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

அவரது மரணத்துக்கு இறுதி மரியாதை அளிக்கும் விதமாக ‘காலா’ படத்தின் டீசரை மார்ச் 2-ம் தேதி வெளியிடப்போவதாக அறிவித்திருந்தார் தனுஷ்.

மேலும் டீசருக்காக ஆவலாகக் காத்திருந்த ரசிகர்களை வருத்தமடையச் செய்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார் தனுஷ்.

Dhanush apologies to Rajini fans for postpone of Kaala teaser

மும்பையில் ஸ்ரீதேவி இறுதி ஊர்வலம்; ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி

மும்பையில் ஸ்ரீதேவி இறுதி ஊர்வலம்; ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

srideviதுபாய் நாட்டில் உயிரிழந்த ஸ்ரீதேவியின் உடல் பதப்படுத்தப்பட்டு அம்பானி அனுப்பிய தனிவிமானம் மூலம் நேற்றிரவு சுமார் 9.30 மணியளவில் மும்பைக்கு கொண்டுவரப்பட்டது.

இதையறிந்த அவரது ரசிகர்கள் ஏராளமானோர், இறுதியஞ்சலி செலுத்த அங்கு திரண்டனர்.

அவரது உடல் போனி கபூருக்குச் சொந்தமான செலிபிரேஷன் கிளப் வளாகத்தில் காலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது.

பொது மக்கள் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 வரை அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ரசிகர்கள் இரவு பகலாக வந்து காத்திருந்தர்.

பாலிவுட் நடிகர், நடிகைகள் மற்றும் விஐபிக்களும் அஞ்சலி செலுத்தினர்.

ஸ்ரீதேவியின் உடலுக்கு பொதுமக்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் மதியம் 3 மணியளவில் செலப்ரேசன் ஸ்போர்ட்ஸ் கிளப்பிலிருந்து இறுதி ஊர்வலம் தொடங்கியது.

கபூர் குடும்ப வழக்கத்தின்படி சேலை, பாரம்பரிய தங்க ஆபரணங்கள் மாலை அலங்காரத்துடன் ஸ்ரீதேவியின் பூத உடலை தாங்கி செல்லும் வாகனத்தை காண சாலையில் லட்சக்கணக்கான ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

பிற்பகல் 4.30 மணியளவில் வைல் பார்லே சேவா சமாஜ் தகன மையத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

More Articles
Follows