தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசை காவல் பணியில் பயன்படுத்த தடை

friends of policeசாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ், ஊரடங்கு நேரத்தில் விசாரணை என்ற பெயரில் காவலர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து 5 பேரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

கைதிகளை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் பேரில், அவர்கள் மதுரை சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் சித்ரவதை செய்யப்பட்ட வழக்கில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் குழுவினருக்கும் தொடர்பு உள்ள நிலையில் தூத்துக்குடியில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் குழுவினருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பே விழுப்புரம், திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை சரகத்தில் 4 மாவட்டங்களிலும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை பயன்படுத்தக் கூடாது என டிஐஜி பிரவீன்குமார் அபினபு உத்தரவு

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை பயன்படுத்த தடை என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசை ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை பயன்படுத்த கூடாது என அந்தந்த மாவட்ட கண்காணிப்பாளர்கள் தெரிவித்திருந்தனர்.

Overall Rating : Not available

Latest Post