சாத்தான்குளம் 4 போலீஸ் மீது இரட்டைக் கொலை வழக்கு; 5 போலீஸ் கைது

SI Raghu Ganeshசாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதை கொலை வழக்காக பதிவு செய்த சிபிசிஐடி போலீசார் 4 காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் வழக்கில் தொடர்புடையதாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ. ரகு கணேஷ், எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், காவலர் முத்துராஜ் உள்ளிட்ட 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு விவகாரத்தை இரட்டை கொலை வழக்காக சிபிசிஐடி போலீசார் பதிவு செய்துள்ளனர்.

ஜெயராஜ், பென்னிக்ஸ் அடுத்தடுத்த நாட்களில் இறந்ததால் தனித்தனியே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

சிபிசிஐடி போலீசார் நேற்று கொலை வழக்காக பதிவு செய்த நிலையில் தற்போது இரட்டை கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இந்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிபிசிஐடி போலீசாரின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் வாக்குமூலம் கொடுத்த தலைமை பெண் காவலர் ரேவதிக்கு உரிய பாதுகாப்பு வழங்கி, ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.

உயிரிழந்த இருவருக்கும் கொடுக்கப்பட்ட சிகிச்சை, உடல்நிலை குறித்த அனைத்து ஆதாரங்களையும் சிபிசிஐடி போலீசார் திரட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Overall Rating : Not available

Latest Post