தயாரிப்பாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ 10000; விஷால் அறிவிப்பு

For first time in Producer council Vishal announces Diwali bonus as Rs 10000பண்டிகை என்றால் போனஸ் இல்லாமல் இருந்தால் எப்படி சமாளிப்பது என்பதே பலரின் கேள்வியாக இருக்கும்.

எனவே தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் அரசும் மற்றும் ஒரு சில தனியார் நிறுவனங்கள் போனஸ் தொகை கொடுப்பார்கள்.

இந்நிலையில், சினிமா தயாரிப்பாளர் சங்கமும் தங்கள் உறுப்பினர்களுக்கு பரிசுத் தொகையை அறிவித்துள்ளது.

இதை சங்கத் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தயாரிப்பாளர்களின் குடும்பத்துக்கு பட்டாசும், இனிப்பும் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

ஆனால் இந்த ஆண்டு புதிதாக பொறுப்பேற்றிருக்கும் விஷால் தலைமையிலான அணி தொகையை வழங்குவது குறிப்பிடத்தக்கது.

அதற்கான விண்ணப்பங்களை தயாரிப்பாளர் சங்கத்தில் நேரிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கும்படி தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

For first time in Producer council Vishal announces Diwali bonus as Rs 10000

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Latest Post