ப்ளாப் படம் எப்படி ஹிட்டாகும்.? சிம்பு யாரை சொன்னார் தெரியுமா.?

ப்ளாப் படம் எப்படி ஹிட்டாகும்.? சிம்பு யாரை சொன்னார் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu angry speechசிம்பு நடித்துள்ள அச்சம் என் மடமையடா படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பத்து நாட்களில் ரூ. 50 கோடி வசூலை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தன் ட்விட்டர் பக்கத்தில் சிம்பு கூறியுள்ளதாவது…

ஓடாத படத்தை வெற்றிப் படம் என்று சொன்னால், அச்சம் என்பது மடமையடா படத்தை என்ன சொல்வது? என்று கேட்டு இருந்தார்.

இவர் யார்? படத்தை சொல்கிறார் என்பது தெரியவில்லை.

ஆனால் சில ரசிகர்களோ… தீபாவளிக்கு வெளியான ஒரு நடிகரின் படம் என்றும் சில ரசிகர்களோ, இல்லை இல்லை சமீபத்தில் (நவம்பர் 18, 2016) அன்று வெளியான படத்தை சொல்கிறார் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

ஹ்ம்.. சொன்னவருக்குதானே தெரியும் யார் என்பது? பாஸ்… உங்களுக்கு தெரியுமா? சொல்லுங்களேன்…

STR (@iam_str)
Admin :Disastrous flop movies are mentioning as blockbusters, what would u call #AYM ?.. Better to say v are happy than mentioning verdict.

காயப்படுத்தியவர்களுக்கு நன்றி கூறி விலகிய லட்சுமி ராமகிருஷ்ணன்

காயப்படுத்தியவர்களுக்கு நன்றி கூறி விலகிய லட்சுமி ராமகிருஷ்ணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress lakshmi ramakrishnanபிரபல நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் ட்விட்டரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன், கடவுள் இருக்கான் குமாரு படத்தில் தன்னை கேலி செய்ததாக கூறி ஜி.வி.பிரகாஷ், RJ பாலாஜி ஆகிய இருவரையும் கேள்வி கேட்டு தாக்கி இருந்தார்.

இதற்கு ஆதரவாக சிலர் பேசினாலும், சில ரசிகர்கள் இவரை கேலி செய்துள்ளனர்.

இதனால்  உணர்ச்சி வசமான லட்சுமி சமூக வலைத்தளங்களிலிருந்து வெளியேறுகிறேன் என தெரிவித்துள்ளார்.

அதில்… தனக்கு ஆதரவளித்தவர்களுக்கும், தன்னை காயப்படுத்தியவர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

Coming out of all social media NOW…Thanks to all my supporters & Best wishes to those who hurt me & insulted me:) Good luck & Bye

‘கத்தி’க்கு பிறகு மீண்டும் விஜய் செய்த காரியம்

‘கத்தி’க்கு பிறகு மீண்டும் விஜய் செய்த காரியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay had friendly meet with mediaவிஜய் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள படம் பைரவா.

இப்படத்தை அடுத்து விரைவில் அட்லி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில் நேற்று திடீரென பத்திரிகையாளர்களை சந்தித்தார் விஜய்.

இச்சந்திப்பு சென்னையில் உள்ள ஒரு பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

மரியாதை நிமித்தமாக பத்திரிகையாளர்களை சந்தித்து, ஒவ்வொருவருடனும் தனி தனியாக சந்தித்து, அவர்கள் நலம் விசாரித்தார்.

மேலும் அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டு அவர்களை சந்தோஷப்படுத்தினார்.

கத்தி படம் வெளியீட்டின் போதும் இதுபோல் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்சார் அதிகாரியை கண்டித்து ஜாக்குவார் தங்கம்-தியா உண்ணாவிரதம்

சென்சார் அதிகாரியை கண்டித்து ஜாக்குவார் தங்கம்-தியா உண்ணாவிரதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jaguar thangam and director thiya hunger strike against censor officerமெஹெக் புரொடக்சன்ஸ் சார்பில் ரூபேஷ்.P மற்றும் எஸ்.எஸ்.பிக் சினிமாஸ் சார்பில் E.சிவசுப்பிரமணியன் & K.R. சீனிவாஸ் தயாரிப்பில் எடுக்கப்பட்டுள்ள படம் தான் ‘கன்னா பின்னா’.

இந்தப்படத்தின் இயக்குநர் தியா.. நாளைய இயக்குனர்’ குறும்பட போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்.
இந்தப்படத்தை இயக்கியுள்ளதோடு கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார்.

திருமணம் செய்தால் அது அழகான பெண்ணைத்தான், திருமணம் செய்துகொள்வேன் என அழகான பெண்களை தேடி அல்லோலப்படும் நாயகனின் கதைதான் இந்த ‘கன்னா பின்னா’.

இதை அக்மார்க் காமெடி படத்தை இயக்கியுள்ள தியா தனது படத்திற்கு உரிய சென்சார் சான்றிதழ் பெற போராடி வருகிறார்.

இதுபற்றி இயக்குனர் தியா கூறும்போது…

“ஜனரஞ்சகமான காமெடி படத்தையே நான் இயக்கியுள்ளேன்.. அதுவும் சென்சார் விதிகளுக்கு உட்பட்டுத்தான்.

ஆனால் தணிக்கை அதிகாரியான மதியழகன், இந்தப்படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் தான் தருவேன் என கூறியதோடு, விளக்கம் கேட்ட என்னை அவமானப்படுத்தி வெளியே நிற்கவைத்துவிட்டு, படத்தின் தயாரிப்பாளரிடம் பேரம் பேசுகிறார்

தணிக்கை என்கிற அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு சினிமாவை அழிக்கவந்த விஷக்கிருமி என்று அதிகாரி மதியழகனை, சொன்னால் அதுதான் சரியான வார்த்தையாக இருக்கும்.

நியாயமான என்னுடைய எந்த கேள்விகளுக்கும் அவரால் பதில் சொல்ல முடியவில்லை. காரணம் ஒருதலைபட்சமாகவே அவர் நடந்துகொள்கிறார்.

அதனால் எனக்கு நியாயம் கேட்டும், தணிக்கை அதிகாரி மதியழகனின் இந்த அராஜாக போக்கை கண்டித்தும் நாளை காலை 10 மணியளவில் சாஸ்திரி பவன் முன்பாக உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன்.

இந்த உண்ணாவிரதத்துக்காக கமிஷனரிடம் அனுமதி கேட்டும், எனக்கு கிடைக்கவில்லை.

இதுபற்றி தயாரிப்பாளர் சங்க (கில்டு) தலைவரும் திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனரும் ஸ்டண்ட் மாஸ்டருமான ஜாக்குவார் தங்கத்திடம் பேசினேன்.. அவரும் இந்த உண்ணாவிரதத்துக்கு தனது ஆதரவை தந்துள்ளார்.

நாளை காலை அவரது தலைமையில் தான் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொள்ள இருக்கிறோம்” என கூறியுள்ளார்.

இதுபற்றி ஜாக்குவார் தங்கம் கூறியதாவது…

“இயக்குனர் தியா சொல்வது நூற்றுக்கு நூறு சரி.. அவர் மட்டுமல்ல, சிறிய பட தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் பலரும் தணிக்கை அதிகாரி மதியழகனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் பல கோடி ரூபாய் மதிப்பிலான படங்கள் ரிலீசாகாமல் முடங்கியுள்ளன.. அவ்வளவு ஏன் நான் எடுத்திருக்கும் படத்தின் ட்ரெய்லரில் சிறுவர்கள் நம் தேசிய கொடியை பிடித்தபடி நிற்கும் காட்சி இருப்பதால், அதை காரணம் காட்டி சென்சார் சான்றிதழ் தர மறுத்துவிட்டார்.

நம் சிறுவர்கள், நம் தேசிய கொடியை பிடிக்காமல் பாகிஸ்தான் தேசிய கொடியையா பிடிக்க முடியும்.. அந்த அளவுக்கு தணிக்கை அதிகாரி மதியழகன் எதேச்சதிகார போக்குடன் செயல்படுகிறார்.

சிறிய பட்ஜெட் படங்களே வரக்கூடாது என அவர் நினைக்கிறார். பெரிய படங்களுக்கு மட்டும் ஆதரவாக நடந்துகொள்கிறார்.

இந்தநிலைக்கு ஒரு முடிவுகட்ட நாங்களும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.. அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த உண்ணாவிரத்தில் பங்கேற்கிறேன்” என கூறியுள்ளார்..

பாலமுரளி கிருஷ்ணா மறைவுக்கு கமல்-சிவக்குமார் இரங்கல்

பாலமுரளி கிருஷ்ணா மறைவுக்கு கமல்-சிவக்குமார் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal sivakumar paid homage to balamurali krishnaபிரபல இசைக் கலைஞரான பாலமுரளி கிருஷ்ணா உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.

அவரது மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன், சிவக்குமார், பின்னணி பாடகர் யேசுதாஸ் உள்ளிட்டவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சிவக்குமார் பேசியதாவது….

பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் கர்ணாடக சங்கிதத்தில் ஒரு பீஸ்மர் என்று சொல்லலாம்.

அப்படி பட்ட மனிதர் சினிமாவுக்கு வருவதை விரும்பமாட்டார்கள் ஆனால் அதையும் தாண்டி அந்த மாமனிதர் அருட்செல்வர் A.P.நாகராஜன் அவர்களின் வேண்டுகோளை ஏற்று திருவிளையாடல் படத்துல T.S. பாலையா அவர்களுக்கு ஒரு நாள் போதும்மா இன்று ஒரு நாள் போதும்மா. என்ற பாடலை பாடினார்.

அந்த படம் வெற்றி படமாக ஓடியதற்கு அந்த பாடல் 25% சதவிகிதம் காரணமாக அமைந்தது. ஏன் என்றால் பாலமுரளியின் மாறுபட்ட குரலும் T.S.பாலையாவின் நடிப்பும் ஒரு காரணம்.

அதன் பிறகு அவர் வேறு நடிகர்களுக்கு டூயட் பாடியதாக எனக்கு ஞாபகம் இல்லை.

ஆனால் இளையராஜா இசையில் கவிகுயில் படத்தில் எனக்காக அவர் பாடினார் சிக்மகளூர் அதிகாலை 3 மணியளவில் முடுகர என்னும் இடத்தில் நானும், ஸ்ரீதேவியும் கிருஷ்ணர், ராதா வேடத்தில் நடித்தோம்.

அந்த பாடல் சின்ன கண்ணன் அழைகிறான் என்கிற பாடல்காட்சிகள் எடுத்தோம். அந்த பாடல் தமிழ்சினிமா ரசிகர்கள் அனைவரும் மரக்க முடியாத பாடல் அந்த மாமனிதர் எனக்காக பாடினார் அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று இறைவனை வேண்டி கொள்கிறேன்.

கமல்ஹாசன் பேசியதாவது…

இந்தியாவே பெருமைப்படும் இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா. அவரது மறைவு பேரிழப்பாகும்.

அவரைப் பற்றி பேச எனக்கு அருகதை இருப்பதாக நான் நினைக்கவில்லை.

என்னைவிட தகுதி உள்ள இசை கலைஞர்களும், அவரது சிஷ்யர்களும் அவரைப் பற்றி பேச இங்கே உள்ளனர்.

இங்கே நான் பேசியதை பெருமையாக நினைக்கிறேன்.

இப்படி ஒரு இசை மேதை இங்கே வாழ்ந்தார் என்ற செய்தியே வரும் தலைமுறைக்கு ஆச்சரியமாக இருக்கும்.” என்றார் கமல்ஹாசன்.

பாகுபலி-2 சீன்களை லீக் செய்த டிசைனர் கைது

பாகுபலி-2 சீன்களை லீக் செய்த டிசைனர் கைது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Baahubaliராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் 300 கோடி ரூபாய் செலவில் தயாராகி வருகிறது.

இந்நிலையில் பாகுபலி படத்தின் போர்க்கள காட்சிகள் இணையதளத்தில் வெளியானது.

எனவே, பட தயாரிப்பாளர் ஹைதராபாத் போலீசில் புகார் செய்தார்.

இக்காட்சிகளை கிராபிக்ஸ் டிசைனர் கிருஷ்ண தயானந்த சவுத்ரிதான் இணையத்தில் வெளியிட்டதாக கண்டுபிடித்த போலீஸ் அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.

மேலும் இணையத்தில் உள்ள அந்த காட்சிகளை நீக்குமாறு யூ டியூப் நிறுவனத்திற்கு தகவல் அனுப்பியுள்ளனர்.
அந்த காட்சிகள் தற்போது நீக்கப்பட்டுவிட்டது.

More Articles
Follows