அவுட்டிங் வராத அஜித்; அலீஷா சொன்ன சீக்ரெட்.. இதெல்லாம் காரணமா?

அவுட்டிங் வராத அஜித்; அலீஷா சொன்ன சீக்ரெட்.. இதெல்லாம் காரணமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

First women bike racer Alisha Abdulla reveals secret of Ajithநடிகர் அஜித் ஒரு தீவிர பைக் பிரியர் என்பது நாம் அறிந்த ஒன்றுதான். இவர் பைக் மற்றும் கார் ரேஸ்களில் அதிகம் கலந்துக் கொண்டுள்ளார்.

இவருடன் கலந்துக் கொண்டவ்ர்களில் ஒருவர் பெண் ரேஸர் அலீஷா அப்துல்லா.

இவர் நடிகர் அஜித் பற்றி ஒரு விஷயத்தை ட்விட்டர் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

அதாவது நடிகர் அஜித் பொது நிகழ்ச்சிகள் மற்றும் தன் திரைப்பட புரமோசன்களில் கூட கலந்துக் கொள்ளாதது ஏன்? என தெரிவித்துள்ளார்.

அஜித்தை கண்டால் ரசிகர்கள் தனியாக விடமாட்டார்கள் என்பதால் தான் அவர் வெளியே வருவதில்லை.

பைக் ரேஸ் டிராக்கில் அவரை நடக்கக்கூட யாரும் விடமாட்டார்கள். அவரால் ஒரு இன்ச் கூட நகர முடியாது. இதனை நானே பார்த்திருக்கிறேன்.

இதனால் தான் அஜித் வெளியே வர கூடாது என முடிவெடுத்துவிட்டார் என தெரிவித்துள்ளார்.

மேலும் அஜித் கூட்டத்தில் சிக்கி தவிக்கும் புகைப்படத்தையும் அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். (See below pic)

அஜித்தை விட எத்தனையோ பெரிய பெரிய விஐபிக்களை நாம் பார்த்திக்கிறோம். அவர்களை விடவா அஜித்துக்கு பெரிய கூட்டம் உள்ளது.

அவர்கள் எல்லாம் வெளியே வருவதில்லையா..? இதெல்லாம் ஒரு காரணமா..? சரி அது அஜித்தின் இஷ்டம் என்று விட்டுவிடுவது தான் நல்லது.. நமக்கேன் ஏன் வம்பு..

First women bike racer Alisha Abdulla reveals secret of Ajith

Why ajith does not come out

நாய் பாடிய கொரோனா சாங்.; வீடியோ பதிவிட்ட இசையமைப்பாளர் சாம் CS

நாய் பாடிய கொரோனா சாங்.; வீடியோ பதிவிட்ட இசையமைப்பாளர் சாம் CS

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dog Sung Corona virus song Video goes viralகொரோனா வைரஸை கட்டுப்படுத்த இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இந்தியாவில் வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்த ஊரடங்கு மே 1 வரை இருக்கும் என கூறப்படுகிறது.

உலகமெங்கும் உள்ள மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடப்பதால் ஒவ்வொருவரும் தங்களுக்க பிடித்தவற்றை செய்து வீடியோவாக பதிவிட்டு இணையத்தை கலக்கி வருகின்றனர்.

ஒரு சிலர் கொரோனா தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு சமூக வலைத்தளங்களின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ். கொரோனா பாடல் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த பாடலை நாய் அழகாக பாடுகிறது. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவை அவர் எங்கோ பார்த்து பகிர்ந்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.

Dog Sung Corona virus song Video goes viral

https://www.instagram.com/p/B-voySZjLn4/

பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் வரிசையில் இணைந்த தமிழர் Dr அப்துல் ஹலீம்

பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் வரிசையில் இணைந்த தமிழர் Dr அப்துல் ஹலீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kentucky Colonel award for Guinness fame Dr Abdul Halim அமெரிக்காவின் கெண்டகி மாகாண அரசின் உயர்ந்த Kentucky Colonel விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த கின்னஸ் உலக சாதனையாளரும் தவில் கலைஞருமான Dr. அப்துல் ஹலீம் அவர்களை அமெரிக்க கெண்டகி மாகாண அரசு தேர்ந்தெடுத்துள்ளது.

அமெரிக்காவின் இந்த உயர்ந்த விருது இதற்கு முன்னர் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகளான பில் கிளிண்டன், ஜார்ஜ் H.W புஷ், புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் முகமது அலி போன்றவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

டாக்டர். அப்துல் ஹலீம் இதற்கு முன்னர் ஜார்ஜியா நாட்டு அரசாங்க விருதான KNIGHT விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது போன்ற உயர்ந்த விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

யார்..? இந்த டாக்டர். அப்துல் ஹலீம் , இவர் இதுவரை அப்படி என்ன சாதனைகளை படைத்துள்ளார் என்பதை பற்றி பார்க்கலாம்….

இவருடைய இயற்பெயர் ராஜராஜன். பின்னர் தனது பெயரை அப்துல் ஹலீம் என மாற்றிக்கொண்டார். இவரது தந்தை பெயர் நடராஜன், தாய் பெயர் ஹேமலதா. இவர் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலையில் வசித்து வருகிறார்,

இவருடைய அம்மா கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தை சார்ந்தவர், இவரது தந்தை கன்னியாகுமரி மாவட்டத்தின் குளச்சல் பகுதியை சேர்ந்தவர் , இவரது தாய் பாடகி.

அதனாலே இவருக்கு இசை மீதான ஆர்வம் தோன்றியது. இசை மீது அதிக ஆர்வம் கொண்ட இவர் சிறு வயது முதல் எங்கு இசை கச்சேரி இருந்தாலும் அங்கு சென்று விடுவார்.

இசை மீது கொண்ட ஆர்வத்தினால் குமரி மாவட்டம் அய்யன்பாறவிளையை சார்ந்த கிருஷ்ணன் ஆசான் என்பவரிடம் முறைப்படி தபேலா கற்றுக்கொண்டார். அதனால் அப்துல் ஹலீம் உடைய முதல் குரு கிருஷ்ணன் ஆசான் ஆவார்.

பின்னர் உலக பிரபல கடம் வித்வான் திரு. வி. சுரேஷ் அவர்களிடம் கடம் கற்றுக்கொண்டார்.

அகில இந்திய வானொலி நிலையத்தில் “A” கிரேட் கடம் வித்வானாக உள்ள அப்துல் ஹலீம் பல மேதைகளுடன் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார்.

தனது பள்ளி படிப்பை முடித்த பின், இசையில் ஆர்வம் மிகுந்த அப்துல் ஹலீம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் B.music (Bachelor of Arts in Music) சேர்ந்து படிக்கத் துவங்கினார்.

பின்னர் கேரளா மாநிலம் கோட்டயத்தில் M.A (Master of Arts in Music) படித்தார். பின்னர் மேலும் படிக்கவேண்டும் என கூறி தமிழ் பல்கலைக்கழகம் தஞ்சையில் M.Phil In Music படித்தார்.

World records university, UK இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

இவருடைய சாதனைகள்:

1) உலகின் வேகமான கடம் வாசிப்பாளர்:
இந்த சாதனையை இவர் 2011 ஆம் ஆண்டு தக்கலையில் நிகழ்த்தியுள்ளார். ஒரு வினாடிக்கு 20 பீட்டு அதாவது ஒரு நிமிடத்திற்கு 1220 பீட்டுகளை வாசித்துள்ளார். இந்த சாதனையை India Book Of Records , Asia Book Of Records and World Fastest Drummer America ஆகியோர் அங்கீகரித்தனர்.

2) உலகின் வேகமான டாம்பரின் வாசிப்பாளர்:
டாம்பரின் என்பது ஒரு கையால் தட்ட கூடிய இசைக் கருவி. இதில் நிமிடத்திற்கு 732 பீட்டுகளை வாசித்து இந்த சாதனை படைத்தார். 2011ஆம் ஆண்டு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.இந்த சாதனையை India Book Of Records , Record Holders Republic ,UK ஆகியோர் அங்கீகரித்தனர்.

3)உலகின் வேகமான ஜெம்பே வாசிப்பாளர்:
ஜெம்பே இசைக்கருவி பெரும்பாலும் தென்னாப்பிரிக்க நாட்டில் பயன்படுத்தப்படுத்தக்கூடியது. இதில் ஒரு நிமிடத்திற்கு ஆயிரம் பீட்டுகள் வாசித்துள்ளார். இந்த சாதனையை 2011 ஆம் ஆண்டு நிகழ்த்தியுள்ளார். இந்த சாதனையை India Book Of Records , Record Holders Republic ,UK ஆகியோர் அங்கீகரித்தனர

4)உலகின் அதிக நேரம் தொடர்ந்து கடம் வாசிப்பு:
168 மணி நேரம் அதாவது தொடர்ந்து ஏழு நாள்கள் கடம் வாசித்து இந்த சாதனையை செய்துள்ளார். இந்த சாதனையில் இவருடன் 14 மாணவர்கள் பங்கேற்று உள்ளனர். இந்த சாதனையை நெல்லை மாவட்டத்தில் உள்ள வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் வைத்து நிகழ்த்தினார். இந்த சாதனையை Record Holders Republic ,UK அங்கீகரித்தது.

5)உலகிலேயே அதிக நேரம் தொடர்ந்து செண்டை வாசிப்பு:
கடந்த 2012-ம் ஆண்டு எட்டு மணி நேரம் முப்பது நிமிடம் தொடர்ந்து செண்டை வாசித்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்த சாதனையை Record Holders Republic ,UK அங்கீகரித்தனர்.

6)உலகில் வேகமான கடம் வாசிப்பாளர்:
ஒரு மணி நேரத்தில் 57,600 பீட்டுகளை வாசித்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.இந்த சாதனையை Record Holders Republic ,UK அங்கீகரித்தனர்.

7)உலகில் மிகப்பெரிய கடம் :
உலகின் மிகப்பெரிய கடம் ஒன்றை உருவாக்கி உள்ளார். அந்த கடத்தின்உயரம் 11 மீட்டரும் , விட்டம் 2.52 ம் கொண்டது. இந்த கடத்தை வாசித்ததின் மூலம் உலகின் மிகப்பெரிய கடம் செய்ததற்கான சாதனையை படைத்தார் .இந்த சாதனை கின்னஸ் புத்தகத்திலும் , லிம்கா சாதனையாளர் புத்தகத்திலும் இடம் பெற்றது.

8)உலகில் அதிக நேரம் தொடர்ந்து உடுக்கு வாசித்தது:
5 மணி நேரம் 46 நிமிடங்கள் தொடர்ந்து உடுக்கு வாசித்துள்ளார். இந்த சாதனையை கடந்த 2012-ம் ஆண்டு நெல்லை மாவட்டத்தில் உள்ள வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுடன் நிகழ்த்தினார்.இந்த சாதனையை India Book Of Records அங்கீகரித்தது.

9)உலகில் அதிக நேரம் தொடர்ந்து கடம் வாசிப்பு :
இது ஒரு மாரத்தான் வாசிப்பு ஆகும். தொடர்ந்து 12 மணி நேரம் இடைவிடாது கடம் வாசித்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவருடன் சேர்ந்து சில மாணவர்கள் கடம் வாசித்தனர். இதனை வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் நிகழ்த்தினார்.இந்த சாதனையை Record Holders Republic அங்கீகரித்தது.

10) உலகின் நீண்ட மற்றும் பெரிய கடம் கச்சேரி:
இந்த சாதனையை இவர் உடன் நூறு மாணவர்கள் ஒரு நாள் முழுவதும் கடம் கச்சேரி நடத்தி இந்த சாதனையை நடத்தியுள்ளனர். இந்த சாதனை பாலகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் நடந்து உள்ளது. இந்த சாதனையை Record Holders Republic ,UK அங்கீகரித்தனர்.

Kentucky Colonel award for Guinness fame Dr Abdul Halim

என் கிரேக்க கடவுள் ஹ்ருத்திக் ரோஷனை சந்திப்பேன்.. – அர்ஜெய்

என் கிரேக்க கடவுள் ஹ்ருத்திக் ரோஷனை சந்திப்பேன்.. – அர்ஜெய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Hrithik Roshan is my role model says Actor Arjaiகிராபிக்ஸ் டிசைனராக இருந்து தற்போது பலருக்கு அறிமுகமான நடிகராக மாறியுள்ளவர் நடிகர் அர்ஜெய்.

நடிகர் விஷாலின் நட்பு இவருக்கு கிடைக்கவே அதனை பயன்படுத்தி தற்போது பல படங்களில் நடித்துள்ளார்.

‘நான் சிகப்பு மனிதன்’, ‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘தெறி’, ‘சண்டக்கோழி 2’ உள்ளிட்ட பலர் படங்களில் இவரின் கேரக்டர் பேசப்படும் வகையில் இருந்தன.

படங்களில் நடிக்க தொடங்கிய பின் சினிமாவுக்கு ஏற்றவாறு தன் உடலை சிக்ஸ் பேக் வைத்து அசத்தி வருகிறார்.

தான் உடலமைப்பை மாற்றி, நடிகராக ஆனதற்கு காரணம் ஹ்ருத்திக் ரோஷன் என்று ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் அர்ஜெய்.

அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருப்பதாவது:

“2006-ம் ஆண்டு, நான் டிஜிட்டல் ஊடகம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தேன். அங்கு என் கனவான நடிப்பைப் பற்றி நான் மறந்து விட்டிருந்தேன்.

அந்த இடத்தில் என்னுடன் பல வட இந்தியர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். ஒரு நாள் வேலை முடிந்து நான் வீட்டுக்குச் செல்லும்போது, இவ்வளவு சீக்கிரம் வீட்டுக்குச் சென்று என்ன செய்யப் போகிறாய் என்று சொல்லி, என்னை அவர்களுடன் படத்துக்கு வரச் சொன்னார்கள்.

அப்போதுதான் நான் ‘தூம் 2’ பார்த்தேன். படத்தின் நாயகன் ஹ்ரித்திக் ரோஷன். உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்தார்.

அவரது நடிப்பையும், நடனத்தையும் விவரிக்க வார்த்தைகள் இல்லை.

ஏன் சென்னை வந்தாய், இப்போது என்ன செய்கிறாய் என்ற கேள்வி எழுந்தது.

அப்போதுதான் நான் ஜிம்முக்குச் செல்வது என்று முடிவெடுத்தேன். அந்த முடிவுக்கு முதல் காரணம் ஹ்ரித்திக் ரோஷன்.

அவர் தான் என் கிரேக்கக் கடவுள். எனது உந்துதல். திரைத்துறையில் நான் நடிகனாக நுழைய வேண்டும் என்று ஆர்வத்தைத் தூண்டியவர்.

இன்று நான் 15 படங்கள் வரை நடித்திருக்கிறேன். ஒருநாள் கண்டிப்பாக நான் எனது கிரேக்கக் கடவுளைச் சந்திப்பேன்”.

இவ்வாறு அர்ஜெய் தெரிவித்துள்ளார்.

Hrithik Roshan is my role model says Actor Arjai

சன் டிவியில் ரஜினி விஜய் சூர்யா படங்கள்; 2 நாட்களில் 10 படங்கள்

சன் டிவியில் ரஜினி விஜய் சூர்யா படங்கள்; 2 நாட்களில் 10 படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sun TV celebrating 27 years with 10 movies in 2 daysகொரோனா வைரசை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இதனையடுத்து மக்கள் அனைவரும் வீட்டிலேயே கடந்த 18 நாட்களாக முடங்கியுள்ளனர்.

இதனால் டிவி.க்களில் பழைய சீரியல்களை ஒளிப்பரப்ப தொடங்கியுள்ளனர்.

இதனையடுத்து சன் டிவி புதிய முயற்சியாக இதுவரை இல்லாத அளவில் 2 நாட்களில் 10 படங்களை ஒளிப்பரப்ப முடிவு செய்துள்ளது.

ஏப்ரல் 13 அன்று 5 படங்களையும் ஏப்ரல் 14 தேதியில் 5 படங்களையும் ஒளிப்பரப்புகின்றனர்.

ஏப்ரல் 13-ம் தேதி காலை 9.30 மணிக்கு ‘கத்திசண்டை’, 12 மணிக்கு ‘ரமணா’, 3 மணிக்கு ‘மீசைய முறுக்கு’, 6,30 மணிக்கு ‘சீமராஜா’ மற்றும் 9.30 மணிக்கு ‘வேலையில்லா பட்டதாரி’ ஆகிய படங்கள் ஒளிபரப்பப்படுகின்றன.

ஏப்ரல் 14-ம் தேதி காலை 9.30 மணிக்கு ‘கலகலப்பு 2’, 12.30 மணிக்கு ‘காப்பான்’, 3.30 மணிக்கு ‘டகால்டி’, 6.30 மணிக்கு ‘தர்பார்’ மற்றும் இரவு 9.30 மணிக்கு ‘நண்பேன்டா’ ஆகிய படங்கள் ஒளிபரப்பாகின்றன.

சன் டிவி தொடங்கி 27 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு தான் இந்த ஏற்பாடாம்.

திரைப்படங்களை மட்டுமே ஒளிபரப்பும் பல சேனல்கள் உள்ளன.

ஆனால் அதை தாண்டி தாண்டி இதர சேனல்களில் இப்படியான தொடர் படங்கள் ஒளிபரப்பு இதுவரை நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Sun TV celebrating 27 years with 10 movies in 2 days

ஊரடங்கு காலத்தில் ‘மாஸ்க்’ திருமணம் செய்த ஹீரோ & ஹீரோயின்

ஊரடங்கு காலத்தில் ‘மாஸ்க்’ திருமணம் செய்த ஹீரோ & ஹீரோயின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actors Arnav Vinyaas and Vihana got married அர்னவ் வினாயஸ் மற்றும் விஹானா… இவர்கள் இருவரும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

மண்டியா என்ற பகுதியை சேர்ந்தவர் அர்னவ் வினாயஸ். கர்நாடகாவில் சிவமொக்காவை சேர்ந்தவர் விஹானா.

இவர்கள் இருவரும் கன்னட சினிமாவின் இளம் நடிகர், நடிகை ஆவார்கள்.

இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர்.

எனவே பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய காத்திருந்தனர்.

நட்சத்திர ஜோடிகள் என்பதால் பிரமாண்டமாக திருமணத்தை நடத்தவிருந்தனர்.

ஆனால் தற்போது கொரோனா வைரசை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் இவர்கள் மிக எளிமையாக திருமணம் செய்துள்ளனர்.

இருவரின் குடும்பத்தினர் மட்டுமே விழாவில் கலந்துக் கொண்டுள்ளனர்.

மணமக்கள் இருவரும் மாஸ்க் அணிந்தபடியே திருமணம் செய்தனர்.

Actors Arnav Vinyaas and Vihana got married

More Articles
Follows