இரட்டை வேடம் போட்டு த்ரிஷா ஆடும் *மோகினி* ஆட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முதன்முறையாக த்ரிஷா இரட்டை வேடங்களில் நடித்துள்ள மோகினி திரைப்படம் வருகிற ஜீலை 27ஆம் தேதி வெளியாகிறது.

எனவே மோகினி திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் நாயகி த்ரிஷா, இயக்குனர் மாதேஷ், தயாரிப்பாளர் லட்சுமன், நகைச்சுவை நடிகர்கள் சுவாமிநாதன், கணேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இயக்குநர் மாதேஷ் பேசியது :

இந்த படத்தை மிகபிரமாண்டமான படமாக உருவாக்கியுள்ளோம். படத்தில் நாயகி த்ரிஷா சிறப்பாக நடித்துள்ளார். த்ரிஷா நினைத்திருந்தால் கமர்ஷியல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கலாம்.

ரொமாண்டிக் காட்சிகளில் நடித்துவிட்டு அழகாக சென்றிருக்கலாம். ஆனால் இந்த படத்தில் சிரமப்பட்டு நடித்திருக்கிறார். இந்த படம் ஹாரர் படமாக இருந்தாலும் படத்தில் நிறைய எமோஷன்ஸ் காட்சிகள் குடும்பத்தை கவரும் வகையில் இருக்கும். இது ஹாரர் படமாக இருந்தாலும் வழக்கமான படமாக இருக்காது.

படத்தில் எபி ஜெனெடிக்ஸ் என்ற கான்செப்ட் உள்ளது. டிஎன்ஏ தொடர்பு பற்றிய விஷயங்கள் தான் படத்தின் முக்கியமான விஷயம். இப்படத்தின் vfx காட்சிகள் லண்டனில் எடுக்கப்பட்டது.

இப்படம் தமிழகத்தில் வெளியாவது போல் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் அதிக அளவிலான திரையரங்குகளில் வெளியாகுகிறது. படத்தில் த்ரிஷா நிறைய சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்துள்ளார். படத்தில் சோட்டானிக்கரை கோவிலில் நாங்கள் கண்ட உண்மையான விஷயங்களை கிளைமாக்ஸ் காட்சிகையாக உருவாக்கியுள்ளோம் என்றார் இயக்குநர் மாதேஷ்.

த்ரிஷா பேசியது :-

நான் இப்படத்தில் மோகினி மற்றும் வைஷ்ணவி என்ற இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். நான் முதன் முதலில் நடித்துள்ள இரட்டை கதாபாத்திரம் இது தான்.

தினம் தினம் காலை எழுந்து செய்திதாளை படித்தால் அதில் குழந்தைகளுக்கு நடக்கும் அநீதிகள் பற்றி தான் செய்தி அதிகமாக உள்ளது. அந்த செய்திகளை படிக்கும் போது மனதுக்கு வருத்தமாக உள்ளது.

அந்த செய்தியை படித்த நாள் முழுவதும் நமக்கு அதை பற்றிய நினைப்பு தான் இருக்கும். மோகினி படத்திலும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு நடக்கும் அநீதிகளை பற்றிய பல விஷயங்களை பேசியுள்ளோம்.

இப்படத்தில் குடும்பத்தோடு அனைவரும் வந்து பார்க்கும் வகையில் நிறைய விஷயங்கள் உள்ளது. படத்தை நாங்கள் லண்டன் , பாங்காக் போன்ற இடங்களில் படமாக்கியுள்ளோம் என்றார் த்ரிஷா.

First time Trisha done dual roles in Mohini releasing on 27th July 2018

கமல்-ரஜினியை விட முதல்வரை ஆதரிக்கலாம் என சாருஹாசன் கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் கமல்ஹாசனின் அண்ணனும் நடிகருமான சாருஹாசன் நீண்ட இடைவெளிக்கு பிறகு தாதா 87 என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது.

ரஜினி, கமல் இருவரும் அரசியலுக்கு வருவதை அடுத்து அவர்கள் பற்றிய கருத்துக்களை அவ்வப்போது கூறி வருகிறார்.

ரஜினியை உயர்வாகவும் கமலை கடுமையாக விமர்சித்தும் பேசி வருகிறார்.

தற்போது முதன்முறையாக ஒரு எப்எம். நிகழ்ச்சி ஒன்றில்… அவர்கள் இருவரை விட முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

இருவரும் தங்களின் சுறநலத்துக்காக அரசியலுக்கு வந்துள்ளதாகவும் ரஜினி பா.ஜ., உடன் கூட்டணி வைப்பார் என்றும் தமிழக கட்சிகளுடன் கமல் கூட்டணி வைப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.

TN CM Edappadi Palaniswami is better than Rajini and Kamal says Charuhassan

அமெரிக்காவில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் கமல்-ஸ்ருதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சுதந்திர தின கொண்டாட்டம் ஆண்டுதோறும் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அணிவகுப்புடன் நடந்து வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்துக் கொள்வர்.

அந்த வகையில், இந்த ஆண்டு அங்கு ஆகஸ்ட் 15ந் தேதி நடக்கும் இந்திய சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் நடிகர் கமல்ஹாசனும் அவரது மகள் நடிகை ஸ்ருதிஹாசன் ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.

இவர்களுடன் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விவியன் ரிச்சர்ட்சும் கலந்து கொள்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Kamal And Shruthi Celebrate India Independence Day In America

*பொத்திட்டு இருந்தாலே கெத்தோட வாழலாம்..* – யோகிபாபு கலகல

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குறுகிய காலத்தில் 100 படங்களை தொட்டுவிட்டார் நடிகர் யோகிபாபு.

தான் நடித்த பட பிரஸ்மீட்டுக்கு கூட வரமுடியாத அளவுக்கு மனிதர் படு பிஸியாகிவிட்டார்.

தற்போது விஜய்யுடன் சர்கார், அஜித்துடன் விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

அண்மையில் இவரது பேட்டியில்…

எனக்கு ரோல் மாடல் யாரும் கிடையாது. கவுண்டமணி, செந்தில் இருவரையும் ரொம்ப பிடிக்கும்.

நல்ல நல்ல இயக்குனர்கள் எனக்கு கிடைச்சாங்க. மக்களுக்கும் என்னைப் புடிச்சிட்டு.

எனக்கு காமெடி வசனங்கள் எழுத எந்த அணியும் கிடையாது. டைரக்டர் சொல்றதை செய்றேன்.

ஷூட்டிங் ஸ்பாட்ல என்ன தோணுதோ, அதை செய்றேன். சில நேரம் நாம அடிக்கிற டைம்மிங் காமெடியும் ஒர்க் அவுட் ஆகுது.

அவங்களுக்குப் பிடிக்குது. எல்லா இடத்திலுமே சோலோதான்.

என் தலைமுடிக்கு நான் பெருசா மெனக்கடுறதில்ல. லோக்கல் ஷாம்பூ, புலி மார்க் சீயக்காய் தூள்தான் போடுறேன்.

எப்பவும் சினிமாவுல காமெடியனாக இருப்பேன். என்னைய வெச்சு எப்படி காமெடி செய்யலாம்னு என் டைரக்டர்களுக்கு தெரியும். நாம பொத்திகிட்டு இருந்தாலே கெத்தோட வாழலாம்.” என்று தெரிவித்துள்ளார்.

Actor Yogi Babu reveals his hair style secret and cinema experience

3 டைரக்டர்களிடம் மட்டும் கதை கேட்காமல் நடிக்கும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பல முன்னணி ஹீரோக்கள் ஏற்கத் தயங்கும் கேரக்டர்களை ஏற்று அசால்ட்டாக செய்து வருபவர் விஜய்சேதுபதி.

ஆரம்ப காலங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த இவர் தற்போது முன்னணி ஹீரோக்களிள் வரிசையில் இடம் பிடித்துவிட்டார்.

இருந்தபோதிலும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கவுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது…

கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படம் என்பதால் கதையை கேட்காமல் கூட உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன்.

மேலும் அது ரஜினிகாந்த் படம். அவரிடம் அடி வாங்கி வீழ்வது கூட பெருமையே.

கார்த்திக் சுப்பராஜைப் போல் சீனுராமசாமி, மணிகண்டன் ஆகியோரிடமும் கதையே கேட்காமல் நடிக்க ஒப்புக்கொள்வேன்.” என தெரிவித்துள்ளார்.

Vijay Sethupathi wont ask story line with 3 directors

பிரபல டிவியின் *மெகா ஐகான்ஸ்* நிகழ்ச்சியில் கமல்-வீராட்கோலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நே‌ஷனல் ஜியாகிரபி சேனலில் ‘மெகா ஐகான்ஸ்’ என்ற பெயரில் ஒரு புதிய தொடர் ஒளிப்பரப்பாகவுள்ளது.

இதில் ஒவ்வொரு துறையில் சாதித்த ஆளுமைகள் பற்றிய பதிவுகள் இடம் பெறவுள்ளது.

வருகிற செப்டம்பர் மாதம் இந்த நிகழ்ச்சி தொடங்கவுள்ளது.

இந்தத் தொடரில் பிரபலங்களின் பின்புலம், சூழல், அவர்களுக்கு நெருக்கமானவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள், புள்ளிவிவரங்கள், கள ஆய்வுகள், நிபுணர்களுடைய ஆய்வு முடிவுகள் ஆகியவற்றையும் ஒளிப்பரப்பாகவுள்ளது.

Kamal and Virat Kohli are the first Mega Icons in National Geographic

More Articles
Follows