தமிழ்சினிமாவில் முதன்முறையாக ஒருவர் மட்டுமே நடிக்கும் கார்கில்

தமிழ்சினிமாவில் முதன்முறையாக ஒருவர் மட்டுமே நடிக்கும் கார்கில்

First time in Tamil Cinema Only One actor performing in Kargil movieதமிழ் சினிமாவில் அவ்வப்போது புது முயற்சிகளாக சில வித்தியாசமான படங்கள் வருவதுண்டு. அப்படி ஒரு படம் தான் சிவானி செந்தில் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கார்கில்’.

ஜிஷ்ணு கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. தமிழ் சினிமாவில் மிக வெற்றிகரமான தயாரிப்பாளர் திரு. கலைப்புலி எஸ். தாணு பாடல்களை வெளியிட்டார்.

“கார்கில் என்றாலே கார்கில் போர் தான் நினைவுக்கு வரும்.. காதலும் அப்படி ஒரு போர் மாதிரித்தான் அதனால் தான் கார்கில் என டைட்டில் வைத்துள்ளோம்.

நாயகியுடன் ஊடல் கொண்டுள்ள நாயகனின் சென்னை – பெங்களூர் வரையிலான கார் பயணமும் அதில் நடக்கும் நிகழ்வுகளும் தான் மொத்தப்படமும்.

இதில் முக்கியமாக, தமிழ்சினிமாவில் புதுவிஷயமாக இந்தப்படத்தில் ஒரே ஒருத்தர் தான் நடித்துள்ளார் அவர்தான் நாயகன் ஜிஷ்ணு. புது முயற்சி என்பதற்காக போராடிக்காமல், முழுக்க முழுக்க பொழுதுபோக்கு படமாகத்தான் இதை உருவாக்கியுள்ளோம்” என்கிறார் படத்தின் இயக்குனர் சிவானி செந்தில்.

இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ‘அய்யனார் வீதி’ பட இயக்குனர் ஜிப்ஸி ராஜ்குமார் இந்த படக்குழுவினரை வாழ்த்தி பேசும்போது சிறிய பட்ஜெட் படங்கள் இன்று தியேட்டர்களில் என்ன பாடுபடுகிறது என்பதை தனது பட அனுபவத்தில் இருந்து மனக்குமுறலாக கொட்டினார்.

“இயக்குனர் சிவானி செந்திலின் மனைவி தான் தயாரிப்பாளராக இறங்கியுள்ளதால் பயப்படுவதாக கூறினார்.

பத்திரிகையாளர்கள் இருக்கும்வரை அந்த பயம் தேவையில்லாதது.. அவர்கள் நம் படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பார்கள்.

என்னுடைய ‘அய்யனார் வீதி’ படத்தை ரிலீஸ் செய்த சமயத்தில் தான் ‘பாகுபலி’ படம் வெளியானது.

இருந்தாலும் எனது தயாரிப்பாளர் படத்தை ரிலீஸ் செய்யும் தைரியத்தை எனக்கு அளித்தார். படம் ரிலீசாகி இரண்டாவது வாரம் போஸ்டர்கள் ஓட்ட ஆரம்பித்துவிட்ட நிலையில் தியேட்டர்காரர்கள், காட்சிகளின் எண்ணிக்கையை குறைக்க ஆரம்பித்தார்கள்.

சில பேர் இடம் இல்லை என கூறிவிட்டார்கள். இன்றைக்கு தமிழ்சினிமாவில் வாராவாரம் ஐந்து படங்கள் வரை ரிலீசாகி கொண்டு இருக்கின்றன.

இதனால் நிறைய தயாரிப்பாளர்கள் தெருவிற்கு வந்துகொண்டிருக்கின்றனர். இதுதான் இன்றைய நிலைமை.

ஆனால் இதுல எல்லாம் தாக்கு பிடிச்சு நிற்கிறவன் தான் ஜெயிக்க முடியும்.. எனக்கு கிடைச்ச அனுபவம் மூலமா இது மாதிரி புது படக்குழுவினருக்கு என்னோட ஆதரவை தர்றதுக்காகத்தான் இந்த விழாவுக்கு வந்தேன்.

இன்னைக்கு தியேட்டர்காரர்கள் தான் எல்லாத்தையும் முடிவு பண்றாங்க.. ரெண்டுநாள் ஓட்டிட்டு மூணாவது நாள் படத்தை தூக்கிடுறாங்க.. அவங்களை யாரு கேட்கிறது யாராலேயும் கேட்க முடியாது.. ஏன்னா அவங்க வலுவா இருக்கிறாங்க.” என கொட்டி தீர்த்துவிட்டார் ஜிப்ஸி ராஜ்குமார்.

இந்தப்படத்தின் அனைத்து போஸ்ட் புரடக்சன் வேலைகளும் நிறைவுபெற்ற நிலையில் திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது.

தொழிநுட்ப கலைஞர்கள் விபரம்:

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியவர் : சிவானி செந்தில்
ஒளிப்பதிவு : கணேஷ் பரமஹம்ஸா
இசை :விக்னேஷ் பாய்
பாடல்கள்: பாரி இளவழகன் மற்றும் தர்மா
எடிட்டிங் : அபிநாத்
மக்கள் தொடர்பு : செல்வரகு
தயாரிப்பு : சுபா செந்தில்.

First time in Tamil Cinema Only One actor performing in Kargil movie

kargil tamil movie press meet

லோ பட்ஜெட்டில் ஹாலிவுட் லெவல் படமெடுக்க உதவும் ஸ்ரீ ஸ்டுடியோஸ்

லோ பட்ஜெட்டில் ஹாலிவுட் லெவல் படமெடுக்க உதவும் ஸ்ரீ ஸ்டுடியோஸ்

Director Bharathiraja Inaugurates SRI STUDIOSதமிழ் திரையுலகின் மைய ஸ்தலங்களில் ஒன்றான சென்னை சாலிகிராமத்தில் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது ஸ்ரீ ஸ்டுடியோ நிறுவனம்.

இன்னும் சொல்லப்போனால் ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை அதி நவீன தொழில்நுட்பத்தின் திரைத்துறையின் தொடக்கவிழா இன்று நடைபெற்றது என்றும் கூட சொல்லலாம்..

இந்த விழா இயக்குனர் இமயம் பாரதிராஜா முன்னிலயில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குனர்கள் பாக்யராஜா, சேரன், தங்கர் பச்சான், எஸ்.பி.ஜனநாதன், திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் ஆடுகளம் கதிரேசன், தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜா, எஸ்.ஆர்.பிரபு, சுரேஷ் காமாட்சி, ஒளிப்பதிவாளர்கள் ரவிவர்மன், வேல்ராஜ், விஜய் மில்டன் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர்.

மேலும் ஹாலிவுட்டில் பயன்படுத்தப்படும் Red Epic W Helium கேமராவும் சில லென்ஸ் உபகரணங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. அதை தொடர்ந்து ஹாலிவுட்டில் படம் எடுக்க பயன்படுத்தும் அதிநவீன கேமரா மற்றும் தொழில் நுட்ப கருவிகளை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தி குறைந்த பட்ஜெட்டில் எப்படி சிறப்பாக படம் எடுக்கலாம் என்பதற்கான கலந்தாய்வு கூட்டமும் நடைபெற்றது.

2007 முதல் கடந்த பத்து வருடங்களில் தமிழ் சினிமாவில் பல படங்களில் பயன்படுத்த லேட்டஸ்ட் டெக்னாலஜியில் ஸ்ரீ ஸ்டுடியோவின் பங்களிப்பு தவறாமல் தொடர்ந்துகொண்டு இருக்கிறது.

சிறிய பட்ஜெட் படங்களாக உருவான கோலிசோடா, மூடர்கூடம் படங்களாகட்டும் தற்போது தயாராகி வரும் சூப்பர்ஸ்டார் ரஜினியின் 2.O, காலா ஆகிய படங்களாகட்டும் ஸ்ரீ ஸ்டுடியோவின் லேட்டஸ்ட் டெக்னாலஜி இடம் பெற்றுள்ளது.

ஸ்ரீ ஸ்டுடியோ நிறுவனர் ஸ்ரீதர் சிங்கப்பூரில் பிலிம் டைரக்சன் படித்தவர்.

தற்போது ஹாலிவுட்டிலும் இவரது பணி தொடர்வதோடு அங்குள்ள திரைப்பட கல்லூரியில் லேட்டஸ்ட் டெக்னாலஜி பற்றி பாடம் எடுக்கும் கௌரவ விரிவுரையாளராகவும் இருக்கிறார்.

ஹாலிவுட் தரத்திலான தொழில்நுட்ப கருவிகளை தமிழ்சினிமாவில் தொடர்ந்து அறிமுகப்படுத்துவதில் முதல் ஆளாக இருக்கிறது இவரது நிறுவனம்.

படம் தயாரித்தலின் மூன்று நிலைகளான ப்ரீ புரடக்சன், புரடக்சன், போஸ்ட் புரடக்சன் என்கிற பணிகளிலும் ஸ்ரீ ஸ்டுடியோ உதவிகரமாக இருக்கிறது.

தற்போது ஒரு திரைப்படம் எடுக்க தயாராகும் செலவில் மூன்றில் ஒரு பங்கு செலவில் ஒரு திரைப்படத்தை எடுக்க முடியும். டிஜிட்டலில் லேட்டஸ்ட் டெக்னாலஜி பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமுள்ள படைப்பாளிகளுக்கும் குறைந்த செலவில் படம் தயாரிக்க விரும்புவர்களுக்கும் ஸ்ரீ ஸ்டுடியோ ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

Director Bharathiraja Inaugurates SRI STUDIOS

sri studios

அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீமேக் உரிமையை வாங்கினார் தனுஷ்

அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீமேக் உரிமையை வாங்கினார் தனுஷ்

Dhanush bagged the tamil remake rights of Arjun Reddyசந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே உள்ளிட்டோர் நடித்த ‘அர்ஜுன் ரெட்டி’ படம் ஆகஸ்ட் 25-ம் தேதி வெளியானது.

இயக்குநர் ராஜமெளலி, சமந்தா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இப்படத்தை பாராட்டியுள்ளனர்.

எனவே இப்படத்தின் ரீமேக் உரிமைக்கு பலத்த போட்டி எழுந்துள்ளது.

இந்நிலையில் இதன் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தனுஷ் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் ரீமேக்கில் தனுஷே நடிக்க வாய்ப்பு இருக்கலாம் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.

இதில் காதலில் தோல்வியுற்ற ஒருவன் எப்படி மீண்டு வருகிறான் என்பதை இன்றைய சூழலுக்கு ஏற்ப காட்டியிருக்கிறார்களாம்.

அதாவது நவீன தேவதாஸ் படம் என தெரிவிக்கிறார்கள்.

Dhanush bagged the tamil remake rights of Arjun Reddy

நயன்தாராவின் கோலமாவு கோகிலா பட ஸ்டில் வெளியானது

நயன்தாராவின் கோலமாவு கோகிலா பட ஸ்டில் வெளியானது

Nayanthara still out from Colamaavu Cokila movieநயன்தாரா நடிக்கும் கோலமாவு கோகிலா என்ற படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது என்பதை பார்த்தோம்.

இப்படத்தை சுருக்கமாக அழைக்க கோகோ என்று பெயரிட்டுள்ளனர்.

அறிமுக இயக்குநர் நெல்சன் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தகவலை சிவகார்த்திகேயன் வெளியிட்டார் என்பதை நம் தளத்தில் பதிவு செய்திருந்தோம்.

இதன் சூட்டிங் தற்போது நடைபெற்று வரும நிலையில் இப்படத்தில் உள்ள ஸ்டில் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Nayanthara still out from Colamaavu Cokila movie

பதவிக்காக ஓடும் பரதேசி நாய்கள்… அரசியல்வாதிகள் மீது அமீர் தாக்கு

பதவிக்காக ஓடும் பரதேசி நாய்கள்… அரசியல்வாதிகள் மீது அமீர் தாக்கு

Directors Seeman and Ameer condolence to Student Anitha deathநீட் மருத்துவ தேர்வு முறையால் மாணவி அனிதா தற்கொலை செய்துக் கொண்டது தமிழகத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த நாம் தமிழர் கட்சியின் தலைவரும் இயக்குனருமான சீமான், இயக்குனர் அமீர் நேரில் சென்றனர்.

அதன்பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் இயக்குனர் அமீர்.

அவர் பேசியதாவது…

“அனிதாவின் குடும்பத்தார் கேட்கும் கேள்விக்ளுக்கு பதில் சொல்ல முடியவில்லை.

நீட் தேர்வை எதிர்த்த போது வராதவர்கள், உயிர் போன பின்புதான் வருவீர்களா? எனக் கேட்கிறார்கள்.

டெல்லிக்கு எத்தனை முறை ஓடியிருப்பார்கள் தமிழக அரசியல்வாதிகள்.

ஓட்டுக்காகவும், பதவிக்காக ஓடும் பரதேசி நாய்கள் அவர்கள்.” என ஆவேசமாக பேசினார்.

Directors Seeman and Ameer condolence to Student Anitha death

தற்கொலை செய்த அனிதாவும் என் மகள்தான்; பிக்பாஸிலும் பேசும் கமல்

தற்கொலை செய்த அனிதாவும் என் மகள்தான்; பிக்பாஸிலும் பேசும் கமல்

In Bigg Boss show Kamalhassan will talk about NEET issue Anitha deathநீட் தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் வரை சென்று போராடியவர் பள்ளி மாணவி அனிதா.

மருத்துவ துறையில் நுழைய முடியாது என்பதால் தன் வாழ்வை முடித்துக் கொண்டார்.

இது ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து கமல்ஹாசன் பேசியதாவது…

அனிதா என்ன ஊர், என்ன பெயர் என்றெல்லாம் நான் பார்க்க விரும்பவில்லை. என் பெண்ணாக இருந்தால்தான் நான் கோபப்பட வேண்டுமா? கனவோடு வந்த அனிதாவை மண்ணோடு மண்ணாக அனுப்பிவிட்டோம். கட்சி கடந்து, மாநிலம் கடந்து, இந்த விஷயத்துக்காக வெகுண்டெழ வேண்டும்.

கனவுடன் வாழ்ந்த மாணவியை கண்மூட வைத்து, நல்ல மருத்துவரை இழந்து விட்டோம். இதனால் கண்ணீரோடு கோபமும் வருகிறது.

அக்ஷரா, ஸ்ருதியை போன்று அனிதாவும் எனக்கு மகள்தான்” என்று பேசியிருந்தார்.

மேலும் அவர் தொகுத்து வழங்கும் பிக்பாஸில் பேசும் கமல், இன்றைய நிகழ்ச்சியில் நேற்று நீட் தேர்வுக்கெதிராக போராடி மறைந்த மாணவி அனிதாவின் தற்கொலை பற்றிப் பேசுகிறார்.

‘எதிர்காலத்தைப் பொய்த்துவிட்டு இறந்தகாலமாகிவிட்டது ஒரு இளம் தளிர்…’ என அவர் பேசும் நிகழ்ச்சியின் ப்ரொமோ வெளியாகி இருக்கிறது.

In Bigg Boss show Kamalhassan will talk about NEET issue Anitha death

More Articles
Follows