தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மலையாள திரையுலகின் முதல் கதாநாயகியாகவும், இந்திய சினிமாவின் முதல் தலித் நடிகையாகவும் விளங்குபவர்.
மிகச்சிறந்த நாடகக் கலைஞரான பி.கே.ரோஸி.
இவரின் முதல் திரைப்படம் விகதகுமாரன் (1930). அந்தத் திரைப்படத்தோடு அவரைத் திரையில் நடிப்பதையே தடுத்து துரத்தியடித்தது ஜாதி வெறி பிடித்த சமூகம்.
ஒடுக்கப்பட்ட புலையர் சமூகத்தைச் சேர்ந்த
பிகே. ரோசியை நாயர் ஜாதிப் பெண்ணாக ஒரு படத்தில் இயக்குனர்
JC டேனியல் நடிக்க வைத்ததைத் தாங்க முடியாத சிலர் படத்தை வெளியிட்ட காபிடல் ஹால் அரங்கில் கல் எரிந்து கலவரம் செய்தனர்.
மேலும் பிகே. ரோஸியின் வீட்டையும் எரித்ததாகச் சொல்கிறார்கள்.
முதல் நடிகர்- நடிகைகளை வரலாறு கொண்டாடியபோது, அடையாளம் தெரியாமல் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட
பிகே. ரோசியை நாம் நினைவில் என்றும் வைத்திருப்போம்.
கடந்த ஆண்டு Pay Back To The Society அமைப்பு முதல் தலித் பெண் கலைஞரான பி.கே. ரோசி அவர்களின் பெயரில் விருது வழங்கி அவருக்கான அங்கீகாரத்தை இச்சமூகத்தில் விதைத்தது.
போராடி வெற்றி பெறும் ஒவ்வொரு கலைஞனையும் அங்கீகரிப்பதும், நினைவில் நிறுத்துவதும் இந்தச் சமூகத்தில் சமத்துவத்தை வலியுறுத்தும் பணியாகும்.
அவ்வகையில் சமத்துவத்தின் நாயகி பி. கே. ரோசி அவர்களைப் போற்றுவோம். 10 பிப்ரவரி – இன்று பி.கே.ரோசி பிறந்தநாள்.
First dalit actress Rosie’s birthday.; Tragedy during the release.!?