பச்சை மண்டலமான காரைக்காலில் கைதி ஒருவருக்கு கொரோனா

பச்சை மண்டலமான காரைக்காலில் கைதி ஒருவருக்கு கொரோனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

First Corona positive case in Karaikalகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடெங்கிலும் மே 17 வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்று இல்லாத பச்சை மண்டலங்களில் சில தளர்வுகளுடன் வணிக நிறுவனங்கள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் கடந்த 48 நாட்களாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் சுரக்குடியைச் சேர்ந்த டிரைவர் நடேசன் என்ற 37 வயது இளைஞர் ஒருவரை அடிதடி வழக்கில் காரைக்கால் போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

பரிசோதனை முடிவில் அந்த கைதிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

கைதிக்கு கொரோனா உறுதியானதால் அவரை கைது செய்த காவலர்கள் 2 பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

அவருக்கு எப்படி கொரோனா தொற்று வந்தது? அவர் எங்கு சென்றார்? என்பது குறித்த விசாரணை நடந்து வருகிறது.

அவர் அண்மையில் சென்னைக்கு சென்று வந்துள்ளதாகவும் ஒரு தகவல் கசிந்து வருகிறது.

அவரின் குடும்பத்து உறவினர்களையும் பரிசோதனை செய்யவுள்ளனர்.

இந்த செய்தி காரைக்கால் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பகுதியை சார்ந்த கார்த்தி என்ற வாலிபரிடம் நாம் விசாரித்த போது…

அவர் ஊரடங்கில் எங்கும் சென்றதாக தெரியவில்லை. ஆனால் கொரோனா தொற்று எப்படி வந்தது? என்பது எங்களுக்கே தெரியவில்லை. விவரங்கள் தெரிந்தால் தெரிவிக்கிறேன்” என சொன்னார்.

First Corona Virus positive case in Karaikal

MEGA BREAKING கஜானாவை நிரப்ப நல்ல வழிகளை பாருங்கள்… – ரஜினி

MEGA BREAKING கஜானாவை நிரப்ப நல்ல வழிகளை பாருங்கள்… – ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini condemns TN Govt for opening Tasmac wine shopsகொரோனா ஊரடங்கு மே 17 வரை அமலில் இருக்கும்போதே மே 7 முதல் சில நிபந்தனைகளுடன் டாஸ்மாக் மதுக்கடைகள் திறந்தது தமிழக அரசு.

இதற்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தாலும் மதுபிரியர்கள் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தான் டாஸ்மாக் மது விற்பனையின் போது, சமூக இடைவெளியும் பின்பற்றப்படவில்லை எனவும் கொரோனா தொற்று அதிகளவில் பரவும் எனவும் கூறப்பட்டு அவசர வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பொது முடக்கம் முடியும் வரை டாஸ்மாக் கடைகளைத் திறக்கக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.

அதில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது என அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் விரைவில் அரசியல் கட்சி தொடங்கவுள்ள ரஜினிகாந்த் தன் ட்விட்டரில் தமிழக அரசின் மேல் முறையீட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரின் ட்விட்டரில் பதிவில்…

இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்

Rajini condemns TN Govt for opening Tasmac wine shops

தமிழச்சி தாலியை சூதாட அனுமதி கேட்கும் அரசு…; கமல் கண்டனம்

தமிழச்சி தாலியை சூதாட அனுமதி கேட்கும் அரசு…; கமல் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

 TN Govt moves Supreme Court for opening Tasmac Kamal slams Govtகொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும்போதே சில தளர்வுகளுடன் மே 7ஆம் தேதி டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு திறந்தது.

சமுமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை.. கொரோன தொற்று அதிகரிக்கும் உள்ளிட்ட ஆதாரங்களுடன் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படுவதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

இந்த அவசர வழக்கை விசாரித்த நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி மறுத்தது. ஊரடங்கு முடியும் வரை திறக்க கூடாது என உத்தரவிட்டது.

ஆனால் மதுபானங்களை ஆன்லைனில் விற்கலாம் என உத்தரவிட்டது.

இதனையடுத்து ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.

அதில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழக அரசின் மேல்முறையீட்டை கண்டித்து நடிகரும் அரசியல் கட்சித் தலைவருமான கமல் ட்விட்டரில் கூறியுள்ளதாவது…

குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்ட தமிழ் பெண்களின் தாலிகளோடு, குடிக்காத தமிழர்களின் உயிரையும் பணயம் வைத்து, சூதாட அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றம் செல்லுமாம் தமிழக அரசு. எங்கும் வருவோம் உமைத் தடுக்க. மக்கள் நீதியே வெல்லும்.

என பதிவிட்டுள்ளார்.

TN Govt moves Supreme Court for opening Tasmac Kamal slams Govt

டாஸ்மாக்கை மூடினால் நஷ்டம்; சுப்ரீம் கோர்ட்டில் அரசு மேல்முறையீடு

டாஸ்மாக்கை மூடினால் நஷ்டம்; சுப்ரீம் கோர்ட்டில் அரசு மேல்முறையீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tasmac shops will not be opened in Chennaiகொரோனா ஊரடங்கு மே 17 வரை அமலில் இருக்கும்போதே மே 7 முதல் சில நிபந்தனைகளுடன் டாஸ்மாக் மதுக்கடைகள் திறந்தது தமிழக அரசு.

இதற்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தாலும் மதுபிரியர்கள் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தான் டாஸ்மாக் மது விற்பனையின் போது, சமூக இடைவெளியும் பின்பற்றப்படவில்லை எனவும் கொரோனா தொற்று அதிகளவில் பரவும் எனவும் கூறப்பட்டு அவசர வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பொது முடக்கம் முடியும் வரை டாஸ்மாக் கடைகளைத் திறக்கக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.
அதில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

மதுக்கடைகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க அத்தனை நடவடிக்கைகளையும் காவல்துறை கொண்டு எடுத்தோம்.

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிட வேண்டியதில்லை என்றும் தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.

TN Govt Moves SC Challenging Madras HCs Order On Closure Of TASMAC

இந்துக்கள் மனதை புண்படுத்திய விஜய்சேதுபதி மீது நடவடிக்கை எடுக்க போலீசில் மனு

இந்துக்கள் மனதை புண்படுத்திய விஜய்சேதுபதி மீது நடவடிக்கை எடுக்க போலீசில் மனு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathi hurting Religious Sentiments Complaint filed சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு டிவி நிகழ்ச்சியில் பேசியிருந்தார் நடிகர் விஜய்சேதுபதி.

அதில்.. “கோயில்களில் சாமி சிலைகளை குளிக்க வைக்கும்போது (அபிஷேகம்) பார்க்க அனுமதிப்பவர்கள், உடை மாற்றும்போது மட்டும் அனுமதிப்பதில்லையே ஏன் ?” என்பதை ஒரு தாத்தா, பேத்தி கதை மூலம் கேள்வியாக கேட்டிருந்தார்.

இது வீடியோ தற்போது தான் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் இதை பரப்பி பல விதமான கமெண்டுக்களை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதமாக நடிகர் விஜய் சேதுபதி பேசி வருகிறார்.

அவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்த மகா சபை அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பான மனுவை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் அளித்துள்ளது.

அந்த மனுவில், “விஜய் சேதுபதி இந்து மத ஆகம விதிகளை பற்றி புரிந்து கொள்ளாமல் கேலி, விமர்சனம் செய்கிறார். தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள இந்து மத சம்பிரதாயங்களை பயன்படுத்தி வருகிறார்.

அவர் மீது வழக்கு பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vijay Sethupathi hurting Religious Sentiments Complaint filed

தள்ளிப் போகும் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தேர்தல்

தள்ளிப் போகும் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தேர்தல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamil film producer Union election to be held on 21 June 2020தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தலைவராக விஷால் இருந்தார். இவரது தலைமையிலான நிர்வாகத்தின் கீழ் சங்கம் இருந்தது.

இப்போது தனி அதிகாரியின் நிர்வாகத்தில் செயல்பட்டு வருவது நாம் அறிந்த ஒன்றுதான்.

வருகிற ஜுன் மாதத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் தேர்தல் அதிகாரியாக முன்னாள் நீதிபதி எம்.ஜெய்சந்திரனை நியமித்தது.

இதைத் தொடர்ந்து தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் வருகிற ஜூன் 21ந் தேதி நடைபெறும் என்று அதற்கான அட்டவணை கடந்த ஏப்ரல் மாதம் 16ந் தேதி வெளியிடப்பட்டது.

இதில், டி.சிவா தலைமையில் ஒரு அணியினரும், முரளி ராமசாமி தலைமையில் ஒரு அணியினரும், தாணு தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிடுவதாக அறிவித்தனர்.

இந்த நிலையில் தேர்தல் தள்ளி வைக்கப்படுவதாக தேர்தல் அதிகாரி எம்.ஜெய்சந்திரனும், தனி அதிகாரி கே.கே.மஞ்சுளாவும் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழ்நாட்டில் கொரோனோ வைரஸ் தாக்குதல் தீவிரம் அடைந்திருப்பதாலும், தேர்தலுக்கு கால அவகாசம் கேட்ட வழக்கு நிலுவையில் இருப்பதாலும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதியில் தேர்தல் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil film producers union election postponed

More Articles
Follows