ஒருவழியாக விழித்திரு பட ரிலீசுக்கு விடை கிடைத்தது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில படங்கள் தான், ரிலீஸ் தாமதம் ஆனாலும் அதன் எதிர்பார்ப்பு என்றுமே குறையாமல் இருக்கும்.

கிருஷ்ணா, வித்தார்த், வெங்கட் பிரபு மற்றும் தன்ஷிகா நடிப்பில் தயாரான ‘விழித்திரு’ தனது கதையம்சத்தினால் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களாக உள்ளது.

இப்படம் வரும் அக்டோபர் 6ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாமதம் குறித்து இயக்குனர் மீரா கதிரவன் கூறியதாவது…

” இந்த தாமதம் மிகுந்த மனவலியை தந்தது. ஆனால் இந்த தொழிலில் இவ்வாறான எதிர்பாராத காரியங்கள் நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.

எங்கள் படத்தை ரிலீஸ் செய்யவுள்ள ‘சவுந்தர்யன் பிக்சர்ஸ்’ நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

எங்களின் கதை இன்றும் புதுமையாக இருக்கும் என்பதில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. தரமான கதையை சுவாரஸ்யமாக.

தந்திருப்பதால் இப்படத்தை சினிமா ரசிகர்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என நம்புகிறேன்” என்றார் இப்படத்தின் இயக்குனர் மீரா கதிரவன்.

Finally Vizhithiru movie got release date on October 2017

 

மீண்டும் ஒரு பண்டிகையில் இணையும் விக்ரம்-சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு சில ஹீரோக்கள் மட்டுமே ஈகோ பார்க்காமல் மற்ற ஹீரோக்களுடன் இணைந்து நடிப்பார்கள்.

அதில் முக்கியமானவர்கள் சூர்யா மற்றும் விக்ரம் என்று சொன்னால் அது மிகையாகாது.

பாலா இயக்கிய பிதாமகன் படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.

அப்படம் கடந்த 2003 ஆம் ஆண்டு தீபாவளி திருநாளில் வெளியானது.

அதன்பின்னர் தற்போது மற்றொரு பண்டிகையில் இவர்கள் இருவரும் இணைந்து வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சூர்யா நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படம் 2018 பொங்கல் தினத்தில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

இதேநாளில் விக்ரம் நடித்துள்ள ஸ்கெட்ச் படமும் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இம்முறை விக்ரம் மற்றும் சூர்யா இருவரும் ஒரே படத்தில் இணையவிட்டாலும் பண்டிகை தினத்தில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Thaana Serndha Kootam and Sketch movies plans to release on 2018 Pongal

3000 பெண்களுக்கு பட்டுப் புடவை பரிசளித்த ‘மகளிர் மட்டும்’ படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா, ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா பொன்வண்னன், மாதவன், நாசர், பாவல் நவகீதன் முதலானோர் முக்கிய பாத்திரங்களில் நடித்து, கடந்த 15-ஆம் தேதி வெளியான படம் ‘மகளிர் மட்டும்’.

சூர்யாவின் ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரித்த இப்படம் அனைத்து தரப்பினரிடமும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப் படமாக அமைந்துள்ளது.

இந்த படம் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருப்பதால் ‘ஒவ்வொரு காட்சிக்கும் ஒவ்வொரு பட்டுப் புடவை’ என்ற பரிசு திட்டத்தை அறிவித்திருந்தனர்.

அதன்படி ‘மகளிர் மட்டும்’ படத்தை பார்க்க தியேட்டருக்கு வந்த பெண்களுக்கு பட்டுப் புடவை பரிசாக வழங்கப்பட்டது.

படம் வெளியாகி முதல் 3 நாட்களுக்கு ஒவ்வொரு திரையரங்கிலும், ஒவ்வொரு காட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நபருக்கு பட்டுப் புடவை பரிசாக வழங்கப்பட்டது.

அதன் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதுமாக இதுவரை 3000 காட்சிகளில் 3000 பெண்களுக்கு 3000 பட்டுப் புடவைகள் பரிசாக வழங்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Magalir Mattum producers gifted sarees to 3000 ladies those watched movie

மிஷ்கின் பாணியில் விஷால் பெர்மான்ஸ்; துப்பறிவாளனை பாராட்டும் ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி துப்பறிவாளன் படம் உலகமெங்கும் ரிலீஸ் ஆனது.

மிஷ்கின் இயக்கிய இப்படத்தில் விஷால், பிரசன்னா, வினய், ஆன்ட்ரியா, அனு இமானுவேல், சிம்ரன், கே.பாக்யராஜ் முதலானோர் நடித்திருந்தனர்.

நல்ல விமர்சனங்களை பத்திரிகையாளர்களிடமும் ரசிகர்களிடமும் பெற்று இப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

மேலும் இதன் இரண்டாம் பாகத்தை விரைவில் தயாரித்து நடிப்பேன் என விஷால் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தை பார்த்த இயக்குனர் ஷங்கர் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது… ‘‘மிஷ்கின் பாணியில் ரசிக்கும்படியான த்ரில்லர் படம் துப்பறிவாளன்.

விஷாலின் கேரக்டர் வடிவமைப்பும், பெர்ஃபார்மென்ஸும் அருமையாக இருந்தது.” என பதிவிட்டுள்ளார்.

Shankar praises Mysskin Vishal and Thupparivaalan team

Shankar Shanmugham‏Verified account @shankarshanmugh

Thupparivalan-an engaging thriller with Mysskin’s unique style. Vishal’s characterization n performance is good. Cheers to the whole team

ரயில் பயணத்தில் ரவுடியிடம் கேட்ட கதையே ‘இமை’ படமானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முற்றிலும் புதுமுகங்களின் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் ‘இமை ‘.

இப்படத்தை விஜய் கே. மோகன் இயக்கியுள்ளார். கே.பி பேமிலி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஹார்திக் வி.டோரி தயாரித்துள்ளார்.

‘இமை’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேப் அரங்கில் நடைபெற்றது.

பத்திரிகையாளர்கள், முன்னிலையில் பாடல்கள் வெளியிடப் பட்டன.

நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் விஜய் கே. மோகன். நாயகன் சரிஷ், நாயகி அக்ஷயப்பிரியா, ஒளிப்பதிவாளர்வி,கே,பிரதீப்,இசையமைப்பாளர்கள் மிக்கு காவில்,ஆதிப், பாடலாசிரியர் சீர்காழி சிற்பி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் இயக்குநர் விஜய் கே. மோகன் பேசும் போது.

“நான் ரயிலில் பயணம் செய்த போது ஒருவர் என் எதிர் இருக்கையில் அமைதியாக அமர்ந்திருந்தார். அவரிடம் மெல்லப் பேச்சு கொடுத்தேன். ஊர் கோயமுத்தூர் என்றார்.

என்ன வேலை பார்க்கிறீர்கள் என்ற போது ரவுடியாக இருக்கிறேன் என்றார். அவர் ஒரு ரவுடி என்றதும் எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அவரிடம் சற்றுநேரம் பேசினேன்.

நல்ல கதை இருக்கும் போல் தோன்றியது. அவரது போன் நம்பரைக் கேட்டேன். கொடுத்தார். ஊர் வந்ததும் இறங்கிக் கொண்டார். அவரைத் தொடர்பு கொண்டு மீண்டும் பேசிய போது நேரில் சந்தித்து பேசினேன். அவருக்கு ஒரு காதல் இருந்தது தெரிந்தது. அவரிடம் விரிவாகப் பேசினேன்.

அவரது கதையைப் படமாக எடுக்க விரும்புகிறேன் என்று அனுமதி கேட்டேன். அனுமதி கொடுத்தார். அவரது கதையைத் திரைக்கதையாக மாற்றி மறுபடியும் கூறினேன். க்ளைமாக்ஸ் மாறியுள்ளதே என்றார்.
சினிமாவுக்காக மாற்றங்கள் செய்திருப்பதையும் சொன்னேன்.

அப்படி உருவான கதைதான் இமை. இப்படத்தில் நாயகனாக நடிக்க சரிஷ் கிடைத்தார் அவர் 15 ஆண்டுகளாக நடிக்கப் போராடி வருபவர்.

அவர் மூலம் தயாரிப்பாளர் கிடைத்தார். அவர் குஜராத்திக் காரர். எங்களை நம்பி தயாரிக்க முன் வந்தார். நாயகி அக்ஷயா, சில கன்னடப் படங்களில் நடித்தவர்.

இப்படி படக்குழு தாயராகி படம் முடித்து இன்று ஆடியோ வெளியீடு நடந்துள்ளது. வரும் அக்டோபர் மாதம் படம் வெளியாகவுள்ளது.

எவ்வளவோ படங்கள் வரலாம் உண்மைக் கதையின் அடிப்படையில் எடுக்கப் பட்டு இருப்பதால் எங்கள் படத்துக்கு கூடுதல் பலமும் நம்பிக்கையும் உள்ளன.” என்றார்

நாயகன் சரிஷ் பேசும் போது,

“எனக்கு நடிக்க ஆசை, கனவு, லட்சியம் எல்லாமும் இருந்தன. சரியான வாய்ப்பு தேடியபோது இயக்குநர் விஜய் கே. மோகன் சொன்ன கதை பிடித்து இருந்தது. ஒரு கனவுபோல படம் முடிந்து விட்டது. இதில் நடிப்பதற்கு எனக்கு நல்ல வாய்ப்புகள் இருந்தன. அனைவருக்கும் பிடிக்கும் படமாக ‘இமை’ இருக்கும்.” என்றார்.

நாயகி அக்ஷயப்பிரியா பேசும்போது,

” தமிழில் இது எனக்கு முதல்படம்.நல்ல கதையம்சம் உள்ள படம் இது. இதில் எனக்கு முரட்டு சுபாவமும்,ரவுடித்தனமும் கொண்ட ரவுடியை துரத்தித்துரத்திக் காதலிக்கும் பெண் பாத்திரம்.

தமிழில்முதல் படவாய்ப்பு தான் இது என்றாலும், எனக்கு ஏதோ பிக்னிக் போய் வந்தது போல படப்பிடிப்பு மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது..

படப்பிடிப்பில் எல்லாரும் என்னை நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள். படக்குழுவினர் என் சௌகரியம் முக்கியம் என்பதை உணர்ந்து நன்றாகப்பார்த்துக் கொண்டார்கள். அனைவருக்கும் நன்றி ” என்றார்.

பாடலாசிரியர் சீர்காழி சிற்பி பேசும்போது,

“நான் இதுவரை ‘மகான் கணக்கு’,’வனபத்ரகாளி’,’ஓநாய்கள் ஜாக்கிரதை’,’செம்பட்டை’, ‘கெத்து’ போன்ற 25 படங்களில் பாடல்கள் எழுதியுள்ளேன்.

‘கெத்து’ படத்தில் நான்எ ழுதிய ‘தில்லுமுல்லு பண்ணலை’ பாடல் சூப்பர் ஹிட். ‘இமை ‘படத்தில் நான் மூன்று பாடல்கள் எழுதியிருக்கிறேன்.

‘வால் முளச்ச பொண்ணு பிளேடு வச்ச கண்ணு ‘, ‘காதல் வந்தால்’, ‘ விழிகள் மூடும்போது ‘ என்று ஆரம்பிக்கும் இப்பாடல்கள் எல்லாமே நன்றாக வந்துள்ளன.

படமும் எல்லாரையும் கவரும் ஜனரஞ்சகப் படமாக இருக்கும்” என்றார்.

விழாவில் ஒளிப்பதிவாளர் வி,கே,பிரதீப், இசையமைப்பாளர்கள் மிக்கு காவில், ஆதிப், நடிகர் வெற்றிவேல் ஆகியோரும் பேசினர்.

Imai movie based on True story of Local don

அஜித்துக்கு 100; விஜய்க்கு 101 கொடுத்த நிறுவனம் விக்ரமுக்கு 102 கொடுக்குமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எம்ஜிஆர், ரஜினி, கமல் உள்ளிட்ட டாப் ஹீரோக்களின் படங்களை தயாரித்த நிறுவனம் விஜயா புரொடக்ஷன்ஸ்.

சில காலமாக படத்தயாரிப்பை நிறுத்தி வைத்திருந்த இந்நிறுவனம் மீண்டும் தன் தயாரிப்பு பணியை தொடங்கியது.

அதன்படி அஜித் நடித்த வீரம் படத்தை தன் 100வது படைப்பாக தயாரித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, விஜய் நடித்த ‘பைரவா’ படத்தை தன் 101வது படைப்பாக தயாரித்தது.

இந்நிலையில் விக்ரம் நடிக்கும் படத்தை இதே நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக வந்த செய்திகளை பார்த்தோம்.

விஜயா புரொடக்ஷன்ஸின் 102வது படைப்பாக உருவாகவுள்ள இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்குவார் என சொல்லப்படுகிறது.

விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Vikram KV Anand teams up for Vijaya Productions 102 project

More Articles
Follows