மக்கள் கருத்தை எதிரொலித்த Filmi Street.; வசூல் வேட்டையாடும் ‘காஞ்சனா3′

Filmi Street review effect Kanchana3 box office collection updatesராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா 3 படம் நேற்று முன் தினம் ஏப்ரல் 19ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது.

இதில் ஓவியா, வேதிகா, நிக்கி உள்ளிட்டோர் நடிக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.

இப்படத்தை பார்த்த விமர்சகர்கள் பலரும் வழக்கமான கதை தான், லாஜிக் இல்லை, அரைத்த மாவு என்றனர். குறைந்த மதிப்பெண்களையே வழங்கியிருந்தனர்.

இவை உண்மையாக இருந்தாலும்  நம் விமர்சனத்தில் இந்த படம் நிச்சயம் மக்களை கவரும் என்று தெரிவித்து இருந்தோம்.

பெரும்பாலான மக்களை ஒரு படம் கவர்ந்தால் அவை நிச்சயம் வெற்றிப்படமே. எனவே மக்களை மனதில் கொண்டு 3.5/5 என்ற ரேட்டிங்கையும் கொடுத்து இருந்தோம்.

தற்போது மக்கள் கருத்தை நாங்கள் எதிரொலித்தது போல வெளியான அனைத்து தியேட்டர்களில் வசூல் வேட்டை செய்து வருகிறது.

குழந்தைகள் அனைவரும் படத்தை பார்த்து என்ஜாய் செய்து வருகின்றனர். குழந்தைகளுடன் பெண்களும் இப்படத்தை ரசித்து வருகின்றனர்.

ஆந்திரா, தெலுங்கானாவில் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு அங்கும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நேரடி தெலுங்குப் படங்கள் அளவிற்கு வசூல் செய்து வருகிறது.

இரண்டு நாட்களில் மட்டும் உலகளவில் ரூ. 53 கோடியை வசூலித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Filmi Street review effect Kanchana3 box office collection updates

 

Overall Rating : Not available

Latest Post