தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
தணிக்கையில் ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ள இந்தப் படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 14-ம் தேதி திரைங்குகளில் ரிலீசாகிறது.
ஜனவரி 2ஆம் தேதி நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிம்பு பேசியது பரபரப்பானது.
எவருடைய அட்வைஸ் கேட்காதீர்கள்… இனிமே பேச்சு இல்ல. செயல்தான்… என பேசினார்.
இதன் பின்னர் இப்பட வெளியீட்டை முன்னிட்டு நடிகர் சிம்பு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.
என் ரசிகர்கள் ‘மாஸ்டர்’ படம் பாருங்கள், விஜய் அண்ணா ரசிகர்கள் ‘ஈஸ்வரன்’ பாருங்கள்.
இந்த நிலையில் இன்று ஜனவரி 6 மாலை நேரத்தில் சிம்பு வீட்டு முன்பு ரசிகர்கள் குவிந்தனர்.
சிம்பு ரசிகர் மன்றத்தின் அகில இந்திய தலைவர் நாகு சதீஷை மாற்ற கோரி சிம்பு வீட்டின் முன்பு அவரது ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
#Simbu
Fans protest near Simbu house
