ரசிகர்கள் மட்டும் இல்லாமல் விமர்சகர்களையும் கவர்ந்த ஆதித்ய வர்மா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி இளைஞர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட படம் ஆதித்யவர்மா. நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் துருவ் விக்ரமின் நடிப்பும் சிறப்பான பாராட்டுக்களைப் பெற்றது. இப்படம் வணிகரீதியான வெற்றியும் பெற்று மிகச்சிறந்த ஓபனிங்கைக் கொடுத்ததால்.. ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் படக்குழுவினர் சார்பாக நன்றி சொல்லும் விழா இன்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.

விழாவில் ஆதித்யவர்மா படத்தில் துருவின் நண்பராக நடித்த தனுஷ் பேசியதாவது,

“என்னை விக்ரம் சார் தான் இந்தக் கேரக்டரில் நடிக்கச் சொன்னார். துருவிடம் இப்படியொரு நடிப்பை எதிர்பார்க்கவே இல்லை. ட்ரக் அடிக்கும் காட்சிகளில் எல்லாம் அவர் அசத்தலாக நடித்திருந்தார். படத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி” என்றார்

இசை அமைப்பாளர் ரதன் பேசியதாவது,

“என் அம்மாவிற்கு நன்றி. என் எல்லா மேடைகளுக்கும் அவர் தான் காரணம். ஏ.ஆர் ரகுமான் சாருக்கும் நன்றி. இந்தப்படத்திற்காக நாங்கள் வாங்குற ஒவ்வொரு க்ளாப்ஸும் விக்ரம் சாருக்குத் தான் சேரும். இந்தப்படத்திற்காக நாங்கள் உழைத்ததை விட விக்ரம் சார் தான் அதிகம் உழைத்தார். இயக்குநர் கிரிசாயா நல்ல என்கிரேஜ் பண்ற நபர். இன்று யாரைக்கேட்டாலும் துருவ் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார் என்று சொல்கிறார்கள். அது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. சவுரியா சாரும் விக்ரம் சாரும் இல்லாவிட்டால் இந்தப்புராஜெக்ட் வந்திருக்காது” என்றார்

நடிகர் அன்புதாசன் பேசியதாவது,

“இந்தப்படம் என் கனவு மாதிரி. இந்தப்படம் எனக்கு ஸ்ட்ராங்கான பொஸிசன். விக்ரம் சார் கிரிசாயா சார் துருவ் அனைவருக்கும் நன்றி. நான் ஏற்றுள்ள கதாபாத்திரத்திற்கு ஒரு சோல் இருக்கு. அதை கெடுத்துவிடக்கூடாது என்று நினைத்தேன். அதைச் சரியாக செய்திருக்கிறதாக நம்புகிறேன். படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதைப் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது” என்றார்

இயக்குநர் கிரிசாயா பேசியதாவது,

“தமிழ் ரசிகர்களுக்கு பெரிய நன்றி. படத்திற்கு ஆடியன்ஸுடம் செம்மயான ரெஸ்பான்ஸ் இருக்கு. விக்ரம் சார் இந்தப்படத்திற்காக முழுமையாக உழைத்துள்ளார். அவர் இல்லை என்றால் இப்படம் இல்லை. துருவ் மிகச்சிறந்த நடிகர். நவம்பர் 22-ஆம் தேதி ஒரு புது ஸ்டார் பிறந்திருக்கிறார். அதுதான் துருவ்” என்றார்

நடிகர் துருவ் விக்ரம் பேசியதாவது,

“இப்பலாம் என்கிட்ட யாரும் பிரஸ்மீட் இருக்குன்னு சொல்றதே இல்லை. திடீர்னு காலையில எழுப்பி பிரஸ்மீட்னு சொல்றாங்க. படத்திற்கான ரெஸ்பான்ஸைப் பத்தி கேள்விப்படும் போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இதற்காகத் தான் இரண்டு வருடம் காத்திருந்தோம் என்பதை நினைத்தால் ரொம்ப சந்தோஷமா இருக்கிறது. என் கலை மாமா கதிர்மாமா அவர்களுக்கு பெரிய நன்றி. என்னைச் சின்னப்பிள்ளையில் இருந்தே அவர்கள் பார்த்திருக்கிறார்கள். இசை அமைப்பாளர் உழைப்பு மிகப்பெரியது. கிரியாசா சார் வெரி ஹார்ட் ஒர்க்கர். தனுஷ் முன்னாடி எப்படி நடிக்கிறது என்ற பயம் எனக்கு இருந்தது. ஏன் என்றால் அவன் பாலிலிவுட்ல கேமரா வொர்க் பண்ணவன். சவுரியா நல்ல உழைப்பாளி. என் அப்பா என் ஜிம் ட்ரைனரிடம் கூட படத்தைக் காட்டுவார். ஆனால் என்னிடம் காட்ட மாட்டார். எல்லாவற்றையும் எனக்கு சர்ப்ரைஸாக செய்வார். அன்புதாசன் படத்தோட ஸ்ட்ராங் கேரக்டர். அவன் ரொம்ப நல்லா நடிச்சிருக்கான். அப்பாவும் இந்தப்படத்தில் டயலாக் எழுதி இருக்கிறார். உதவி இயக்குநர்கள் கொடுக்குற எபெக்ட் தான் படமே. அவர்கள் அனைவருக்கும் நன்றி. மேலும் படத்தில் உழைத்த அத்தனை டெக்னிஷியன்களுக்கும் நன்றி. நான் நல்லா நடித்த காட்சிகளில் எல்லாம் என் அப்பா இருப்பார். நான் சுமாராக நடித்த காட்சிகளில் தான் நான் இருப்பேன். நான் பிறந்ததில் இருந்தே எனக்கு சினிமான்னா பிடிக்கும். அதைப்போல் எனக்கு அப்பான்னா ரொம்ப பிடிக்கும். இந்த இடத்தில் நான் நிக்கிறது, நான் நடிக்கிறது எல்லாமே என் அப்பா தான். இந்த வெற்றிக்கான க்ரிடிட் எல்லாமே என் அப்பாவிற்குத் தான் சேரும். இந்த வயதில் எனக்கு கிடைத்த ஆபர் என் அப்பாவிற்கு கிடைத்திருந்தால் அவர் வேறலெவல்ல இருந்திருப்பார். தயாரிப்பாளர் முகேஷ் சார் இப்படியொரு வாய்ப்பைத் தந்துள்ளார். அவருக்கு மிக்க நன்றி” என்றார்

விநியோகஸ்தர் சக்திவேலன் பேசியதாவது,

“ஆதித்யவர்மா படத்திற்கான காத்திருப்பு நேரம் ரொம்ப அதிகம். அர்ஜுன் ரெட்டி படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அர்ஜுன் ரெட்டி ஸ்கிரிப்ட்டுக்காகத் தான் இந்த படத்திற்குள் வந்தேன். ஆனால் இப்போது தான் தெரிகிறது. ஒரு நல்ல ஹீரோ இந்தப்படத்திற்குள் இருக்கிறார். 20+ல பெரிய ஹீரோ நம்மிடம் இல்லை. இப்போது துருவ் கிடைத்து விட்டார். அது ரொம்ப சந்தோஷமா இருக்கு. பசங்க எல்லாம் படம் பார்த்துட்டு நல்லநல்ல கமெண்ட்ஸ் கொடுக்கிறாங்க. முகேஷ் சார் இப்ப்டத்தை என்சாய் பண்ணி எடுத்திருக்கிறார். ஒரு விநியோகஸ்தரா நானும் என்சாய் பண்ணி விநியோகம் செய்தபடம் இது” என்றார்

நடிகர் விக்ரம் பேசியதாவது,

“இது அருமையான தருணம். ஒரு இதழில் விமர்சனம் எழுதி இருந்தார்கள். “துருவ் சியான் விக்ரமின் மகன் நேற்று. துருவின் அப்பா சியான் விக்ரம் இன்று சபாஷ்” என்று எழுதி இருந்தார்கள். மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஒரு தந்தைக்கு இதைவிட பெருமை இருக்க முடியாது. ஊடகங்கள் மொத்தமும் துருவை கொண்டாடியதற்கு ரொம்ப நன்றி. நான் பேச வேண்டியதை எல்லாம் துருவ் பேசிவிட்டார். இந்தப்படத்தில் ஐந்து முக்கியமான விசயங்கள் இருக்கு. இப்படத்தின் மூலக்கதாசிரியர் சந்திப்பிற்கு முதல் நன்றி. துருவின் டப்ஸ்மாஷ் பார்த்துவிட்டு இவனால் நடிக்க முடியும் என்று நம்பி என் வீட்டிற்கு வந்த தயாரிப்பாளர் முகேஷ் சாருக்கு நன்றி. இந்தப்படத்தை துருவால் நல்லா பண்ண முடியும்னு கான்பிடன்ட் இருந்தது. ரவி.கே சந்திரன் அவர்களுக்கும் நன்றி. அவர் ஒளிப்பதிவாளராக வந்ததால் படத்திற்கு பெரியபலம் கிடைத்தது. அன்புதாசன் இந்தப்படத்தோட இன்னொரு பலம். அவனை நான் அதிகமாக டார்ச்சர் பண்ணேன். அது நல்ல கேரக்டர். அவனும் சிறப்பாக நடித்திருந்தான். துருவை அடிக்கும் காட்சியில் திணறினான். பின் சரியாக செய்துவிட்டான். அன்புதாசன் பேசுற டயலாக்ஸ் எல்லாம் வினோத்மாரி எழுதியது. அவருக்கும் நன்றி. ராஜசேகர் நேர்த்தியான வசனங்கள் எழுதினார். நான் கொஞ்சம் சப்போர்ட் பண்ணேன். மேலும் என் ரசிகர்களுக்கு பெரிய நன்றி. என் படம் அளவிற்கான எல்லா ரெஸ்பான்ஸையும் என் மகனுக்கும் கொடுத்திருந்தார்கள். அது ரொம்ப பெரிய விசயம். இந்தப்படம் கிரியாசா இயக்கா விட்டால் இப்படி வந்திருக்காது. நான் கேட்ட எல்லா விசயங்களையும் செய்து தந்தார் தயாரிப்பாளர் முகேஷ் சார். இசை அமைப்பாளர் ரதனிடம் நீ பெரிய இசை அமைப்பாளராக வருவே என்று நான் சொன்னேன். அது நடக்கும். இந்தப்படத்தோட சோல் எல்லா உதவி இயக்குநர்களும். ஒட்டுமொத்தமாக எல்லா பத்திரிகை காட்சி ஊடகங்கள் அனைவருக்கும் நன்றி” என்றார்

சாஹோ சாகடித்தாலும் மீண்டும் அதே டீமுடன் இணையும் பிரபாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாகுபலி படங்களுக்கு பிறகு பிரபாஸ் படங்களுக்கு இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு உருவாகிவிட்டது.

அதன் பின்னர் அவர் சுஜீத் இயக்கத்தில் நடித்த படம் தான் சாஹோ.

தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் தயாரான இப்படத்தை ரூ.320 கோடியில் யுவி கிரியேசன்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.

தெலுங்கில் ஓரளவு லாபத்தை கொடுத்தாலும் மற்ற மொழிகளில் படு தோல்வியை தழுவியது.

தற்போது ராதா கிருஷ்ணகுமார் இயக்கும் ஜான் என்ற படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். இதில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார்.

இதனையடுத்து மீண்டும் சாஹோ படக்குழுவுடன் இணையவிருக்கிறாராம்.

அதே இயக்குனர் சுஜீத் இயக்க, சாஹோவை தயாரித்த யுவி கிரியேசனே நிறுவனமே இந்த படத்தை தயாரிக்கவுள்ளது.

கல்யாணமும் கத்திரிகாயும் இல்ல..; அப்புறம் சொல்றேன்.. யோகிபாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் படம் முதல் சின்ன நட்சத்திரங்கள் படம் வரை யோகிபாபு இல்லாத படங்களே இல்லை எனலாம்.

அவ்வளவு பிஸியாக இருக்கிறார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இந்த நிலையில் இவரின் சமூக வலைத்தளப் பக்கத்தில் திறமைக்கு தான் எல்லாமே. இல்லாட்டி எனக்கு இப்படி அழகான மனைவி கிடைச்சு இருக்குமா. அதனால திறமையை மனைவி வழங்குகிற உங்களை எல்லாம் தானே தேடிவரும். இது என்னுடைய அட்வைஸ். கேட்டா கேளுங்க, நல்லா இல்லாட்டி விட்ருங்க, என பதிவிட்டிருந்தார்.

இதனை பார்த்த ரசிகர்கள் யோகிபாபுவின் வருங்காலை மனைவி இவர்தான் என நினைத்து அதிகளவில் பகிர்ந்தனர்.

தற்போது அது வெறும் வதந்தி என தெரியவந்துள்ளது.

எனது கல்யாணம் முடிவானதும் நானே அனைவருக்கும் முறையாக அறிவிப்பேன். என யோகிபாபு பதிவிட்டுள்ளார்.

விஜய்க்கு சிலை.; கன்னியாகுமரியில் களைகட்டும் அருங்காட்சியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள கன்னியாகுமரியில் மாயாபுரி என்ற மெழுகுச்சிலை அருங்காட்சியகம் உள்ளது.

இதில் இந்தியாவில் மிக பிரபலமானவர்களுக்கு மெழுகுச்சிலை நிறுவப்பட்டு வருகிறது.

அதன்படி அன்னை தெரசா, மன்மோகன்சிங், அப்துல் கலாம், அமிதாப்பச்சன், ஷாரூக்கான், மோகன்லால் உள்ளிட்டவர்களுக்னு மெழுகுச்சிலைகள் உள்ளது.

இந்த நிலையில், நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் விஜய்யின் மெழுகுச்சிலையும் வைக்கப்பட்டுள்ளது.

தளபதி ரசிகர்களும், பொதுமக்களும் அந்த சிலையுடன் செல்பி எடுத்து வருகின்றனர்.

ஹீரோ ப்ராப்ளம் இப்போ ஜீரோ…; கே.ஜே.ஆர். ரொம்ப ஹாப்பியாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மித்ரன் இயக்கியுள்ள ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயன், அர்ஜுன், கல்யாணி பிரியதர்ஷன், இவானா, ஷ்யாம் கிருஷ்ணன், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

விஸ்வாசம் படத்தை வெளியிட்ட கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

இப்படத்தை இன்னும் பிரபலபடுத்த பிரத்யேக வீடியோ கேம் ஒன்றை ஹீரோ படக்குழு வெளியிட்டுள்ளது.

இதனிடையே, இப்படத்துக்கு எதிராக டி.எஸ்.ஆர். பட நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. கடனாக பெற்ற ரூ.10 கோடியை 24 ஏஎம் பிலிம்ஸ் நிறுவனம் வட்டியுடன் திரும்பி வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதையடுத்து ஹீரோ படத்துக்கு கோர்ட்டு தடை விதித்தது என்பதை பார்த்தோம்.

ஹீரோ படத்துக்கும் 24 ஏஎம் பட நிறுவனத்துக்கும் தொடர்பு இல்லை என்று கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் அறிக்கை வெளியிட்டதையும் பதிவிட்டோம்.

இந்த நிலையில் பிரச்சினைகள் மேலும் தொடர பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளது.

தற்போது டி.எஸ்.ஆர். பட நிறுவனத்திடம் பேசி ஹீரோ படம் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளனர்.

எனவே டிசம்பர் 20-ந்தேதி ஹீரோ படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

மீண்டும் பாட்ஷா.. ரஜினி ரசிகர்களுக்கு சத்யா மூவிஸ் விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினி கேரியரில் அவராலேயே மறக்க முடியாத படம் பாட்ஷா.

சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இந்த படத்தை சத்யா மூவிஸ் சார்பில் ஆர்எம். வீரப்பன் தயாரித்திருந்தார்.

தேவா இசையமைத்திருந்த இந்த படத்தின் பாடல்கள் இன்றும் பல ஆட்டோ ஸ்டாண்டுகளில் பட்டைய கிளப்பும்.

ஓரிரு வருடங்களுக்கு முன் டிஜிட்டல் வடிவில் மாற்றியமைக்கப்பட்டு மீண்டும் திரையிடப்பட்டது.

இந்த நிலையில் கோவா திரைப்பட விழாவில் ரஜினிகாந்த் கோல்டன் ஐகான் விருது பெற்றதை கௌரவிக்கும் வகையில் டிசம்பர் 12 ந் தேதி ரஜினி பிறந்த நாள் என்பதாலும் பாட்ஷா படத்தை மீண்டும் திரையிட உள்ளதாக சத்யா மூவிஸ் தெரிவித்துள்ளது.

அதன்படி டிசம்பர் 11ம் தேதி ரஜினியின் பாட்ஷா படம் உலக அளவில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் திரையிடப்பட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

More Articles
Follows