’96’ படத்தில் நிறைவேறாத காதல் நிஜத்தில் அரங்கேறியது..; பிரபலங்கள் வாழ்த்து மழையில் ராம் & ஜானு திருமணம்

’96’ படத்தில் நிறைவேறாத காதல் நிஜத்தில் அரங்கேறியது..; பிரபலங்கள் வாழ்த்து மழையில் ராம் & ஜானு திருமணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

96 படத்தில் ராம் & ஜானு ஜோடி பிரபலமானவர்கள். ஆனால் படத்தில் இவர்கள் இணைய மாட்டார்கள்.

ஆனால் இதே பெயரில் உள்ள ராம் & ஜானு ஜோடி நிஜத்தில் திருமண வாழ்வில் இணைந்துள்ளனர்.

(பெயரை தவிர இவர்களுக்கும் 96 படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.)

அதன் விவரம் வருமாறு…

பிரபல திரைப்பட மற்றும் சின்னத்திரை தயாரிப்பு நிர்வாகி திரு M.Kesavaraj மகள் K.Keerthi Shrathah (a) Jaanu & Ram அவர்களின் திருமண வரவேற்பு விழா 14.9.2021 அன்று மாலை சென்னை- மதுரவாயல் S.P.P கார்டனில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

மேலும், மணமக்கள் Ram & Jaanu You Tube சேனலில் மிகவும் பிரபலமானவர்கள்..

இவ்விழாவில் பிரபல திரைப்பட மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் வனிதா விஜயகுமார், ராதா (சுந்தரா டிராவல்ஸ் ), ஸ்ரீகுமார், சமிதா, சரண்யா துரதி, ராஜ்கமல், லதாராவ், J.லலிதா, ரவிவர்மா (CNS தலைவர்), சிவன் சீனிவாசன், ராஜ்காந்த், சாக்க்ஷிசிவா மற்றும் பிரபல You Tubers மதன் கௌரி, இர்பான்ஸ் வீவ், சுகெல் பமி, RJ விக்னேஷ், சேட்டை ஷெரிப், RJ ஷா, VJ அர்ச்சனா, கண்மணி மற்றும் கலைத்துறை சார்ந்த தொழில் நுட்ப கலைஞர்களும் இவ்விழாவில் கலந்து பங்கேற்று விழாவினை சிறப்பித்தனர்.

Famous youtubers Raam Jaanu got married in chennai

என் மகனுக்கு விஜய்ன்னு பேர் வச்சேன்..; யாரோ வச்சதா சிலர் பெர்சனல் பேசுறாங்க..; எஸ்ஏசி ஆதங்கம்

என் மகனுக்கு விஜய்ன்னு பேர் வச்சேன்..; யாரோ வச்சதா சிலர் பெர்சனல் பேசுறாங்க..; எஸ்ஏசி ஆதங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் தனது 79 -வது வயதில் 71-வது படைப்பாக இயக்கியிருக்கும் திரைப்படம் ‘நான் கடவுள் இல்லை’ இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்ற இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மேலும் பேசும்போது,

“இங்கே வந்திருக்கும் விஜய்ஆண்டனி அவர்களுக்கு நன்றி .இப்போது அவருக்கு 103 டிகிரி காய்ச்சல் அடிக்கும் போதும் இங்கு வந்திருக்கிறார் .அவர் ஒரு இசையமைப்பாளராகவும்
நடிகராகவும் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றவர். கடுமையான உழைப்பாளி .எப்போதும் அவர் பேசும்போது பாசிட்டிவான வார்த்தைகளைப் பேசுபவர்.

முடியும் என்கிற நம்பிக்கை கொண்டவர். அவர் இங்கே வந்திருப்பது அந்த நம்பிக்கையே இங்கு வந்திருப்பதாக நினைக்கிறேன்.
எப்போதும் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டால் “சூப்பர் சார் “என்பார். அவரது படம் நாளை வெளியாக இருக்கிறது .அந்த பரபரப்பான நிலையில் இங்கே வந்திருக்கிறார். இதைப் பார்க்கும் போது எனக்கு ஒரு பழைய ஞாபகம் வருகிறது.நான் காமன் கோட்டையில் எட்டாம் வகுப்பு படித்தபோது தேர்வு எழுதுவதற்கு திருப்பாச்சி செல்ல வேண்டும்.

அங்குள்ள எங்கள் உறவினர் வீட்டில் தங்கி தேர்வு எழுதினேன். நாளை கணக்கு பாடத் தேர்வு எழுத வேண்டும்.ஆனால் இன்று இரவு நான் எம்.ஜி.ஆர் படத்துக்குப் போய்விட்டு வந்து நன்றாக தூங்கினேன். மறுநாள் தேர்வு எழுதினேன் .எனக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண் கிடைத்தது. சொன்னால் நம்பமாட்டீர்கள் அந்த சான்றிதழ் உள்ளது .எப்படி என்னால் முடிந்தது? என் ஆசிரியர் அறிவுரை கூறுவார் .

“வருடம் பூராவும் ஒழுங்காகப் படித்தால் போதும் தேர்வுக்கு என்று படிக்க வேண்டாம்” என்பார்.அப்படித்தான் எப்போதும் உழைத்துக் கொண்டிருக்கும் விஜய் ஆண்டனிக்கு அதற்கான கூலியைக் கடவுள் கொடுப்பார்.

இனி ரிலாக்ஸ் ஆக இருக்கலாம். உழைப்பில் அவ்வளவு பெரிய முதலீடு செய்துள்ளார்.

இந்தப் படத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனியைப் பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும் .அவர் ஒரு இயக்குநராக நடிகராக மட்டுமல்ல ஒரு மனிதராகவும் என்னை மிகவும் கவர்ந்து விட்டார் .

அவரிடம் இந்தக் கதையை சொல்லி நான் விவரித்தபோது ,”அதெல்லாம் விரிவாக பேச வேண்டாம்.நான் உங்கள் படத்தில் இருக்கிறேன்” என்று சொன்னார் . அதுவே எனக்குப் பெருமையாக இருந்தது.

படப்பிடிப்பில் இன்னொரு டேக் என்று நான் சொல்வதற்கு முன்பாக அவர் தயாராக இருப்பார். நான் அவரிடம் கேட்பதற்கு யோசனையாக இருக்கும் போதே ,உடனே அடுத்த டேக் போகலாமா என்று மீண்டும் நடிக்க வேண்டுமா என்று கேட்டு நடித்துக்கொடுத்தார்.

உங்கள் விருப்பப்படி பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சர்வ சுதந்திரம் கொடுத்தார். ஓர் இயக்குநருக்கு அதைவிட வேறென்ன வேண்டும்’? நான் இத்தனை படங்கள் எடுத்து இருந்தாலும் , எண்ணிக்கை முக்கியமல்ல .அவரது படங்கள் சிறப்பானவை. அவரை எப்படி வேலை வாங்குவது என்று ஆரம்பத்தில் பயந்தேன் .ஆனால் அவர் இயக்குநரின் நடிகர் ஆகிவிட்டார்.

பருத்திவீரன் சரவணனிடம் இந்தப் படத்தின் பாத்திரத்தைப் பற்றி விவரித்த போது அவர் பயந்தார். என்னால் முடியாது என்று மறுத்துவிட்டார்.அவர் ஏற்கவில்லை . பொதுவாக எல்லா படங்களிலும் கதாநாயகனைத் தான் சக்தி மிக்கவர்களாகக் காட்டுவார்கள்.

ஆனால் இந்தப்படத்தில் வில்லனைச் சக்தி மிக்கவனாகக் காட்டுகிறேன். அந்தப் பாத்திரத்தைப் பற்றிப் புரிந்து கொண்டதும் பிறகு ஒருவழியாக ஒப்புக்கொண்டார். டப்பிங் பேசி விட்டு ‘என்னைப் பார்க்க எனக்கே பயமாக இருக்கிறது “என்றார்.

கதாநாயகிகளுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை .நடித்து விடுவதோடு சரி. இந்த டப்பிங் பேசவோ ப்ரமோஷன் செய்யவோ வரமாட்டார்கள். அதுதான் அவர்களது போக்காக இருக்கிறது. ஆனால் என்னுடைய கதாநாயகிகள் இனியாவும் சரி சாக்ஷி அகர்வாலும் சரி அப்படிப்பட்டவர்கள் அல்ல.

நன்றாக நடித்து ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.இந்தப் படத்தின் விழா என்று சொன்னதும் ‘அடுத்த படத்தின் படப்பிடிப்பை இங்கேயே தொடங்கி விடலாமா?’ என்று சாக்ஷி அகர்வால் கேட்டார். அப்படிப்பட்டவர்கள்தான் என் படத்தில் நடித்திருக்கிறார்கள்.

இங்கே தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ இருக்கிறார். அவர் எனது உறவினர் என்பதால் வரவில்லை ஒரு தயாரிப்பாளராக இங்கே இருக்கிறார் .1993 -ல் விஜய் படத்திற்கு பைனான்ஸ் செய்தார்கள். அவர்கள் நினைவாக அவர்கள் பெயரிலேயே பி.வி கம்பைன்ஸ் சார்பில் அந்த படம் தயாரிக்கப்பட்டது.

பிறகு
சேவியர் பிரிட்டோ ‘மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளரானார். அந்தப் படத்தை பெரிய அளவில் உயர்த்தினார்.
இங்கே வந்துள்ள கலைப்புலி தாணுவிடம் எப்போது பேசினாலும் “எங்கே வர வேண்டும் ?எப்போது வரவேண்டும் ?”என்று கேட்பார்.

‘ துப்பாக்கி’ படத்தை முதலில் நாங்கள் தொடங்கினோம். தவிர்க்க இயலாத காரணங்களால் தொடர முடியாமல் அவரைக் தயாரிக்கச் சொன்னேன் .அந்தப் படத்தை பெரிய அளவில் வணிகம் செய்து பெரிய படமாக அவர் தயாரித்தார் .அதற்குப்பிறகு விஜய்யின் வணிக மதிப்பு பெரிய அளவில் மாறியது.

இங்கே வந்திருக்கும் இயக்குநர் ராஜேஷ் , பொன்ராம் என் பள்ளி மாணவர்கள் என்று நான் சொல்வதில் மகிழ்ச்சி .என் என்னிடம் உதவியாளர்களாக வருபவர்கள் தங்களுக்கு திறமை இல்லை என்று சொல்வார்கள். நேரத்தை மதித்துநடந்து கொள்ளுங்கள். நான் உங்களை திறமைசாலியாக உருவாக்கிக் காட்டுகிறேன் என்று நான் சொல்வேன்.

‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘சாட்சி’ ,’நான் சிகப்பு மனிதன்’ , ‘நீதிக்கு தண்டனை’ போன்று எனக்கென்று ஒரு வகையான பாணியில் படங்கள் எடுத்து வந்தேன். ஒரு குடும்பம் ,சென்டிமெண்ட், கிரைம், திரில்லர் இப்படித்தான் படம் எடுத்துக் கொண்டிருந்தேன்.

அதில் சட்டம் எப்படி புகுந்து விளையாடுகிறது என்கிற வகையில் படம் எடுப்பேன்.’ சட்டம் சந்திரசேகர்’ என்ற பெயரே எனக்கு இருந்தது .என் மகன் நடிக்க ஆசை பட்டதால் 1992-ல் என் பாணியை மாற்றிக்கொண்டேன்.

‘ரசிகன்’,’ விஷ்ணு ‘ போன்ற படங்களை இளைஞர்களுக்காக எடுத்தேன். இப்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு என்னுடைய பழைய பாணியில் சோஷியல் த்ரில்லரை சமூக அக்கறை கொண்ட படமாக எடுத்திருக்கிறேன். எப்போதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் நான் மீண்டும் பிறந்து வருவேன் என்று கீதையில் சொல்லப்பட்டுள்ளது.

அதே கருவை மையமாக வைத்து ‘நான் சிகப்பு மனிதன்’ எடுத்தேன். பல ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படமும் அப்படி ஒரு கருவை வைத்து உருவாகியிருக்கிறது. நிச்சயம் இந்தப் படத்தில் ஒரு புது விஷயம் சொல்லி இருக்கிறேன். இதுவரை தமிழில் வராத விஷயத்தை நான் சொல்லியிருக்கிறேன்.

சமூகத்தால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை ,தீயவர்களால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதுகிறது.அது கேட்கப் படுகிறதா இல்லையா என்பதுதான் கதை.

அமெரிக்காவில் கூட ஒரு சிறுவன் கடவுளுக்கு கடிதம் எழுதி வெள்ளை மாளிகையில் இருந்து உதவி வந்ததாக சமீபத்தில் வாட்ஸ்-அப்பில் படித்தேன். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
இந்தப் படம் போன லாக் டவுன் கொரோனா காலத்தில் தொடங்கப்பட்டது .

அதாவது போன ஆண்டு மே மாதம் முதல் ஐந்து மாதங்கள் நான் சேவியர் பிரிட்டோவின் ரிசார்ட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு தங்கியிருந்தேன். அப்போது என்ன செய்வது? என்னால் உழைக்காமல் இருக்க முடியாது .அப்போது தனி ஒருவனாக என்னால் உருவாக்கப்பட்டது தான் இக்கதை.செப்டம்பரில் படப்பிடிப்பை தொடங்கி முடித்துவிட்டோம்.

இங்கே இயக்குநர்கள் இருக்கிறார்கள் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். எப்போதும் நல்லதைச் சொல்ல வேண்டும். தவறுகளைச் சுட்டிக்காட்ட வேண்டும் .உண்மைகளைப் பேச வேண்டும் ,அதனால் பாதிப்பு வந்தாலும் பரவாயில்லை. தயங்கக் கூடாது .நான் எல்லா இயக்குநர்களுக்கும் சொல்கிறேன் , தைரியமாக உண்மையைப் பேசுங்கள்.

தைரியமாகக் கருத்துகளைச் சொல்லுங்கள் .எல்லா இயக்குநர்களும் தைரியமாக இருக்க வேண்டும். சமூக சிந்தனையுடன் இருக்க வேண்டும். சமூக நோக்கத்துடன் படம் எடுக்க வேண்டும்.

எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் மனிதராக இருக்க வேண்டும். சமுத்திரக்கனி ஒரு நல்ல மனிதராக இருப்பவர். என்னைப்போலவே சமூகக் கோபம் கொண்டவர்.மனித நேயம் மிக்கவர், பணமெல்லாம் அதற்குப்பிறகுதான் என்று இருப்பவர் .இப்படத்தின் மூலம் நல்ல மனிதர்களுடன் பயணம் செய்த உணர்வு எனக்கு உள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு நான் ஒரு பட விழாவில் பேசினேன் விஜய்க்கு எப்படிப் பெயர் வைத்தேன் என்று .விஜய் என்றால் வெற்றி என்ற அடையாளத்தில் வைத்தேன் என்று கூறி இருக்கிறேன் .

ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு ஊடகங்களில் சிலர் யாரோ உட்கார்ந்து கொண்டு விஜயின் தாத்தா வாகினி ஸ்டுடியோவில் வேலை பார்த்தாராம்.

பேரனைத் தூக்கிக்கொண்டு போய் பெயர் வைக்கக் கேட்டாராம். நாகிரெட்டி தான் விஜய் என்று பெயர் வைத்தாராம் என்று ஒரு கதை விடுகிறார்கள்.

மீடியாக்காரர்கள் உண்மையைச் சொல்லுங்கள் .பொய் சொல்லாதீர்கள் . தவறுகளைத் தைரியமாகச் சுட்டிக்காட்டுங்கள். அதற்காக தேவையில்லாத தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசாதீர்கள்.

உடனே அப்பா பிள்ளை சண்டை என்கிறார்கள். ஆமாம் எங்களுக்குள் சண்டைதான். இதுஎல்லா குடும்பத்திலும் நடப்பது தான் .குடும்பத்தில் அப்பா பிள்ளைகள் சண்டை போட்டுக்கொள்வார்கள். பிறகு கட்டி அணைத்துக் கொள்வார்கள். இது சகஜமானதுதான்.

விஜய் ரகசியம் என்று ஏதேதோ சொல்கிறார்கள் .விஜய் பற்றி ஏதாவது சொல்லித் தங்களுக்குப் பார்வையாளர்களை அதிகப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள் .

இதைப் பார்க்கும்போது விஜய் பெயரைச் சொன்னால் பார்வையாளர்கள் கூடும் அளவிற்கு விஜய் வளர்ந்திருக்கிறார் என்று அதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். இது நல்ல மேடை நல்லதைச் சொல்வோம் .அன்பை விதைப்போம் .அன்பை அறுவடை செய்வோம்”இவ்வாறு இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் பேசினார்.

விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி பேசும்போது,

“நான் சில ஆண்டுகளுக்கு முன்பு சமுத்திரக்கனி சாரிடம் பேசியபோது நாம் யாருக்காகவும் நம்மை மாற்றிக் கொள்ளக்கூடாது. நாம் நாமாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

அதை என்னால் மறக்க முடியாது .எஸ்.ஏ.சி. சார் 79 வயதில் 71 படங்கள்முடித்திருப்பது நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது எப்படி இதைச் செய்தார் என்று ஆச்சரியமாக இருக்கிறது.

சினிமாவில் நடிகர்கள் நடிக்கலாம் பல படங்களில் ஒரே நேரத்தில் நடிக்கலாம். ஆனால் இயக்குவது என்பது பெரிய வேலை .24 டிபார்ட்மெண்ட்களையும் கட்டி மேய்க்க வேண்டிய ஒரு வேலை.அதனால் இதை எப்படிச் செய்தார் என்று என்று ஆச்சரியமாக இருக்கிறது. அவர் எப்போதும் நேரத்தைச் சரியாகப் பார்ப்பவர். காலையில் எழுவதும் சீக்கிரம் படுக்கப் போவதும் அவர் வழக்கம். அதனால்தான் இந்த வயதிலும் அவர் இளைஞராகத் தெரிகிறார்” என்று கூறி படக்குழுவினரை வாழ்த்தினார்.

இயக்குநர் நடிகர் சமுத்திரக்கனி பேசும்போது,

“இந்தப் படம் பற்றிய அனுபவம் பெரிய மறக்கமுடியாத பயணமாக எனக்கு இருந்தது .முதலில் இயக்குநர் எஸ்.ஏ.சி சார் என்னுடன் பேச வேண்டும் என்று நண்பர் கூறிய போது, கொரோனா காலத்தில் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டியதுதானே என்று நான் நினைத்தேன் .ஆனால் அவர் உங்கள் அலுவலகம் எங்கே இருக்கிறது என்றார் சொன்னால், அங்கேதான் வந்து கொண்டிருக்கிறேன் என்றார்.

அவ்வளவு சுறுசுறுப்பானவர் .அடுத்த பத்து நிமிடத்தில் வந்து சேர்ந்துவிட்டார். அவரைப் பார்க்கும்போது கண்டிப்பாக நேரம் தவறாமையைக் கடைபிடிக்கும்குணம் தெரிந்தது. அதைப் பார்க்கும்போது என் குருநாதர் பாலச்சந்தர் சார் நினைவில் வந்தார் .

பெரிதாகச் சாதித்தவர்கள் அனைவரும் நேரத்தை மதித்தவர்களாக இருந்திருப்பார்கள். என் குருநாதர் என்னிடம் சொல்வார் எங்கே போனாலும் பத்து நிமிடம் முன்பாகப் போய்ச் சேர். அது உன் வாழ்க்கையை மாற்றும் என்பார். எஸ்.ஏ.சி. சாரிடம் என் குருநாதரைப் பார்க்கிறேன்.இந்தப் படப்பிடிப்பு காலை 7 மணி முதல் நள்ளிரவு 12.30 மணிவரை கூட நடந்திருக்கிறது .

ஆனால் அவர் எப்போதும் சோர்வில்லாமல் உழைத்துக் கொண்டே இருப்பார் .நான் காலையில் 7 மணிக்குச்செல்லும் போது அதற்கு முன்பே யாரையாவது வைத்துச் சில காட்சிகளை எடுத்து முடித்திருப்பார். அவரது இயக்கத்தில் மீண்டும் நடிப்பதற்கு அவர் எப்போது அழைத்தாலும் நான் வருவதற்குத் தயாராக இருக்கிறேன்” என்றார்.

முன்னதாக டீஸரை இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி வெளியிட படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

படத்தின் ட்ரெய்லரைத் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ வெளியிடbதயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு பெற்றுக்கொண்டார்.

இவ்விழாவில் இயக்குநர்கள் எம். ராஜேஷ், பொன்ராம்,நடிகைகள் இனியா, சாக்ஷி அகர்வால், குழந்தை நட்சத்திரம் டயானா, நடிகர்கள் அபி சரவணன், யுவன் மயில்சாமி ,தயாரிப்பாளர் விமலா பிரிட்டோ, இசையமைப்பாளர் சித்தார்த் விபின், ஒளிப்பதிப்பதிவாளர் மகேஷ் கே.தேவ், படத்தொகுப்பாளர் பிரபாகர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

SAC emotional speech at Naan Kadavul Illai audio launch

வடிவேலுக்கே கிடைக்காத ‘நாய் சேகர்’ டைட்டிலை கைப்பற்றிய சதீஷ்..; சிவகார்த்திகேயன் வைத்த ட்விஸ்ட்

வடிவேலுக்கே கிடைக்காத ‘நாய் சேகர்’ டைட்டிலை கைப்பற்றிய சதீஷ்..; சிவகார்த்திகேயன் வைத்த ட்விஸ்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக ந ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படமொன்றில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் குக் வித் கோமாளி பவித்ரா நாயகியாக நடிக்க இருக்கிறார் என்ற செய்தியை நம் தளத்தில் சில மாதங்களுக்கு முன்னரே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்துக்காக பொருத்தமாக இருக்கும் என நாய்சேகர் என்ற தலைப்பை ஏஜிஎஸ் நிறுவனம் பதிவு செய்து வைத்திருந்தது.

அதன் படி சற்றுமுன் ‘நாய்சேகர்’ பர்ஸ்ட் லுக் வெளியானது.

இதனை நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் கிரிக்கெட்டர் அஸ்வின் ஆகியோர் வெளியிட்டனர்.

வடிவேலுவின் முத்திரைக் கதாபாத்திரமான நாய் சேகரை வைத்து இப்போது சுராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார்.

இந்த படத்துக்காக அந்த தலைப்பை ஏஜிஎஸ் நிறுவனத்தினரிடம் வடிவேலு சார்பாக கேட்டு இருந்தனர்.

இந்த பிரச்சனையே இன்னும் முடியாத நிலையில் நாய்சேகர் பர்ஸ்ட் லுக் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் பதிவு இதோ..

வடிவேலு சாரின் ரசிகனாக இந்த முதல் பார்வையை வெளியிடுவதில் மகிழ்ச்சி[email protected] உங்கள் பொறுப்பு அதிகமாகிவிட்டது சிறப்பாக செய்யுங்கள்,படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகள்?Best wishes to @archanakalpathi @itspavitralaksh dir @KishoreRajkumar &entire team for a great success?? https://t.co/4ScNWKsxxG

Sivakarthikeyan’s twist in Sathish’s next film title reveal

கமல் பாணியில் சினிமாவுக்காக அர்ப்பணிக்கும் விக்ரமின் தங்கை மகன் அர்ஜுமன்

கமல் பாணியில் சினிமாவுக்காக அர்ப்பணிக்கும் விக்ரமின் தங்கை மகன் அர்ஜுமன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தாதா 87 பட இயக்குனர் விஜய் ஸ்ரீ இயக்கி வரும் படம் PUBG ‘ ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’.

விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜுமன் இந்த பப்ஜி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஐஸ்வர்யா தத்தா ஹீரோயினாக நடித்துள்ளார்.

இந்த நிலையில் இப்படத்துக்காக 4 வருடம் வளர்த்த முடியை, நடிகர் அர்ஜுமன் ஒரு காட்சிக்காக வெட்டி உள்ளார்.

படப்பிடிப்பு தளத்தில் வைத்து அவர் முடியை வெட்டியிருக்கிறார் இயக்குனர் விஜய் ஸ்ரீ.

வெட்டப்பட்ட முடியை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தானமாக கொடுத்திருக்கிறார் நடிகர் அர்ஜுமன்.

அவரின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

படத்தின் கேரக்டருக்காக தங்களையே அர்ப்பணிக்கும் நடிகர்களில் கமல், விக்ரம் முக்கியமானவர்கள்.

அந்த வரிசையில் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜுமனும் விரைவில் இணைவார் என எதிர்பார்க்கலாம்.

Actor Arjuman’s dedication in his debut film

ரஜினி எம்ஜிஆரை தாண்டி அண்ணா வடிவத்தில் விஜய்..; தளபதி ரசிகர்கள் தடாலடி

ரஜினி எம்ஜிஆரை தாண்டி அண்ணா வடிவத்தில் விஜய்..; தளபதி ரசிகர்கள் தடாலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று செப்டம்பர் 15ல் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கொண்டாடினர்.

இந்த நிலையில், தளபதி விஜய் ரசிகர்களும் அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

மதுரை விஜய் ரசிகர்கள் அச்சடித்துள்ள வாழ்த்து போஸ்டரில்..

“விஜய்யின் உருவத்தை அண்ணாவோடு பொருத்தி “மீண்டும் அண்ணா, வேண்டும் அண்ணா’ என்ற வாசகத்தோடு போஸ்டர்களை அச்சடித்து ஒட்டியுள்ளனர்.

இது மதுரை பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் சினிமாவில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய காலத்தில் தன்னை ரஜினி ரசிகராகவே காட்டிக் கொண்டார். (இப்போதும் அப்படித்தான்). அதற்கேற்ற போல காட்சிகளை சினிமாவில் சின்ன ரஜினியாக வலம் வந்தார்.

வருடங்கள் ஓட ஓட விஜய்யின் வசூல் மார்கெட் உயர ரஜினியை காட்டாமல் மெர்சல் படங்களில் எம்ஜிஆர் ரசிகராக காட்டிக் கொண்டார்.

இப்போது அவரது ரசிகர்கள் ஒரு படி மேலே சென்று அண்ணாவுடன் விஜய்யை ஒப்பிட ஆரம்பித்துவிட்டார்கள்..

அடுத்தது யாரோ..?? கலைஞர்.??

Madurai Vijay fans stick political posters

Vijay Anna
Vijay Anna
சக்சஸ் பார்ட்டியில் சந்தானம்.; மாற்றுத் திறனாளிகளிடம் மன்னிப்பு கேட்க மனமில்லையா EB மணி?

சக்சஸ் பார்ட்டியில் சந்தானம்.; மாற்றுத் திறனாளிகளிடம் மன்னிப்பு கேட்க மனமில்லையா EB மணி?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முதன்முறையாக சந்தானம் 3 வேடங்களில் நடிக்க கார்த்திக் யோகி இயக்கியிருந்த படம் “டிக்கிலோனா”.

இந்த படத்தில் ஹாக்கி ப்ளேயர், EB மணி ஆகிய கேரக்டர்களில் நடித்திருந்தார் சந்தானம்.

கடந்த வாரம் இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது.

கெஜேஆர் ஸ்டூடியோஸ் சார்பாக ராஜேஷ் இப்படத்தை தயாரித்திருந்தார்.

இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தது.

இந்த நிலையில், படத்தில் மாற்றுத்திறனாளி ஒருவரை ஹீரோ சந்தானம் “ஏய் சைட் ஸ்டாண்டு” என்று அழைப்பார்.

இயற்கையில் அப்படி ஒரு பிறப்பு கிடைக்கையில் மாற்றுத் திறனாளிகள் என்ன செய்ய முடியும். நம்மால் அப்படி ஒரு நாள் வாழ முடியுமா? என்பதை நினைத்து பார்க்க கூட முடியாது.

மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படும் மன வலியை யாரால் தீர்க்க முடியும்.?

இது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் படத்தின் வெற்றியை சந்தானம் & ராஜேஷ் குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.

ஆனால், இதுவரை இந்த செயலுக்கு தயாரிப்பு தரப்பான கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனமோ ஹீரோவான சந்தானமோ ஒரு வருத்தமும் மன்னிப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Will Santhanam apologize for controversy scene in Dikkiloona film ?

More Articles
Follows