ரஜினி இடத்தில் வடிவேலுவை வைக்கும் கோலிவுட்.; ரூட் போட்ட சதீஷ் & யோகிபாபு

ரஜினி இடத்தில் வடிவேலுவை வைக்கும் கோலிவுட்.; ரூட் போட்ட சதீஷ் & யோகிபாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதுவரை 167க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். அண்ணாத்த அவரின் 168 படமாக உருவாகியுள்ளது.

இதில் எத்தனையோ சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். ரஜினியின் படங்களில் அவரது கேரக்டர் பெயரே படத் தலைப்பாக இருக்கும்.

பில்லா, ரங்கா, அண்ணாமலை, அருணாச்சலம், பாட்ஷா, முத்து, சிவா, வீரா, படையப்பா, பாபா, லிங்கா, கபாலி, காலா, பேட்ட என பல படங்களை உதாரணமாக சொல்லலாம். இறுதியாக வந்த தர்பார் படத்தில் அவரது கேரக்டர் பெயர் தலைப்பாக இடம் பெறவில்லை.

இதில் பல தலைப்புகளை அண்மைக்காலமாக பல படங்களுக்கு தயாரிப்பாளர்கள் வைத்து வருகின்றனர்.

வீரா, ரங்கா, தீ, தர்மத்தின் தலைவன், போக்கிரி ராஜா, முரட்டுக்காளை, ராஜாதி ராஜா என பல தலைப்புகளை வைத்துவிட்டனர்.

தற்போது ரஜினி வரிசையில் வடிவேலுவின் கேரக்டர்கள் பெயரை வைப்பது ஆரம்பமாகியுள்ளது.

தலைநகரம் படத்தில் நாய் சேகர் என்ற கேரக்டரில் நடித்திருந்தார் வடிவேலு. அந்த கேரக்டர் பெயரை தன் படத்திற்கு வைத்துள்ளார் நடிகர் சதீஷ்.

ப்ரெண்ட்ஸ் படத்தில் காண்ட்ராக்டர் நேசமணி என்ற கேரக்டரில் நடித்திருந்தார் வடிவேலு. இந்த கேரக்டர் பெயரை தன் படத்திற்கு வைத்துள்ளார் யோகிபாபு.

எனவே வண்டு முருகன், சினேக் பாபு, கைப்புள்ள என வடிவேலுவின் சூப்பர் ஹிட் கேரக்டர் பெயர்களை இனி தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கலாம்.

Famous vadivelu characters become movie titles in Kollywood

திருட்டு மாமா-வாக மாறிய ‘பேய் மாமா’; திறமையானவர்களுக்கு வேலை கொடுக்கலாமே மாமா

திருட்டு மாமா-வாக மாறிய ‘பேய் மாமா’; திறமையானவர்களுக்கு வேலை கொடுக்கலாமே மாமா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் யோகிபாபு, மொட்ட ராஜேந்திரன், ரேகா, எம்எஸ் பாஸ்கர் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து நேற்று செப்டம்பர் 24ல் தியேட்டர்களில் வெளியான திரைப்படம் “பேய்மாமா”.

இந்த படத்தின் விமர்சனத்தை நம் தளத்தில் பார்த்தோம்.

ஏதோ படம் எடுக்க வேண்டும் தயாரிப்பாளரை காலி செய்ய வேண்டும். ரசிகர்களை நோககடிக்க வேண்டும் என்பதே இயக்குனரின் எண்ணமாக இருந்து இருக்குமோ என்ற கவலையே தற்போது எழுந்துள்ளது.

இப்படத்தை தொடர்ந்து இப்பட போஸ்டர்களையும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

இப்படக்குழுவினர் வெளியிடும் போஸ்டர்கள் ஹிட்டான பாலிவுட் படங்களில் இருந்து எடுக்கப்பட்ட காப்பியாக உள்ளது…

எனவே ஒரிஜினல் போஸ்டர்களையும் காப்பி போஸ்டரையும் சேர்த்து போஸ்ட் செய்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

கதை தான் காப்பி என்றால் போஸ்டரை கூட விட்டு வைக்கவில்லையே இவர்கள். திறமையிருந்தும் வேலையில்லாமல் எத்தனை இளைஞர்கள் டிசைனர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேலை கொடுத்தால் புதிய ஐடியாவுடன் புதிய போஸ்டரும் கிடைக்குமே பேய் மாமா…

Netizens troll Tamil movie ‘Pei Mama’ for copying Bollywood posters

ரசிகர்களை சீட் நுனியில் உட்கார வைக்க வரிந்துக் கட்டி வரும் ஜோடி பரத்-வாணி போஜன்

ரசிகர்களை சீட் நுனியில் உட்கார வைக்க வரிந்துக் கட்டி வரும் ஜோடி பரத்-வாணி போஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Axess Film Factory நிறுவனத்தின் தயாரிப்பாளார் G.டில்லிபாபு தயாரிப்பில், தற்போதைக்கு Production No 12 என தலைப்பிடப்பட்டு, நடிகர்கள் பரத், வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தென்காசியில் நடைபெற்றதை தொடர்ந்து, இறுதிக் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது.

Axess Film Factory நிறுவன தயாரிப்பாளர் G. டில்லிபாபு இது குறித்து கூறியதாவது…

எங்கள் நிறுவனத்தின் “Production No 12” படத்தின் முழுப்படப்பிடிப்பும் இனிதே முடிவடைந்துள்ளது.

மிக திறமை மிகுந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினருடன் இணைந்து பணியாற்றிய இந்த அனுபவம், மிக மகிழ்ச்ச்சிகரமானதாக இருந்தது.

பரத், வாணி போஜன், இயக்குநர் K.S.ரவிக்குமார் ஆகியோர் அவரவர் கதாப்பாத்திரங்களில் மிக அற்புதமான நடிப்பினை தந்துள்ளார்கள்.

இயக்குநர் M.சக்திவேல் அவர்கள் இயக்கும் முதல் படம் போல இல்லை, மிக அனுபவமிக்க ஒரு இயக்குநரை போலவே அவர் இப்படத்தை இயக்கியுள்ளார்.

அவர் தயாரிப்பாளர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குநராக இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் அனைத்து தயாரிப்பாளர்களாலும் விரும்பப்படும் இயக்குநராக விரைவில் மாறுவார்.

இயக்குநராக அவரது திறமையை தாண்டி, அவரது திட்டமிடலிலும் அதை செயல்படுத்தும் விதத்திலும் மிகச்சரியாக செயல்பட்டு, இப்படத்தை திட்டமிட்ட பட்ஜெட்டில், உரிய கால அவகாசத்தில் முடித்தது மிக பிரமிப்பானது என்றார்.

மேலும் விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்றும், அதைத்தொடர்ந்து டிரெய்லர், திரை வெளியீடு குறித்த அறிவிப்புகளும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றார்.

பரத், வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, K.S.ரவிக்குமார், ராஜ்குமார், காவ்யா முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் வேல்ராஜ் அவர்களின் உதவியாளர் S. சுரேஷ் பாலா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். R.கலை வாணன் இப்படத்திற்கு படத்தொகுப்பு செய்கிறார். SB மணிகண்டன் கலை இயக்கம் செய்துள்ளார்.

இத்திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் M.சக்திவேல் கதை திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்குகிறார்.

ரசிகர்களை தியேட்டர் சீட் நுனியில் வைத்திருக்கும் பரபர த்ரில்லர் வகைப்படமாக இப்படம் இருக்குமென படக்குழு தெரிவித்துள்ளது.

Bharath and Vani bhojan joins for a thriller film

ரஜினி-கமல் ரசிகர்களின் ட்ரீம் ஹீரோயினை மீண்டும் தமிழுக்கு கொண்டு வரும் ட்ரீம் வாரியர்ஸ்

ரஜினி-கமல் ரசிகர்களின் ட்ரீம் ஹீரோயினை மீண்டும் தமிழுக்கு கொண்டு வரும் ட்ரீம் வாரியர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‛எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நடிகர் ஷர்வானந்த்.

இந்தப்படத்திற்குப் பிறகு தெலுங்கில் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி, அங்கே தற்போது பிஸியான நடிகராக வலம் வருகிறார்.

இந்நிலையில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ‛கணம்’ படத்தின் மூலம், மீண்டும் தமிழ்த்திரையுலகில் கால்பதித்துள்ளார் ஷர்வானந்த்.

இவருக்கு ஜோடியாக ரீது வர்மா நடிக்கிறார்.

இப்படத்தில், 80களில் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப்பறந்த நடிகை அமலாவும் இப்படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் களமிறங்கியுள்ளார்.

1980களில் அப்போது ரஜினி கமல் பிரபு உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர் அமலா. பின்னர் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை திருமணம் செய்துக் கொண்டு செட்டிலானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களோடு நாசர், சதீஷ், ரமேஷ் திலக் ஆகியோரும் நடித்துள்ளனர்.

துருவங்கள் 16, மாஃபியா படங்களில் பணிபுரிந்த இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய், ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங், எடிட்டர் ஸ்ரீஜித் சாரங் இந்தப்படத்திலும் கூட்டாக பணிபுரிகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

ஆர்ட்: என்.சதீஷ்குமார்
ஸ்டண்ட்:சுதேஷ்குமார்
பாடல்கள்:மதன் கார்க்கி,உமாதேவி,கேபர் வாசுகி
PRO:ஜான்சன்
நிர்வாக தயாரிப்பு:அரவிந்த்ராஜ் பாஸ்கரன்
தயாரிப்பு நிறுவனம்: ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்
தயாரிப்பு:S.R.பிரகாஷ் பாபு, S.R.பிரபு.

Top actress returns to Tamil cinema after 2 decades

கமல் படத்திற்கு அப்புறம் ஹிப் ஆப் ஆதி படம் தான்.. – சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன்

கமல் படத்திற்கு அப்புறம் ஹிப் ஆப் ஆதி படம் தான்.. – சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக இளைஞர்களின் கனவு நாயகனாக வலம் வரும் நடிகர் ஹிப்ஹாப் ஆதி மீண்டும் இயக்குநராக களமிறங்கியிருக்கும் திரைப்படம் ‘சிவகுமாரின் சபதம்’. Inde Rebels நிறுவனத்துடன் இணைந்து SathyaJyothi Films சார்பில் TG தியாகராஜன், அர்ஜீன் தியாகராஜன், செந்தில் தியாகராஜன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

காதல், நட்பு, காமெடி கலந்த குடும்பங்கள் கொண்டாடும் பொழுது போக்கு திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம், செப்டம்பர் 30 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்

இந்நிகழ்வில் …

நடிகர் இளங்கோ குமணன் பேசியதாவது

மேடையும் மொழியும் புதிதல்ல ஆனால் சினிமா மேடை எனக்கு புதிது 20 வயதில் ஆசைப்பட்டதை 60 வயதில் நிறைவேற்றியுள்ளார் ஆதி அவருக்கு என் நன்றி. ஆதி அவர்கள் என்னை தொலைபேசியில் அழைத்து இந்த கதாப்பாத்திரம் குறித்து சொன்ன போது, இந்த கதாப்பத்திரத்திற்கு நான் பொருத்தமா என யோசித்து கொள்ளுங்கள், என்று சொன்னேன்.

என்னை மனதில் வைத்தே இந்த பாத்திரத்தை எழுதியதாக சொன்னார். அதனால் இதன் புகழ் அனைத்தும் அவரையே சாரும். தமிழ் படங்கள் தான் என் ஆசான். அவை தான் என் பொழுதுபோக்கு. இந்த திரைப்படம் ஒரு அட்டகாசமான பொழுதுபோக்கு படமாக இருக்கும் நன்றி.

தயாரிப்பாளர் TG தியாகராஜன் பேசியதாவது…

கோவிட் நம் வாழ்க்கையை மாற்றிவிட்டது. பட்டாசு திரைப்படத்திற்கு பிறகு, இப்போது மீண்டும் உங்கள் அனைவரையும் பார்ப்பது மகிழ்ச்சி. ஆதி படங்களை தியேட்டரில் பார்த்திருக்கிறேன். ‘நட்பே துணை’ படத்தை பார்த்தேன் மிகவும் பிடித்திருந்தது.

அந்த படத்தில் துணை கதாப்பத்திரங்களுக்கு கூட நிறைய வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தின் கதையை எனது மகன் தான் முழுதாக கேட்டார். அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. படம் முழுதாக முடிந்த பிறகு பார்த்தேன் இரண்டாம் பகுதி என்னை மிகவும் பாதித்தது ஆதியை மனமார பாராட்டினேன்.

மூன்றாம் பிறை படத்திற்கு பிறகு இந்தப்படம் தான் என்னை அதிகம் பாதித்தது. இந்த படத்தில் தாத்தாவாக வரும் குமணன் அட்டகாசமாக செய்துள்ளார். நெகட்டிவாக வரும் விஜய் கார்த்திக் மிக அழகாக செய்துள்ளார்.

நடிகத் கதிர் உடைய ஹீயுமர் நன்றாக வந்துள்ளது. அர்ஜூன் ராஜா ஒளிப்பதிவை, கொடுத்த பட்ஜெட்டில் அற்புதமாக செய்துள்ளார். ஆதி படத்தில் வரும் நாயகிகள் பெரிய அளவில் வெற்றி பெறுவார்கள் அது போல் மாதுரி ஜெயின் பெரிய அளவில் வெற்றி பெறுவார்.

கோவிடால் திரையரங்குகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. நல்ல படங்கள் தியேட்டரில் பார்த்தால் தான், நாம் அதை ரசிக்க முடியும். அதனால் தான் காத்திருந்து இப்படத்தை தியேட்டரில் வெளியிடுகிறோம். உங்கள் முழு ஆதரவை தாருங்கள் நன்றி.

நடிகர் ஆதித்யா கதிர் பேசியதாவது…

இப்படத்தில் அனைவரும் ஒரு குடும்பம் போலவே இருந்தோம். ஆதி என்னுடைய ரசிகர் என்று சொல்லி போன படத்தில் வாய்ப்பு தந்தார். இந்த படத்தில் பெரிய கேரக்டர் கொடுத்துள்ளார். மேலும் ஒரு பெரிய பொறுப்பு ஒன்றை கொடுத்தார். படப்பிடிப்பில் அனைவரையும் ஒருங்கிணைத்து அனைவரையும் அரவனைத்து செல்லும் பொறுப்பை தந்தார்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருந்தார்கள் அனைவருடனும் பழகியது நன்றாக இருந்தது. ஆதி அண்ணா ஒவ்வொரு காட்சியையும் செதுக்கியுள்ளார். இப்படம் ஜாலியாக சிரித்து குடும்பத்தோடு கொண்டாடும் படமாக இருக்கும். தியேட்டரில் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் பிராங்க்ஸ்டர் ராகுல் பேசியதாவது…

என்னுடய பிராங்க் பார்த்து ஆதி என்னை அழைத்து பேசினார். என்னை யாரோ பிராங்க் செய்கிறார்கள் என்றே நினைத்தேன். அப்புறம் அவர் அழைத்து இந்த கதாப்பத்திரம் குறித்து சொன்னார். 12 வருட கனவு நனவாகியுள்ளது.

இந்தபடத்தில் எனது பிராங்கை முழுதாக மறைத்து விட்டு, ஒரு நடிகனாக என்னை மாற்றினார். அவரது உழைப்பை படப்பிடிப்பில் பார்த்த போது பிரமிப்பாக இருந்தது. இந்தப்படத்தை அனைவரும் பாருங்கள் பிடிக்கும் நன்றி.

நடிகர் விஜய் கார்த்திக் பேசியதாவது…

இந்த மேடையில் இன்று நான் இருக்க காரணம் ஆதி தான். 30 வருட முயற்சி ஆதியால் தான் நிறைவேறியது. அவரின் தீவிர ரசிகன். ஒரு நாளில் கூப்பிட்டு நடிக்க சொல்லி, அன்றே நான் இந்தப்படத்தில் நடிக்கிறேன் என்று சொன்னார்கள். அதற்கு ஆதிக்கு நன்றி.

இதே சத்யஜோதி வாசலில் பலமுறை வாய்ப்பு கேட்டு போயிருக்கிறேன். ஆனால் இன்று தயாரிப்பாளர் வாயால் என்னை பாராட்டியது கேட்டபோது மிக மகிழ்ச்சியாக இருந்தது. இவையனைத்துக்கும் ஆதிக்கு நன்றி.

ஒளிப்பதிவாளர் அர்ஜூன் ராஜா பேசியதாவது…

இன்று மேடையில் நான் வந்ததற்கு ஆதி தான் காரணம், அவர் கதை சொன்ன போதே, ஒரு பார்வையாளனாக நான் ரசித்து கேட்டேன். இது நம் கண்முன் தினமும் நடக்கும் கதை. நிறைய விவாதித்து இந்தபடத்தை உருவாக்கினோம்.

முழுப்படத்தையும் 35 mm, 50 mm லென்ஸில், அதாவது மனிதனின் கண் பார்வையுடய பெர்ஸ்பெக்டிவில் செய்துள்ளோம். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறோம் நன்றி.

படத்தொகுப்பாளர் துவாரகநாத் பேசியதாவது…

இப்படத்தில் வேலை செய்யும் முன்னர் ஆதி நிறைய பரிசோதனை முயற்சிகள் செய்வார். நானும் அப்படித்தான் என்பதால் அவருடன் வேலை செய்வது எளிதாக இருந்தது. ஒரு சில காட்சிகளை கட் செய்தால், பல இயக்குநர்கள் கோபப்படுவார்கள்.

ஆனால் ஆதி அதில் தெளிவாக இருந்தார். படத்தில் தேவையில்லை எனில் கட் செய்து விடுங்கள் என்றார். ஆதி ஹிரோயினை அறிமுகம் செய்வதில் முன்னணியில் இருக்கிறார். மாதுரி இப்படத்தில் அசத்தியுள்ளார். இது ஒரு குடும்ப படம், இந்தப்படம் எல்லோருக்கும் கண்டிப்பாக பிடிக்கும் நன்றி.

நாயகி மாதுரி ஜெயின் பேசியதாவது

இது எனது முதல் படம். அழகான கதை எழுதியதற்கும், எனக்கு வாய்ப்பு தந்ததற்கும் ஆதிக்கு நன்றி. சத்ய ஜோதி தயாரிப்பில் அறிமுகமானது எனக்கு பெருமை. என்னை அழகாக காட்டிய ஒளிப்பதிவாளருக்கு நன்றி. ஆதி தலையில் ஒரு கர்ச்சிஃப் கட்டியிருப்பார் அப்படி கட்டியிருந்தால் அவர் இயக்குநராக இருப்பார், மற்ற நேரத்தில் நடிகராக இருப்பார்.

இந்த படமே ஒரு குடும்பத்துடன் பழகியது போல இருந்தது. எல்லா நடிகர்களுமே நண்பர்களாக மாறிவிட்டனர். இந்தப்படம் அனைவரையும் சிரிக்க வைக்கும் படமாக இருக்கும் பாருங்கள் பிடிக்கும் நன்றி.

நடிகர், இயக்குநர் ஆதி பேசியதாவது..

நிறைய பேருக்கு இது முதல் மேடை, அவர்கள் உணர்ச்சிகரமாக பேசியது படம் பார்க்கும் போது உங்களுக்கு புரியும். அவர்கள் எதிர்பார்ப்புடன் இருப்பதை பார்க்க எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. சத்யஜோதி மிகப்பிரமாண்டமாக “அன்பறிவு” படத்தை எடுத்தார்கள். பொதுமுடக்கத்தால் அது கொஞ்சம் தள்ளிப்போனது. அந்த நேரத்தில் காஞ்சிபுரம் போயிருந்தேன், அங்கு கிடைத்த அனுபவத்தால் தான் இந்தக்கதையை எழுதினேன்.

இந்தப்படம் நட்சத்திரங்களை வைத்து எடுக்கப்பட்ட படம் அல்ல. என் தயாரிப்பாளர் ரிஸ்க் வேண்டாம் என்றார் ஆனால் என் நடிகர்கள் மீது நம்பிக்கை வைத்து இப்படத்தை எடுக்க ஆரம்பித்தோம்.

இந்தப்படத்திற்கு புதுமுகங்கள் தான் சரியாக இருப்பார்கள் என்று தோன்றியது. இந்தப்படம் வெற்றியடையும்போது இந்த நடிகர்கள் பற்றி அனைவரும் தெரிந்து கொள்வார்கள். சத்ய ஜோதி தியாகராஜன் அவர்களுக்கு இந்தப்படத்தை தயாரித்ததற்கு நன்றி. இந்தப்படத்தில் Inde rebels உடன் இணைந்து தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறேன்.

துணிந்தே ரிஸ்க் எடுத்து எடுத்துள்ளோம். இரண்டே நாளில் லென்ஸில் படத்தை ஒளிப்பதிவு செய்த அர்ஜூன்ராஜா அவர்களுக்கு நன்றி. கோல்ட் மெடல் வாங்கிய படத்தொகுப்பாளர் தீபக் S. துவாரகநாத் அட்டகாசமாக செய்துள்ளார்.

இந்தப்படத்தில் ஆர்ட் மிக முக்கியமானது அதை அட்டகாசமாக செய்து தந்த வாசு தேவனுக்கு நன்றி. தமிழ் தெரிந்த ஹீரோயின், அவர் பாண்டிச்சேரி தமிழ்ப்பெண் ஒரு மாதம் எங்களுடன் இணைந்து ரிகர்சல் செய்தார். திரையில் இப்போது அதை பார்க்க நன்றாக இருக்கிறது. இந்தப்படம் தியேட்டரில் அமர்ந்து பார்க்க வேண்டிய படம். நான் கேட்டுக்கொண்டதை மதித்து, திரையரங்கில் படத்தை கொண்டுவந்த தயாரிப்பாளருக்கு நன்றி. ஒரு மிடில்கிளாஸ் பையனின் உணர்வுபூர்வமான பயணம் தான் இப்படம். எல்லோருக்கும் பிடிக்கும், குடும்பங்கள் கொண்டாடும் படமாக இப்படம் இருக்கும். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

ஹிப்ஹாப் தமிழா இப்படத்திற்கு இசையமைப்பதோடு, கோ சேசாவுடன் இணைந்து பாடல்கள் எழுதியுள்ளார். அர்ஜூன்ராஜா ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் குமார் ஆக்சன் காட்சிகள் அமைத்துள்ளார்.

தீபக் S. துவாரகநாத் படத்தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்கம் K வாசு தேவன் செய்துள்ளார். இப்படம் செப்டம்பர் 30 முதல் உலகமெங்கும் திரையரங்குகள் வெளியாகிறது.

Sathya Jyothi films Thyagarajan praises Hiphop Aadhi

தமிழுக்கு 1… தெலுங்குக்கு 1..; ஒரே மேடையில் இரண்டு விருதுகளை அள்ளிய ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழுக்கு 1… தெலுங்குக்கு 1..; ஒரே மேடையில் இரண்டு விருதுகளை அள்ளிய ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் எனப்படும் சைமா விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.
2019, 2020ஆம் ஆண்டுகளுக்கான சைமா விருது விழா ஹைதாராபாத்தில் நடைபெற்றது.

இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன.

தமிழில் வெளியான க/பெ.ரணசிங்கம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை ஐஸ்வர்யா ராஜேஷ் பெற்றுள்ளார்.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அவர் நடித்த இந்தத் திரைப்படம் கரோனா ஊரடங்கு காரணமாக ஓடிடியில் வெளியானது. மிகவும் உருக்கமான, நெகிழ்ச்சியான இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு அனைவராலும் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், இத்திரைப்படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் திரைப்படத்துக்காக விமர்சகர்கள் தேர்வாக சிறந்த நடிகை விருதைப் பெற்றுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் இயக்குனர் க்ரந்தி மாதவ் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ஐஸ்வர்யா ராஜேஷ், கேத்தரின் தெரசா, ராஷி கண்ணா நடித்துள்ள தெலுங்கு திரைப்படம்.

காதல் திரைப்படமான இது விமர்சன ரீதியாவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இந்தத் திரைப்படத்திற்கு அவருக்கு விருது கிடைத்துள்ளது.

ஒரே விழா மேடையில் இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளதால் சைமா விருதுக் குழுவுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் நன்றி தெரிவித்துள்ளார்.

Actress Aishwarya rajesh bags 2 awards at SIIMA awards 2021

More Articles
Follows