‘தளபதி 65’ படத்தில் விஜய்யுடன் ஜோடி போடும் தெலுங்கு நடிகை

‘தளபதி 65’ படத்தில் விஜய்யுடன் ஜோடி போடும் தெலுங்கு நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thalapathy 65விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 65’ படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.

‘கோலமாவு கோகிலா’ என்ற வெற்றிப் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து, ‘டாக்டர்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார் நெல்சன்.

இந்த நிலையில் தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே ‘தளபதி 65’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இவர் ஏற்கனவே தமிழில் மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அண்மையில் சூப்பர்ஹிட்டான ‘புட்ட பொம்மா’ பாடலில் அல்லு அர்ஜுனுடன் நடனம் ஆடியவரே பூஜா.

மேலும் பிரபாஸுடன் ‘ராதே ஷ்யாம்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே.

Famous telugu actress is part of Thalapathy 65

அனைத்து இல்லத்தரசிகளுக்கும் அரசு சம்பளம்..; கமலின் யோசனைக்கு ஜெயலலிதா கண்டனம்

அனைத்து இல்லத்தரசிகளுக்கும் அரசு சம்பளம்..; கமலின் யோசனைக்கு ஜெயலலிதா கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்.

பிரச்சாரத்தின் போது… “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதச் சம்பளம் வழங்கப்படும்” என்றார்.

இது நிறைய இல்லத்தரசிகளின் பாராட்டைப் பெற்றது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சசி தரூர் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளார்.

வீட்டு வேலையையும் ஒரு பணியாக அங்கீகரித்து அவற்றை செய்யும் பெண்களுக்கு அரசாங்கமே சம்பளம் தருவது நல்ல யோசனை என பாராட்டி இருந்தார்.

ஆனால் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கமல்ஹாசனின் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து கங்கனா கூறுகையில்….

எங்கள் குடும்பத்தாருக்கு பணிவிடை செய்ய விலை..? நாங்கள் தாயைப் போல கவனித்து கொள்வதற்கு ஊதியம் தர வேண்டாம்.

எங்கள் மாளிகையில் இல்லத்து அரசிகளாக இருப்பதற்கு கூலி தேவையில்லை. இதை வியாபாரமாக பார்க்க வேண்டாம்

உங்களை எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள். அதற்கு பதிலாக எங்கள் எதிர்பார்ப்பு எல்லாம் அன்பும் மரியாதை மட்டும்தான்” என கூறியுள்ளார்.

விஜய் இயக்கும் ஜெயலலிதாவின் வாழ்க்கை படமான ‘தலைவி’ படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் தான் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

kangana Thalaivi

Thalaivi heroine opposes Kamal Haasan’s idea to make household work a paid job

மறைந்த நடிகை சித்ரா கணவர் ரூ 1 கோடி மோசடி வழக்கில் மீண்டும் கைது

மறைந்த நடிகை சித்ரா கணவர் ரூ 1 கோடி மோசடி வழக்கில் மீண்டும் கைது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vj chithra husband photosடிவி நடிகை விஜே. சித்ரா கடந்தாண்டு டிசம்பர் 9 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவருக்கு தொழிலதிபர் ஹேமந்துடன் பதிவு திருமணம் நடந்த நிலையில் திருமணமாகி இரண்டே மாதத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதனால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இதில் சித்ராவின் தற்கொலைக்கு கணவர் ஹேமந்த்தை போலீசார் கைது செய்தனர்.

பொன்னேரி கிளை சிறையில் அடைக்கப்பட்டு. பின்னர் அங்கிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக கூறி இரண்டு பேரிடம் ரூ.1 கோடி மோசடி செய்துள்ளார் ஹேமந்த்.

இந்த வழக்கிலும் தற்போது ஹேமந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவ சீட்டு மோசடி குறித்து 2015இல் அளிக்கப்பட்ட புகாரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

VJ Chithra husband arrested in one more case

தியேட்டர்களில் 100% சீட்… சினிமா வைரஸ் பரவல்…; நடிகைகள் குஷ்பூ-கஸ்தூரி மோதல்

தியேட்டர்களில் 100% சீட்… சினிமா வைரஸ் பரவல்…; நடிகைகள் குஷ்பூ-கஸ்தூரி மோதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kasthuri khushbooகொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த 2020 மார்ச் மாதம் 17ந் தேதி தியேட்டர்கள் மூடப்பட்டன.

கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு பிறகு கடந்தாண்டு நவம்பர் 10 முதல் தமிழக அரசு தளர்வுகளை அறிவித்து திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்தது.

50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்க வேண்டும் என்று நிபந்தனையுடன் அனுமதியளிக்கப்பட்டது.

எனவே இரண்டு இருக்கைகளுக்கு நடுவில் உள்ள இருக்கையில் ரிப்பன் கட்டியும் இருக்கையில் தடுப்பு வைத்தும் தடுத்து வைத்தும் தியேட்டர்கள் இயங்கி வந்தன.

இதனால் சிறிய படங்கள் மட்டுமே தியேட்டர்களில் ரிலீசாகின.

இந்த நிலையில் 100% இருக்கைகளுக்கு அனுமதியளிக்க வேண்டும் என விஜய், சிம்பு உள்ளிட்ட திரையுலகினர் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்

இவர்கள் கோரிக்கை வைத்த நிலையில் தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

இதனால் தமிழ் திரைத்துறையினர் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த அனுமதிக்கு எதிராக சிலர் விமர்சனங்களையும் முன் வைத்துள்ளனர்.

நடிகை கஸ்தூரி… ” தியேட்டர்களில் 100 சதவீத இருக்கை அனுமதிக்கப்படுவது ஆபத்தான ஒன்று. ஒரு சினிமாக்காரி ஆக சிந்திக்கவில்லை.

‘கொரோனா வைரஸை சைனா வைரஸ் என்று அழைக்கிறோம். இந்த அனுமதியால் சினிமா வைரஸ் என்ற பெயரை நாம் பெற வேண்டுமா? இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வரையும் திரையுலகையும் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

நடிகை குஷ்பு….

“தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டது குறித்து மாற்றுக் கருத்து உடையவர்களுக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.

நீங்கள் தியேட்டருக்கு சென்றால் கொரோனா பரவும் என்று கவலைப்பட்டால் தியேட்டருக்கு செல்ல வேண்டாம். உங்கள் பயம் புரிகிறது.. உங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை’ என கூறியுள்ளார்.

இதனையடுத்து நடிகை கஸ்தூரி… ‘நான் மக்களை பற்றி கவலைப்படுகிறேன். அவர்கள் உடல் நலன் முக்கியம் என நினைக்கிறேன்.

தியேட்டருக்கு செல்பவர்களால், வீட்டில் இருப்பவர்கள் கூட பாதிக்கப்படுவார்கள். நட்சத்திர ஓட்டல்களிலேயே பாதிக்கப்படும்போது தியேட்டர்களால் எப்படி பாதுக்காக்க முடியும்? என கேட்டுள்ளார்.

khushboo and kasthuri fight in social media

ஜனவரி 10ல் ரஜினி ரசிகர்கள் அறவழிப் போராட்டம்..; காவலர்கள் கலந்து கொள்ள கூடாது என ரஜினி மக்கள் மன்றம் எச்சரிக்கை

ஜனவரி 10ல் ரஜினி ரசிகர்கள் அறவழிப் போராட்டம்..; காவலர்கள் கலந்து கொள்ள கூடாது என ரஜினி மக்கள் மன்றம் எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanthஇப்போ இல்ல… எப்பவுமே அரசியலுக்கு வரமாட்டேன் என அறிவித்துவிட்டார் நடிகர் ரஜினிகாந்த்.

அந்த அறிவிக்கு வெளியான அன்றே, ரஜினி வீட்டு முன்பு ரசிகர்கள் ஒன்றுதிரண்டு கோஷங்களை எழுப்பி ரஜினியை அரசியலுக்கு அழைத்தனர்.

மேலும் தமிழகமெங்கும் பெரும்பாலான ரஜினி ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

வருகிற ஜனவரி 10-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் அறவழிப் போராட்டத்துக்கு ரஜினி ரசிகர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த செய்தியை நம் தளத்தில் பார்த்தோம்.

இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என்று ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக ரஜினி மக்கள் மன்றத்தின் வடசென்னை மாவட்டச் செயலாளர் ஈ.சந்தானம் விடுத்துள்ள அறிக்கையில்…

“நம் தலைவரின் அரசியல் நிலைப்பாட்டை எதிர்த்து சிலர் 10.01.2021 அன்று வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர் என்ற தகவல் தெரியவருகிறது.

அக்கூட்டத்தில் நம் மாவட்டத்தைச் சார்ந்த மாவட்ட, பகுதி, வட்ட பிற அணி மற்றும் நம் மக்கள் தலைவரின் உண்மையான காவலர்கள் யாரும் கலந்துகொள்ளக் கூடாது, மீறிக் கலந்துகொள்பவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

Rajini Makkal Mandram warns Rajinikanth fans

நான் சொன்னதை ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் காட்டவில்லை..; விரைவில் புதிய ப்ளான்.. ; அனிதா அப்டேட்

நான் சொன்னதை ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் காட்டவில்லை..; விரைவில் புதிய ப்ளான்.. ; அனிதா அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

anitha sampath bigg boss‘பிக்பாஸ் 4’ சீசனில் பங்கேற்ற அனிதா சம்பத் 84 நாட்களுக்கு பிறகு வெளியேறினார்.

அதன்பிறகு அவரது தந்தை மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் அனிதா சம்பத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்…,

“’நான் பிக்பாஸ் வீட்டில் கேப்டனாக இருந்தபோது முக்கிய தலைப்புகளில் பேசினேன். ஆனால் அவை ஒளிபரப்பப்படவில்லை.

திங்கள் கிழமை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பற்றியும், செவ்வாய்க்கிழமை திருநங்கைகளின் தரம் உயர்வது பற்றியும், புதன்கிழமை பிச்சை எடுப்பவர்கள் இல்லாத மாநிலமாக மாற்றுவது குறித்தும், வியாழக்கிழமை விவசாயம் பற்றியும், வெள்ளிக்கிழமை விதவைகளின் மறுமணம் பற்றியும் பேசி இருந்தேன். ஆனால் இவை எதுவுமே நிகழ்ச்சியில் ஒளிபரப்பவில்லை.

எனவே சமூகவலைதளங்கள் மூலம் விரைவில் இது குறித்து பேசவிருக்கிறேன்.

இதற்காக எனக்கு சில நபர்கள் தேவைப்படுகிறார்கள்.

என்னுடன் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.

பிப்ரவரியில் இருந்து நாம் தொடங்குவோம்” என அனிதா சம்பத் தெரிவித்துள்ளார்.

Anitha opens up about ‘Bigg Boss 4’ deleted content in social medias

More Articles
Follows