வாணி ராணி சீரியல் இயக்குனரின் மனைவி தற்கொலை. என்ன காரணம் ?

வாணி ராணி சீரியல் இயக்குனரின் மனைவி தற்கொலை. என்ன காரணம் ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் டிவியில் ஒளிபரப்பான ‘அழகு’ மற்றும் ‘வாணி ராணி’ சீரியல்களை இயக்கியவர் ஓ.என்.ரத்னம்.

ரத்னத்தின் மனைவி பிரியா திடீரென தூக்குப்போட்டு இறந்தது தொலைக்காட்சி துறையையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. . இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

குழந்தைகள் பொள்ளாச்சியில் உள்ள தாத்தா, பாட்டி வீட்டிற்கு சென்றுவிட்டு இன்று திரும்பி வந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ரத்னம் அவர்களை பஸ் ஸ்டாண்டில் இருந்து அழைத்து வருவதற்காக காலையில் சென்றிருந்தார், அவர் திரும்பி வரும்போது ப்ரியா தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

Famous Tamil serial director’s wife dies by suicide

ரகுமான் பாடலை பாடி பிறந்த நாளை கொண்டாடிய ஆதரவற்றோர் ரசிகைகள்

ரகுமான் பாடலை பாடி பிறந்த நாளை கொண்டாடிய ஆதரவற்றோர் ரசிகைகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 40 வருடங்களாக மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருப்பவர் நடிகர் ரகுமான்.

இரண்டு மொழிகளிலுமே இவருக்கென ஒரு ரசிகர் வட்டம் தனியாக இருக்கின்றது.

அதிலும் பாலசந்தர் இயக்கிய ‘புதுப்புது அர்த்தங்கள்’ என்ற படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் இன்றளவும் ரகுமான் ரசிகர்களின் ஃபேவரைட் பாடலாக உள்ளது.

குறிப்பாக 1990களில் அதிக இளம்பெண் ரசிகைகளை கொண்டவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான ‘துருவங்கள் 16’ படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இவரது திரையுலக பயணம் டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது.

சமீபத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த மதுராந்தகர் இவரது கதாபாத்திரமும் கிளைமாக்ஸில் அவரது கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்தி படம் முடிவதும் தமிழ் சினிமாவில் இப்போதும் நடிகர் ரகுமானுக்கான முக்கியத்துவத்தை பறைசாற்றுவது போல அமைந்துவிட்டது.

நடிகர் ரகுமான் தற்போது தனது 55வது வயதில் அடி எடுத்து வைத்துள்ளார். பொதுவாகவே மலையாள திரையுலகில் நடிகர்களின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம்.

அந்த வகையில் ரகுமானின் ரசிகர்கள் அவரது பிறந்த நாளை சற்றே வித்தியாசமான முறையில் பிறருக்கு பயனுள்ள வகையில் கொண்டாடி அசத்தியுள்ளனர்.

கேரளாவில் திருச்சூர் பகுதியில் உள்ள ஒரு ஆதரவற்றோர் பெண்கள் இல்லத்தில் நடிகர் ரகுமானின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர்.

அந்த ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடனும் சேர்ந்து கேக் வெட்டி நடிகர் ரகுமானின் பிறந்த நாளை கொண்டாடினர். மேலும் அனைவருக்கும் இனிப்பு மற்றும் உணவு வழங்கி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

நடிகர் ரகுமானின் பிறந்தநாள் என்றதுமே அங்கிருந்த பெண்கள் பலர் உணர்ச்சிவசப்பட்டு அவர் நடித்த படங்களின் பாடல்களை பாடி அவருக்கு எங்கும் ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதை உணர்த்தினார்கள்.

அதில் ஒரு முதிய பெண்மணி அங்கிருந்த ரசிகர் மன்ற தலைவரிடம் தான் ரகுமானிடம் பேச விரும்புவதாக கோரிக்கை வைக்க, உடனடியாக இந்த தகவல் நடிகர் ரகுமானுக்கு தெரிவிக்கப்பட்டது.

அடுத்த நிமிடமே வீடியோ காலில் வந்த ரகுமான் அங்கிருந்த ஒவ்வொருவருடனும் பேசி நலம் விசாரித்தார். அனைவரும் அவருக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இன்னொரு பெண்மணி ரகுமானின் பேரக்குழந்தையை பார்க்க வேண்டும் என விரும்ப தனது வீட்டில் அடுத்த அறையில் இருந்த குழந்தையை தூக்கி வந்து வீடியோ காலில் காட்டி அந்த பெண்மணியின் ஆசையை நிறைவேற்றினார் ரகுமான்.

இதேபோல கேரளாவில் பல இடங்களில் நடிகர் ரகுமானின் ரசிகர்கள் பலருக்கும் பலவிதமான சமூக உதவிகளை செய்து அவரது பிறந்த நாளை கொண்டாடினார்கள்.

Fans celebrated his birthday by singing Rahman song

ரஹ்மான் இசையில் தனுஷ் இயக்கத்தில் சூர்யா.; முழு தகவல்கள் இதோ..

ரஹ்மான் இசையில் தனுஷ் இயக்கத்தில் சூர்யா.; முழு தகவல்கள் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருப்பவர் நடிகர் தனுஷ்.

மேலும் நடிப்பதோடு மட்டுமில்லாமல் தயாரிப்பாளர் பாடகர் பாடலாசிரியர் என பன்முகத் திறமை காட்டி வருகிறார்.

இத்துடன் பவர் பாண்டி என்ற படத்தை இயக்கி தன்னை ஒரு இயக்குனராகவும் அடையாளப்படுத்திக் கொண்டார்.

இந்த நிலையில் தனுஷ் தன்னுடைய சினிமா பயணத்தில் 50 வது படத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார்.

தற்போது இந்த படத்தை தனுஷ் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பிரபல தென்னிந்திய நட்சத்திரங்களை இந்த படத்தில் நடிக்க வைக்க தனுஷ் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், விஷ்ணு விஷால், சந்தீப் கிஷன், காளிதாஸ் உள்ளிட்டோர் நடிப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.

இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதால் விரைவில் இது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

Dhanush and AR Rahman joins for a new film

பிறந்தநாளில் தங்கத்தில் ஜொலிக்கும் கார்த்தி; ஜப்பான் யார்? சிம்பு சொல்வார்.!

பிறந்தநாளில் தங்கத்தில் ஜொலிக்கும் கார்த்தி; ஜப்பான் யார்? சிம்பு சொல்வார்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2022 ஆம் ஆண்டில் விருமன், பொன்னியின் செல்வன் 1, சர்தார் என மூன்று வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகர் கார்த்தி.

இந்த ஆண்டு 2023 ‘பொன்னியின் செல்வன் 2’ வெளியானது.

இதனையடுத்து கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜப்பான்’ திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகவுள்ளது.

ராஜூ முருகன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இன்று மே 25ஆம் தேதி நடிகர் கார்த்தி பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது படக்குழு.

இந்த ஆண்டு தீபாவளிக்கு படம் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

இது தொடர்பான போஸ்டரில் நடிகர் கார்த்திக் தங்கத்தால் ஜொலிப்பது போல டிசைன் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தில் ஜப்பான் யார் என்பதை நடிகர் சிம்பு இன்று காலை 11 மணிக்கு வெளியிடுவார் என அறிவித்துள்ளனர்.

அனு இமானுவேல் நாயகியாக நடிக்கிறார். தெலுங்கில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, நாயகனாக வலம் வரும் சுனில், இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தவிர இயக்குநர் விஜய் மில்டன் இப்படத்தில் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்

Karthi shining in gold on his birthday; Who is Japan? Simbu will say.!

ரஜினிகாந்த் – பாலைய்யா – சிவராஜ்குமார் இணையும் புதிய படம்.; இயக்குநர் யார்.?

ரஜினிகாந்த் – பாலைய்யா – சிவராஜ்குமார் இணையும் புதிய படம்.; இயக்குநர் யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினிகாந்த் மோகன்லால் சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட தென்னி(இ)ந்திய சூப்பர் ஸ்டார்கள் நடித்து வருகின்றனர்.

இவர்கள் மூவரும் இணைவதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு இந்திய அளவில் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் விரைவில் தொடங்கப்பட உள்ள ஒரு புதிய படத்தில் ரஜினிகாந்த் பாலகிருஷ்ணா மற்றும் சிவராஜ்குமார் ஆகிய மூவரும் இணையஉள்ளதாக ப தகவல்கள் வந்துள்ளன.

இந்த படத்தை கன்னடத்தின் பிரபல இயக்குனர் ஒருவர் இயக்குவார் எனவும் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகும் எனவும் கூறப்படுகிறது.

முதல் பாகம் முழுவதும் சிவராஜ்குமாரும் இரண்டாம் பாகத்தில் பாலகிருஷ்ணா மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் இணைவார்கள் என கூறப்படுகிறது.

ஆனால் இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை..

எனவே காத்திருப்போம்.!

Rajinikanth next film with Shiva Rajkumar and Bala Krishna

விஷால் – ஹரி – கார்த்திக் சுப்புராஜ் இணையும் பட சூட்டிங் ஹாட் அப்டேட்

விஷால் – ஹரி – கார்த்திக் சுப்புராஜ் இணையும் பட சூட்டிங் ஹாட் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா இணைந்து நடித்துள்ள ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்த படத்தை முடித்துவிட்டு விரைவில் ஹரி இயக்கத்தில் நடிக்க உள்ளார் விஷால்.

இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் ஸ்டோன் பென்ச் நிறுவனமும் ஜீ ஸ்டுடியோ நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இது பற்றிய அறிவிப்பு ஏற்கனவே வெளியானாலும் இதுவரை ஷூட்டிங் தொடங்கப்படவில்லை.

இந்த நிலையில் ஜூன் முதல் வாரத்தில் இதன் படப்பிடிப்பு துவங்கும் எனக் கூறப்படுகிறது. இது விஷால் நடிக்கும் 34வது படமாகும்.

இதில் முக்கிய வேடத்தில் யோகி பாபு நடிக்கிறார். விரைவில் மற்ற கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

விரைவில் இப்படத்தின் கிளிப்ஸ் வெளியாகும் எனவும் தென்னிந்தியாவில் இதன் படப்பிடிப்பு நடைபெறும் எனவும் தகவல்கள் வந்துள்ளன.

Vishal – Hari – Karthik Subbaraj movie shooting hot update

More Articles
Follows