ஆங்கில படத்திற்காக 50 நாட்கள்..; அமெரிக்கா பறக்கும் ஹாலிவுட் நடிகர் தனுஷ்

Dhanush‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் பகிர்’ என்ற ஆங்கில படத்தில் சில ஆண்டுகளுக்கு முன் நடித்திருந்தார் தனுஷ்.

கென் ஸ்காட் இயக்கிய இந்த படத்தில் தனுசுடன் பெர்னிக் பிஜோ, பர்கத் அப்டி, எரின் மொராரிட்டி உள்பட பலர் நடித்து இருந்தனர்.

அதே படம் அதன் பின்னர் ‘பக்கிரி’ என்ற பெயரில் தமிழில் வெளியானது.

இதனையடுத்து ஹாலிவுட்டில் அவரின் 2வது படமாக ‘தி க்ரே மேன்’ உருவாகவுள்ளது.

ரூஸோ சகோதரர்கள் இயக்கும் ‘தி க்ரே மேன்’ படத்தில் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் கிறிஸ் ஈவான்ஸ், ராயன் காஸ்லிங் ஆகிய முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க உள்ளார்.

இந்த நிலையில், இப்பட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இதில் பங்கேற்க தனுஷ் நாளை (பிப்ரவரி 10) அமெரிக்கா செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது.

‘தி க்ரே மேன்’ பட படப்பிடிப்பை முடித்துவிட்டு, ‘தனுஷ் 43′ படக்குழுவினரோடு மே மாதத்தில் இணைவார் தனுஷ் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர் திரும்பி இந்தியா வருவதற்குள் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ & கர்ணன் படங்கள் ரிலீசானாலும் ஆச்சரியமில்லை.

Exclusive updates on Dhanush’s Hollywood movie

Overall Rating : Not available

Related News

Latest Post