‘ரஜினி தலையில் ஒன்னுமில்ல…’ முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு

‘ரஜினி தலையில் ஒன்னுமில்ல…’ முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ex Supreme Court Judge Markandey Katju oppose Rajinis entry in politicsகடந்த 25 வருடங்களாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

சில தினங்களுக்கு முன் பேசிய ரஜினியோ, தான் அரசியலுக்கு வர விருப்பம் உள்ளதை போல மறைமுகமாக தெரிவித்திருந்தார்.

இதனால் பலரும் பலவிதமாக பேசி வருகின்றனர்.

ஒரு சிலர் ரஜினியின் அரசியல் வருகையை ஆதரித்தும், சிலர் எதிர்த்தும் பேசி வருகின்றனர்.

இதுகுறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தன் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

மார்க்கண்டேய கட்ஜுவின் முகநூல் பதிவில் அவர் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.

அதில்…

‘தென்னிந்தியர்கள் மீது எனக்கு மதிப்பு அதிகம். ஆனால், அவர்கள் நடிகை, நடிகர்கள் மீது முட்டாள்தனமான பக்தி வைத்திருப்பதுதான் எனக்குக் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

ஏன் இப்படி சினிமா நட்சத்திரங்களை மிகைப்படுத்துகிறார்கள்?

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்தபோது, தமிழ் நண்பர்களுடன் சேர்ந்து சிவாஜி கணேசனின் படம் ஒன்றைப் பார்க்கச் சென்றேன்.

படத்தின் துவக்கத்தில், சிவாஜி கணேசனின் காலை மட்டும்தான் காட்டினார்கள். அதற்கே ரசிகர்கள் அரங்கையே அதிரவைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ரஜினிகாந்த் ரசிகர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். ரஜினிகாந்த் ஏன் முதல்வர் ஆக வேண்டும்… அவர் ஏன் ஜனாதிபதி ஆக வேண்டும்?

வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, பசி, பட்டினி. இதற்கெல்லாம் ரஜினியிடம் தீர்வு உள்ளதா? ரஜினியிடம் ஒன்றுக்கும் தீர்வு இல்லை என்று நினைக்கிறேன்.

அமிதாப்பச்சன் போன்று ரஜினி தலையிலும் ஒன்றும் இல்லை’ என்று பதிவிட்டுள்ளார்.

Ex Supreme Court Judge Markandey Katju oppose Rajinis entry in politics

Ex Supreme Court Judge Markandey Katju oppose Rajinis entry in politics

அஜித்துக்காக ஓர் ஆப்பு கதை; அல்போன்ஸ் புத்திரனின் ஆசை இது

அஜித்துக்காக ஓர் ஆப்பு கதை; அல்போன்ஸ் புத்திரனின் ஆசை இது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Premam Director Alphonse Puthrens dream is to direct Ajithநேரம் மற்றும் பிரேமம் என இரண்டே இரண்டு படங்கள்தான் இயக்கியுள்ளார் அல்போன்ஸ் புத்திரன்.

ஆனால் அதற்குள் இளைஞர்களிடையே படு பாப்புலராகிவிட்டார் இவர்.

இந்நிலையில் அஜித்தை இயக்க ஆசைப்பட்டேன் என தன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது…

ஒன்பது, 10 ஆண்டுகளுக்கு முன்பு நான் நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.ஏ.இ. கல்லூரியில் படித்தபோது நானும் என் நண்பர் ஐபி கார்த்திகேயனும் அஜீத்தை பார்க்க அவர் வீட்டுக்கு சென்றோம்.

அஜீத் வீட்டு வாசலில் 3 மணிநேரம் காத்து கிடந்தும் அவரை பார்க்க முடியவில்லை.

ஒருவேளை அந்த காத்திருப்பு சிறந்த படத்திற்காக என்று நான் நினைக்கிறேன்.

ஒன்ஸ் அபான் எ டைம் இன் அமெரிக்கா படத்தை பார்த்து, அது போன்ற கதையில் அஜித்தை இயக்க ஆசைப்பட்டேன்.

அப்படத்திற்கு நான் வைத்த தலைப்பு ‘ஆப்பு- 100 சதவீதம் கேரன்டி’ என்று தெரிவித்துள்ளார்.

Premam Director Alphonse Puthren’s dream is to direct Ajith

ரஜினிக்கு அடுத்து விஜய்யை தேர்ந்தெடுத்த சன் நிறுவனம்

ரஜினிக்கு அடுத்து விஜய்யை தேர்ந்தெடுத்த சன் நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sun Pictures selected Vijay after Rajinikanthடிவி உலகில் இந்தியளவில் பிரபலமான நிறுவனம் சன் டிவி.

இந்த நிறுவனம் கடந்த 2008ஆம் ஆண்டு காதலில் விழுந்தேன் என்ற படத்தை விநியோகம் செய்து திரையுலகில் காலடி வைத்தது.

அதனைத் தொடர்ந்து விஜய் நடித்த வேட்டைக்காரன் மற்றும் சுறா, அஜித் நடித்த மங்காத்தா, சூர்யா நடித்த அயன் உள்ளிட்ட 23 படங்களை சன் பிக்சர்ஸ் விநியோகம் செய்துள்ளது.

ஆனால் அந்நிறுவனம் தயாரித்த ஒரே படம் ரஜினி-ஷங்கர் கூட்டணியில் உருவான எந்திரன் தான். இப்படம் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியானது.

தற்போது 7 வருடங்களுக்கு பிறகு விஜய், ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகவுள்ள தளபதி62 படத்தை தயாரிக்க முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Sun Pictures selected Vijay after Rajinikanth

ரஜினி-ரஞ்சித் படத்தில் ஆஸ்கர் விருது பெற்ற கலைஞர்

ரஜினி-ரஞ்சித் படத்தில் ஆஸ்கர் விருது பெற்ற கலைஞர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Oscar Winner join with Pa Ranjith in Thalaivar Rajini movie2.0 படத்தை முடித்துவிட்டு தனது அடுத்த படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த்.

தனுஷ் தயாரித்து, ரஞ்சித் இயக்கவிருக்கும் இதன் சூட்டிங் மே 28ஆம் தொடங்கவுள்ளது.

இதில் ரஜினியின் ஜோடியாக பாலிவுட் நடிகை ஹீமா குரோஷிமா நடிக்கிறார்.

இப்படத்தில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் அதிகம் இடம்பெறவுள்ளதாக சொல்லப்படுகிறது.

எனவே, Life of Pi படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்றவரும், பாகுபலி-2 படத்தில் VFX பணிகளை செய்தவருமான பெட்டா டிராப்பர் இணைகிறாராம்.

Oscar award Winner joins with Pa Ranjith in Thalaivar Rajini movie

கமலுக்கு பிடிக்காத அந்த 3 விஷயங்கள் என்ன தெரியுமா.?

கமலுக்கு பிடிக்காத அந்த 3 விஷயங்கள் என்ன தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Do you know Kamal doesnt like which 3 thingsஉலகநாயகன் கமல், முதன்முறையாக பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகிறார்.

தற்போது இதற்கான போட்டோ சூட் உள்ளிட்டவைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தின் முன்னணி பிஆர்ஓ ஆன நிகில் முருகன் அவர்கள் கமலுடன் பணியாற்றிய அனுபவங்களை தன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது…

கமல் அவர்களுக்கு மூன்று விஷயங்கள் பிடிக்காது. அவை

  1. என்னால் முடியாது
  2. இது ரொம்ப கஷ்டம்
  3. இதற்கு ரொம்ப செலவு ஆகும் என்பவைதான்.

அவரிடம் இதை யாரும் சொல்லக்கூடாது.

நாம் முயன்று செய்யமுடியாமல் தோற்றால் சரி. ஆனால் எந்தவொரு விஷயத்தையும் செய்வதற்கு முன்பு இப்படி கூறினால் அவருக்கு பிடிக்காது என்று தெரிவித்துள்ளார்.

Do you know which 3 things Kamal doesnt likes?

தனுஷுக்காக புரொமோ சாங் பணியில் சௌந்தர்யா ரஜினி

தனுஷுக்காக புரொமோ சாங் பணியில் சௌந்தர்யா ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush soundarya Rajini and kajol vip 2கலைப்புலி தாணு உடன் இணைந்து தனுஷ் தயாரித்து நடித்துள்ள படம் வேலையில்லா பட்டதாரி 2.

சௌந்தர்யா ரஜினி இயக்கியுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை கஜோல், அமலாபால், சமுத்திரக்கனி, விவேக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சீன்ரோல்டான் இசையமைத்துள்ள இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இதனை தனுஷ் பிறந்தநாளான ஜீலையில் 28இல் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் விளம்பரத்திற்காக ஒரு புரொமோசன் பாடல் ஒன்றை மும்பையில் படமாக்கவிருக்கிறார்களாம்.

அதில் தனுஷ் மற்றும் கஜோல் ஆட, டியோ பாஸ்கோ நடன அமைக்கிறார்.

Soundarya Rajini making promo song for Dhanushs VIP2

More Articles
Follows