தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
‘ஏகன்’, ‘பில்லா’, ‘ஆரம்பம்’ ஆகிய படங்களை தொடர்ந்து அஜித்துடன் நான்காவது முறையாக நயன்தாரா இந்தப் படத்தில் இணைந்துள்ளார்.
100 படங்களை முடித்துவிட்ட இமான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
இதன் முதல்கட்டப் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது.
இப்படத்தில் அஜித்துக்கு இரண்டு வேடம் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.
இந்நிலையில் அப்பா வேடத்தில் நடிக்கும் அஜித்துக்கு ஜோடியாக காலா படத்தில் நடித்த ஈஸ்வரிராவ் நடிக்கக்கூடும் என சொல்லப்படுகிறது.
காலா படத்தில் ரஜினியுடன் தங்க சிலை பாடலுக்கு டூயட் பாடியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
